கானனம்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கானனம், .
பொருள்
தொகுமொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- forest
- woods
- grove
விளக்கம்
தொகு- இயற்கையாகவே நெடிந்துயர்ந்த மரங்கள், விதவிதமான செடி கொடிகள், புல், பூண்டுகள் முதலியன அடர்ந்து பசுமையாக, செழிப்பாக வளர்ந்திருக்கும் நிலப்பகுதியே கானனம் அல்லது காடுகள் எனப்படும்...கானனம், அவற்றிலுள்ள தாவர வகைகள், அங்கு வசிக்கும் விலங்குகள், பறவைகள், பாம்புகள், புழுபூச்சிகள், மற்ற உயிரினங்கள் அனைத்தும் ஒரு நாட்டின் செல்வங்கள்...ஒரு நாட்டின் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 33 விழுக்காடு காடுகளாக இருப்பின் அந்நாடு செழிப்பாக இருக்கும் என்பது ஒரு கணிப்பு...காடுகளிலிருந்து மனித இனத்திற்குப் பயன்படும் மரங்கள், காகிதம், பழங்கள் போன்ற அநேக காட்டு உற்பத்திப் பொருட்கள் கிடைப்பதோடு, அவை நல்ல மழை பெய்யவும், அவ்வாறு பெய்யும் மழைநீர் வீணாகாமல் நிலத்தடி நீராக சேமிக்கப்படவும், நாட்டின் தட்ப வெப்ப நிலையை சீராக வைத்துக்கொள்ளவும், மண்ணின் வளம் காக்கவும் இன்னும் பற்பல இயற்கையோடு இணைந்த செயல்பாடுகளுக்குப் பெரிதும் உதவுகிறது...காடுகள் அவற்றின் தன்மைகளுக்கேற்ப சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக்காடுகள், இலையுதிர் காடுகள், ஊசியிலைக் காடுகள் , மழைக்காடுகள், வெப்பமண்டலக்காடுகள் என மேலும் பல வகைப்படுத்தப்பட்டுள்ளன...வெப்பமண்டலக் காடுகள் உலகில் வாழும் 50 விழுக்காடு உயிரினங்களுக்கு வாழ்விடமாக விளங்குகின்றன...காடுகளின் பரப்பளவுக் குறைந்த நாடுகளில் மனித முயற்சியால் பல இலட்சக் கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு செயற்கையான காடுகள் தோற்றுவிக்கப்படுகின்றன...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கானனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி