கீழை வல்கழுகு

தமிழ் தொகு

 
கீழை வல்கழுகு:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • கீழை வல்கழுகு, பெயர்ச்சொல்.
  1. ஒரு வகைப் பருந்து

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. eastern imperial eagle

விளக்கம் தொகு

  • இஃதொரு மாமிசமுண்ணும் பெரிய உருக்கொண்ட பறவைவகை...தென்கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு, மத்திய ஆசியப்பகுதிகளில் பெருகி,வளர்கின்றன...பருவ நிலைக்குத் தக்கவாறு குடிப்பெயரும் பறவையினம்...பெண் பறவைகள், ஆண் பறவைகளைவிடச் சற்றுப் பெரியவை...தனியாக நிற்கும் ஒற்றை மரத்தின்மீதுமட்டுமே கூடு கட்டி வாழவிரும்பும்...இது தூரத்திலிருந்து தன் கூட்டைக் கண்காணிக்கவும், கூட்டிலிருக்கும்போது சுற்றுப்புறத்தை மறைப்பேதும் இல்லாதவாறு கவனிக்கவுமாகும்...இலை, சிறு கிளைகளால் அடர்த்தியாக நன்கு மறைக்கப்பட்ட மரக்கிளையையே கூடுகட்டத் தேர்வு செய்யும்...முயல், புறா போன்ற சிறு விலங்குகள், மற்றும் பறவைகளை வேட்டையாடி உண்ணும்...இப்பறவையை சுருக்கமாக Impeagle என்றும் குறிப்பிடுவர்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கீழை_வல்கழுகு&oldid=1410104" இலிருந்து மீள்விக்கப்பட்டது