Aadhavan Dheetchanya1964
Joined 18 மார்ச்சு 2024
ஆதவன் தீட்சண்யா, எழுத்தாளர்
தொகு1964 மார்ச் 6 ஆம் நாள் எம்.என்.இரத்தினம்மாள் - எஸ்.கே.மாரியப்பன் இணையரின் மூத்த மகனாக பிறந்த இவரது இயற்பெயர் எஸ்.எம்.இரவிச்சந்தர். சாமியாபுரம் கூட்டுரோடு ஆரம்பப்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, தருமபுரி அரசு கலைக்கல்லூரி ஆகியவற்றில் பயின்ற இவர் கல்லூரிப்படிப்பை நிறைவுசெய்யாமல் 1984ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் தொலைத்தொடர்புத் துறையில் பணியில் சேர்ந்தார். தொடக்கத்தில் தேன்கனிக்கோட்டையிலும் 1986 முதல் 2020 வரை ஒசூரிலும் பணியாற்றிய இவரது தற்போதைய வசிப்பிடம் அரூர்.
வெளியான நூல்கள்:
தொகுகவிதைத்தொகுப்புகள்
தொகு- புறத்திருந்து
(1996 / தமுஎகச ஓசூர் கிளை)
- பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம்
(2003 / சந்தியா பதிப்பகம்)
- தந்துகி
(2005 / சந்தியா பதிப்பகம்)
- ஆதவன் தீட்சண்யா கவிதைகள்
(2011 / சந்தியா பதிப்பகம்)
- மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள்
(2016 / சந்தியா பதிப்பகம்)
சிறுகதைத்தொகுப்புகள்
தொகு- எழுதவேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள்
(2003 /சந்தியா பதிப்பகம்)
- இரவாகிவிடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை
(2007 / சந்தியா பதிப்பகம்)
- ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள்
(2008 / சந்தியா பதிப்பகம்)
- சொல்லவே முடியாத கதைகளின் கதை
(2010 / பாரதி புத்தகாலயம்)
- லிபரல்பாளையத்துக் கதைகள்
(2012 / பூபாளம் புத்தகப்பண்ணை & 2022/ நீலம்)
- நீங்கள் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள்
(2016 / சந்தியா பதிப்பகம்)
- கடுங்காலத்தின் கதைகள்
(2020 / கருப்புபிரதிகள்)
புதினங்கள்
தொகு- மீசை என்பது வெறும் மயிர்
(2014 /சந்தியா பதிப்பகம்)
கட்டுரைத்தொகுப்புகள்
தொகு- இட ஒதுக்கீடல்ல, மறு பங்கீடு
(2006 / வாசல் பதிப்பகம்)
- ஆகாயத்தில் எறிந்த கல்
(2011 / வாசல் பதிப்பகம்)
- இதுவொன்னும் பழைய விசயம் இல்லீங் சாமீ
(2014 / மலைகள்)
- ஒசூர் எனப்படுவது யாதெனின்
(2014 / மலைகள் பதிப்பகம் & 2019/ சந்தியா பதிப்பகம்
- கடவுளுக்கு முன்பிருந்தே உலகம் இருக்கிறது
(2016 / நூல்வனம்)
- எஞ்சிய சொல்
(2017/ சந்தியா பதிப்பகம்)
- தூர்ந்த மனங்களைத் தோண்டும் வேலை
(2019 / வெற்றிமொழி வெளியீட்டகம்)
நேர்காணல்கள்
தொகு- நான் ஒரு மநுவிரோதி
(2007 / பூபாளம் புத்தகப்பண்ணை & 2017 சந்தியா பதிப்பகம்)
திரைத்துறையில்
தொகு- காலா
- இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு