புத்தாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு
சி 101.2.189.211 (பேச்சு) செய்தத் தொகுப்புகள் நீக்கப்பட்டு Info-farmer இன் பதிப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
வரிசை 9:
=== விளக்கம் ===
# இருக்கும் ஒன்றை மேம்படுத்துதல் புத்தாக்கம் என அழைக்கலாகாது
 
 
=== பொது பண்புகள் ===
 
 
புத்தாக்கம் படிமலர்வாகவோ புரட்சிகரமாகவோ அமையலாம்.[1][2] புத்தாக்கத்தை, புதிதாக எழும் தேவைகளை எதிர்கொள்ளவல்ல புதிய தீர்வைப் பயன்படுத்திக்கொள்வதாகவும் வரையறுக்கலாம். இந்தத் தேவைகள் புதிய சந்தை அல்லது சூழல் மாற்றத் தேவைகளாகவோ அமையலாம்.[3] இத்தகைய புத்தாக்கங்கள் மேலும் விளைவுமிக்க பொருள்களாகவோ வழிமுறைகளாகவோ செயல்முறைகளாகவோ சேவைகளாகவோ தொழில்நுட்பங்களாகவோ வணிக முறைமைகளாகவோ அரசு, சமூக மாற்றமாகவோ அமையலாம். புத்தாக்கம் என்பது முன்னோடியானதும் விளைவுமிக்கதும் எனவே புதியது; சமூகத்திலும் சந்தையிலும் ஊடுருவிப் பரவ வல்லது.[4] புத்தாக்கம் புதுமைபுனைவோடு தொடர்புடையது என்றாலும் அதை ஒத்த தன்று;[5] புத்தாக்கம் ஓர் இயற்றுதலை அல்லது புதுமைபுனைவைச் சமூகத்திலும் சந்தையிலும் தாக்கம் செலுத்தவல்ல நடைமுறைபடுத்தலாகவும் அமையலாம்y),[6] ஆனால் எல்லா புத்தாக்கத்துக்கும் புதுமைபுனைவு தேவையில்லை. புத்தாக்கம் காணவேண்டிய தீர்வு அறிவியல் அல்லது தொழில்நுட்பத் தன்மையதாக இருந்தால், பொறியியல் செயல்முறைகள் ஊடாக நிறைவேற்றப்படும். புத்தாக்கத்தின் எதிர்சொல் வழக்கொழிதலாகும் (exnovation).
 
 
புத்தாக்கத்தை, கண்டுபிடிப்பில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவர். புதுமைபுனைதல் (இயற்றுதல்) என்பது முதன் முதலாக ஒன்றைப் பற்றிய எண்ணக்கரு (idea) அல்லது கோட்பாட்டு உருவாக்கம் ஆகும். புத்தாக்கம் என்பது அமைப்பு அல்லது முறை ஒன்றைப் புதிதாக வடிவமைத்து உருவாக்கி நடைமுறைப்படுத்துவதைக் குறிக்கும். கண்டுபிடிப்பு என்பது இயற்கையில் ஏற்கெனவே உள்ள ஒன்றைக் (எ.கா ஒரு புதிய வகை உயிரினம்அல்லது கோள் அல்லது பால்வெளி போன்றவற்றைக்) கண்டு அறிதலைக் குறிக்கும்.
 
பொருளியல், மேலாண்மையியலோடு, பிற புலங்களின் நடைமுறையிலும் பகுப்பாய்விலும் புதிய கருவியொன்று புத்தாக்கமாகக் கருதப்பட்டாலும், புத்தாக்கம் என்பது சமூகத்தை மாற்றியமைக்கும் வகையில் பல்வேறு புதிய எண்ணக்கருக்களை ஒருங்கிணைக்கும் செயல்முறையின் விளைவாகும். தொழிலகப் பொறியியலில், வளரும் நுகர்வாளர் தேவையைச் சந்திக்கவல்ல சேவைகள் ஊடாக புத்தாக்கம் உருவாக்கி நடைமுறைபடுத்தப்படுகிறது. [7][8][9]
 
புத்தாக்கத்துக்கு முற்றிலும் வேறுபட்ட பழைய பொருளொன்று உண்டு. அமெரிக்க குடியேற்றத்துக்கு முன்பு, அதாவது 1400 களில் இருந்து 1600 கள் வரை, இக்கருத்துப்படிமம் இழிவானதாக அமைந்தது. முன்னைப் புத்தியற் காலத்தில் இது கலகம், கிளர்ச்சி, என்ற பொருளில் வழங்கியது.[10][11][12][13]
 
==மொழிபெயர்ப்புகள்==
"https://ta.wiktionary.org/wiki/புத்தாக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது