தாமரைக்கண்ணன்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தாமரைக்கண்ணன், .

பொருள்

தொகு
  1. திருமால்
  2. ஆழியான்
  3. முகில் வண்ணன்
  4. மணிவண்ணன்
  5. கமலக்கண்ணன்


மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. god mahavishnu,as having red-coloured eyes, a hindu deity for protection.


விளக்கம்

தொகு

இறைவன் திருமாலுக்கு ஆயிரத்திற்குமேல் திருப்பெயர்களுள்ளன...'ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்' என்னும் துதிப்பாடல் அவைகளைத் தெரிவிக்கிறது...அவைகளெல்லாம் வடமொழிப் பெயர்களாயிருந்தாலும் தமிழிலும் அவருக்கு அநேகப் பெயர்களுண்டு...அவைகளில் ஒன்று 'தாமரைக்கண்ணன்'...தாமரைப்பூவின் வண்ணம் செந்நிறம்...இந்த மலரைப்போலவே திருமாலின் கண்களின் நிறமும் செந்நிறமானதால் திருமால் தாமரைக்கண்ணன் எனப்படுகிறார். தாமரையை கமலம் என்றும் சொல்வார்களாதலால் இவர் கமலக்கண்ணன் என்றும் போற்றப்படுகிறார்.

இலக்கியம்

தொகு

பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்.
அச்சுதா! அமரேறே! ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.

-தொண்டரடிப்பொடியாழ்வார்


( மொழிகள் )

சான்றுகள் ---தாமரைக்கண்ணன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாமரைக்கண்ணன்&oldid=1997055" இலிருந்து மீள்விக்கப்பட்டது