சொக்குப்பொடி


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சொக்குப்பொடி, பெயர்ச்சொல்.

  1. வசியமருந்து, மயக்கும் மருந்து
  2. ஒருவரைக் கவரும் செயல் அல்லது திறமை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. enchantment potion
  2. convincing ability/trick
விளக்கம்
  • சொக்க வைக்கும் பொடி = சொக்குப்பொடி. பண்டைய மந்திர தந்திர ஜால வித்தைகளில் சொக்குப்பொடி தயாரிப்பும் ஒன்று. பல விதமான மூலிகைகளைக்கொண்டு குறிப்பிட்ட முறையில் பொடித்துத் தயாரிக்கப்படும் இந்தப் பொடியை ஒருவர் யார் முகத்திலாவது தூவி விட்டால், அதை சுவாசித்தவர் அந்தப் பொடியை தூவியவருக்கு அடிமையாகி அவரிடம் சொக்கி, மயங்கி அவர் சொன்னதையெல்லாம் கேட்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
  • தற்காலத்தில் ஒருவர் மற்றொருவர் சொல்லுவதையெல்லாம் ஒரு யோசனையும் இல்லாமல் அப்படியே பின்பற்றி எல்லாவற்றிற்கும் தலையாட்டிக்கொண்டிருந்தால், அந்த மற்றொருவர் அந்த ஒருவருக்கு சொக்குப் பொடி தூவிவிட்டார் என்பார்கள்.
பயன்பாடு
  • ...சுந்தரம் தன் நண்பருக்கு என்ன சொக்குப்பொடி போட்டாரோ என்னவோ,கேட்டபோதெல்லாம் பணம் நண்பரிடமிருந்து வந்துக் கொண்டே இருக்கிறது.வட்டியுமில்லை. எப்போது திரும்பக்கொடுப்பார் என்று நிச்சயமுமில்லை.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...( மொழிகள் )

சான்றுகள் ---சொக்குப்பொடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சொக்குப்பொடி&oldid=1138686" இலிருந்து மீள்விக்கப்பட்டது