துபாசி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
துபாசி(பெ)
விளக்கம்
- ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களுடைய படையிலும் நாட்டு நிருவாகத்திலும் பெரிய அலுவல்களில் ஆங்கிலேயர்களே பணி புரிந்தனர்...அவர்களுக்கு உள்ளூர் மொழிகள் தெரியாது...அதனால் பொதுமக்களோடும் மற்றும் நாட்டை ஆங்காங்கே ஆண்டுக்கொண்டிருந்த மன்னர்கள்/குறுநில மன்னர்களோடும் பல விடயங்களில் நேரிடையாகப் பேச வேண்டிய சந்தர்ப்பங்களில் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாயினர்...ஆகவே உள்ளூர் மொழியும் ஆங்கிலமும் தெரிந்த நபர்களை மொழிப்பெயர்ப்பாளர்களாக நியமித்துக்கொண்டனர்...இவர்கள் ஆங்கிலேயர்களுக்கும் இந்தியர்களுக்குமிடையே நடக்கும் பேச்சுவார்த்தைகளை ஒருவர் பேசியதை மற்றவருக்கு மொழிப்பெயர்த்துச் சொல்ல பணிக்கப்பட்டனர்...இவர்களே துபாசி ஆவர்...வடமொழி மூலச்சொற்கள் த்வி=இரண்டு+பாஷி=மொழி அறிந்தவர்=த்விபாஷி=துபாசி.
- இந்தி மொழியின் தோ பாஷா (இரு மொழிகள்) என்ற சொற்களிலிருந்து உருவான சொல். துபாஷ், துபாஷி என்றும் வழங்கப்படுகிறது
மொழிபெயர்ப்புகள்