தேங்காயெண்ணெய்

தென்னை மரம்
தேங்காய் கொப்பரைகள்
கட்டிய தேங்காயெண்ணெய்
உடைபட்ட தேங்காய்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

cocos nucifera--oil...(தாவரவியல் பெயர்)

தேங்காயெண்ணெய், .

பொருள்

தொகு

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. coconut oil

விளக்கம்

தொகு
  • தேங்காய் + எண்ணெய் = தேங்காயெண்ணெய்...நன்கு முற்றிய தேங்காய்களை வெய்யிலில் உலரவைத்து, ஓடு நீக்கி, கொப்பரையாக்கி பின்னர் அவைகளிலிருந்து பிழிந்து எடுக்கப்படும் எண்ணெய்...

மருத்துவ குணங்கள்

தொகு
  • தேங்காயெண்ணெய் என்னும் தேங்காயின் நெய்யினால் சத்தியோவிரணம், தந்தமூலரோகம், படர்த்தாமரை, சிரங்கு ஆகியவன போகும்...மயிர் வளரும்...

உபயோகிக்கும் முறை

தொகு
  • இந்த எண்ணெயைக் கூந்தலுக்குத் தடவிவரச் செழிப்பாக வளரும்...இதை சுண்ணாம்பு நீருடன் கூட்டி விரலால் சிறிது நேரம் அடிக்க நெய்போல் கட்டி உரையும்...அதை நெருப்புப்பட்ட விரணங்களுக்குத் தடவிவர விரைவில் ஆறும்...இதனை விரணங்களுக்காகச் செய்யப்படுகின்ற பலவித களிம்புகளிலும் எண்ணெய்களிலும் சேர்ப்பர்...மற்ற சரக்குகளுடன் கூட்டி கூந்தலைப் பராமரிக்க தைலங்களைக் காய்ச்சி உபயோகிப்பர்...மேலும் சில பிரதேசங்களில் சமையலிலும் பெரிதும் பயன்படுத்துவர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=தேங்காயெண்ணெய்&oldid=1885525" இலிருந்து மீள்விக்கப்பட்டது