கிளி ஜோசியம்

டாபு ராஜப்பா

தமிழ் தொகு

 
கிளி ஜோசியம்:
ஜோசியம் சொல்லும் கிளி

பொருள் தொகு

  • கிளி ஜோசியம், பெயர்ச்சொல்.
  1. ஒரு சோதிட முறை

விளக்கம் தொகு

  • கிளி ஜோசியம் பார்க்கப்படும் என்று தெருவோரங்களில் சிலர் அமர்ந்திருப்பர்...ஒரு கூண்டுப்பெட்டியில் நன்கு பயிற்சி அளிக்கப்பட்டு பழக்கப்படுத்தப்பட்ட ஒரு பச்சைக்கிளியை அடைத்து வைத்திருப்பர்...கூண்டிற்கு முன்னால் சீட்டுக்கட்டுகள் போன்ற பல அட்டைக்கட்டுகள் இரண்டாகப் பிரிக்கும்படியாகச் செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்...சோதிட சாத்திரத்தில் வல்லவர் என்று புகழ்படைத்த பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் அருளியது எனப்படும் தொடுகுறி சாத்திரம் என்ற சோதிட நூலின் பக்கங்கள் ஒவ்வொரு கட்டின் ஒரு புறமும், மற்றொரு பக்கத்தில் ஏதாவதொரு தெய்வத்தின் படமும் ஒட்டப்பட்டிருக்கும்...சோதிடம் பார்க்க விழைவோர், குறிப்பிட்டக் கட்டணத்தைக் கொடுத்தால், சோதிடம் பார்த்து சொல்பவர், தக்கவாறு பாடிக்கொண்டு, கூண்டைத் திறந்து கிளியை வெளியே அழைத்து, அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் கட்டுகளில் ஒன்றை சோதிடம் பார்த்துக்கொள்ள வந்தவருக்காக எடுக்கச் சொல்லுவார்...அந்தக்கிளியும் கட்டுகளைக் கலைத்துப் புரட்டி, அவற்றில் ஒன்றை தன் அலகுகளால் பற்றி அவரிடம் கொடுக்கும்...சன்மானமாக கிளிக்கு ஒரு மணி நெல் அல்லது வேறு தானியத்தைக்கொடுக்க, அதைத் தின்றுவிட்டு, அடுத்த வாடிக்கையாளர் வரும்வரை மீண்டும் கூண்டில் அடைபடும்...பிறகு கிளி எடுத்த அட்டையில்கண்ட சோதிட விடயங்கள் சோதிடம் பார்த்துக்கொள்ள வந்தவருக்குப் படித்துக்காட்டப்படும்...இதுவே கிளி ஜோசியம்...தற்காலத்தில் இப்படி சோதிடம் பார்க்கும் முறை மிகவும் குறைந்துவிட்டது..


( மொழிகள் )

சான்றுகள் ---கிளி ஜோசியம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிளி_ஜோசியம்&oldid=1909890" இலிருந்து மீள்விக்கப்பட்டது