கும்பிடு
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
தொகுஇரு கைகளைக் குவித்து வணங்கும்போது மூன்று வித முறைகளைப் பின்பற்றவேண்டுமென்பது பண்டைய விதி. அவை
- தனக்குச் சமானமானவர்களை வணங்கும்போது தன் மார்பின் மேல் கூப்பிய இரு கைகளையும் வைத்துக்கொள்ளவேண்டும்.
- பெரியவர்களையும்,தனக்கு மேலானவர்களையும் வணங்கும்போது தன் முகத்தின் மேல் கூப்பிய இரு கைகளையும் வைத்துக்கொள்ள வேண்டும்.
- இறைவனை வழிபடும்பொது தன் தலைக்கு மேல் கூப்பிய இரு கைகளையும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதாம்.