திராவிட வேதம் என்றுப் போற்றப்படும், வைணவக் குரவர்களான ஆழ்வார்களால் அருளப்பட்ட, நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் புனிதமான நூலுக்கு தென்மறை என்றொரு வழங்குப்பெயர் உள்ளது...வடமொழி எனப்படும் சமசுகிருதத்தில் உள்ள நான்கு மறைகளான ருக், யஜுர், சாம, அதர்வண வேதங்களுக்குச் சரிசமானமானப் பெருமையும், புனிதத்தன்மையும் கொண்டு, தென்மொழியான தமிழில் இருக்கும் இந்த நூல் தென்மறை எனப்படுகிறது...