கடவுள் விநாயகர் (பிள்ளையார்) திருமணம் ஆகாதவர் என்றும், திருமணம் ஆனவர் என்றும் இரு கொள்கைகள் இந்துக்களிடையே உண்டு...பழைய நாட்களில் கிராமப்புறங்களில் பெண்கள் குளங்களுக்கும், ஆற்றங்கரைகளுக்கும் சென்று குளித்து வந்தனர்...அந்த இடங்களிலெல்லாம் பிள்ளையார் சிலைகளை மரங்களின் கீழோ அல்லது சிறு கட்டிடங்களிலோ அமைத்திருப்பர்...தனக்கு ஏற்றப் பெண்களைத் தேடிக்கொண்டிருக்கிறார் என்று சொல்லுவர்கள்...
மற்றொரு கோணத்தில் விநாயகர் மக்கள் கோரிய கோரிக்கைகளை சித்திக்க அதாவது வெற்றிகரமாக நிறைவேற வைப்பவர் என்றும், நல்ல புத்தியைக் கொடுப்பவரென்றும் எல்லாரும் கொண்டாடுவர்...இந்த சித்தியையும் புத்தியையும் பெண்களாகக் கருதி இவை விநாயகரின் மனைவியர் என்றுக் கூறுவர்...இப்படித்தன் மனைவிகளான சித்தியோடும் புத்தியோடும் சேர்ந்து காட்சி தரும் விநாயகப் பெருமானே சித்தி புத்தி விநாயகர் ஆவார்...