குன்றிமணிச்சம்பா = செந்நிறமுடைய ஒரு சம்பா நெல் வகை.
( தங்கத்தை அளக்கப் பயன்படுத்தப்படும் ) நான்கு குன்றிமணிச்சம்பா நெல்களின் எடையுடைய ஓர் அளவு ; இரண்டு குன்றிமணி எடை = ஒரு மஞ்சாடி ( கிராம்).
குண்டுமணி: காட்டுச் செடி ஒன்றின் விதையைக் குண்டுமணி என்கிறோம். பெருமளவு சிவப்பும், கொஞ்சம் கறுப்பும் உடையது அது. "ஒரு குண்டுமணி' தங்கம் கூட வீட்டில் இல்லை என்பார்கள்.
பொன் அளவையில் குண்டுமணியை எடை கணக்கிடப் பயன்படுத்தியதுண்டு. குண்டு மணி என்று உடல் மிகக் குண்டாக இருக்கும் ஒரு நடிகருக்குப் பெயருண்டு. முன் சொன்ன குண்டு மணி என்ற சொல் சரியானதா? இல்லை. அதன் பெயர் குன்றிமணி.
திருக்குறளில் பல இடங்களில் குன்றியெனும் சொல் குன்றி மணியைச் சுட்டுவதாக வந்துள்ளது. "புறங்குன்றி கண்டனையரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து' என்பது ஒரு குறள். குன்றிமணியின் சிகப்பைப் போல் வெளித் தோற்றத்தில் செம்மையுடையவராகவும், அகத்தில் (மனத்தில்) குன்றி மணி மூக்கைப்போல் கரியர் (கறுப்பு எண்ணம் உடையவர்) ஆகவும் இருப்பவர் (போலித் துறவியர்) உலகில் உளர் என்பது இக்குறட் கருத்து. (கவிக்கோ ஞானச்செல்வன், மொழிப் பயிற்சி: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, தினமணிக்கதிர், 27 பிப் 2011)