என்னைப் பற்றிச் சில வார்த்தைகள் :

தமிழகத்தின் தொண்டை மண்டலத்தில் உள்ள புதுக்கோட்டையில் பிறப்பு.

இயற்பெயர் - அ.நட. செயச்சந்திரன் B.Sc., A.M.I.E.R.E.(LOND).,M.B.A. C.A.(Lond)., ICWA(Lond).,

தந்தை - திரு.அ.நடராசன். B.A (Hons). ஓய்வுபெற்ற மாவட்டத் தண்டல் நாயகம் (District Collector) தாய் - திருமதி.சீதை அம்மாள்

எளிமையான வாழ்க்கையிலும், சைவத்தைத் தந்தையூட்ட, திருச்சி சமால் முகமது கல்லூரியில் இளங்கலைப் பட்டம் (பவுதீகம்) பெற்று, ஆசிரியராக 2 ஆண்டுகள் கழிந்தன. பின்னர் State Bank of India ல் எழுத்தராகச் சேர்ந்து, படிப்படியாக முதுநிலை மேலாளராகப் பதவி உயர்ந்து 2001ம் ஆண்டு ஓய்வு.

1960லேயே ஆன்மீகத் தேட்டம் மிகுந்து, தேடுதல் வேட்டையில் ஈடுபாடு. பல பொய்க் குரு பிரான்களிடம் ஏமாந்து 1966ல் ஞானகுரு கிட்டி, ஞானவினைச் செயலாரம்பம்.

விருப்பம் - பல வழக்கிழந்த நூல்களில் சிறிதேனும் வழக்கிற்கு கொண்டுவந்து இளைய தலைமுறைக்குத் தரவேண்டும்.

ஞானவெட்டியான்

திண்டுக்கல்(தமிழகம்)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:Njaanam&oldid=626655" இலிருந்து மீள்விக்கப்பட்டது