Selvam Karma astrologer
சதாசிவ நட்சத்திரங்கள்
ரோகிணி அஸ்தம் திருவோணம் பூசம் அனுஷம் உத்திரட்டாதி உத்திரம் உத்திராடம் ரேவதி இந்த ஒன்பது நட்சத்திரங்கள் ஜோதிட மூல நூல்களில் குமராசாமியம் ஜோதிட சொல் அகராதி நட்சத்திர சிந்தாமணி போன்ற ஜோதிட மூல நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது
இந்த ஒன்பது நட்சத்திரங்களை சதாசிவ நட்சத்திரங்கள் என்று குறிப்பிடுகிறார்கள் சதாசிவ என்றால் சதாகாலமும் இயங்கிக் கொண்டிருக்கும் அல்லது எப்பொழுதும் உயிர்த்து இருக்கும் என்பது பொருள் சதாசிவ என்பது சதாசிவனுடைய அம்சமாக கருதப்படுகிறது இந்த சதாசிவ நட்சத்திரங்களில் கிரகங்கள் சஞ்சரிக்கும் பொழுது அவருடைய இயக்கங்கள் எப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்கும் என்று எடுத்துக் கொள்ளலாம் இந்த ஒன்பது நட்சத்திரங்களும் ராசி மண்டலத்தில் ரிஷபம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம்மற்றும் மீனம் இந்த ஒன்பது நட்சத்திரங்களும் இந்த ஒன்பது ராசி மண்டலங்களை அலங்கரிக்கிறது
இந்த ஒன்பது நட்சத்திரங்களும் இந்த ஒன்பது ராசி மண்டலங்களில் பரவி இருக்கிறது
ராசி மண்டலங்கள் மொத்தம் 12 என்பது அனைவருக்கும் தெரிந்தது மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகள்
இந்த 12 ராசிகளில் 9 ராசிகளை இந்த ஒன்பது நட்சத்திரங்கள் எப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்கும் நட்சத்திரங்களாக அமைந்திருக்கிறது
12 ராசிகளில் இந்த ஒன்பது நட்சத்திரங்களான சதாசிவ நட்சத்திரங்கள் இருக்கும் ஒன்பது ராசிகள் எப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்கும் அமைப்பை பெறுகிறது
சதாசிவ நட்சத்திரங்களான ரோகிணி ஹஸ்தம் திருவோணம் சந்திரனுடைய நட்சத்திரம் சந்திரன் நம்முடைய மனதிற்கும் உடலுக்கும் காரகம் வகிக்கிறார்
இது நம்முடைய மனம் எப்பொழுதும் அழைப்பாய்ந்து கொண்டே இருக்கிறது ஏதோ ஒன்றை யோசித்துக் கொண்டே இருக்கிறது என்பதை உணர்த்துகிறது
சந்திரன் உணவுக்கு காரகன் நாம் எப்பொழுதும் உணவு உண்பது இன்றியமையாததாக இருக்கிறது
இந்த ரோகினி அஸ்தம் திருவோணம் என்ற மூன்று நட்சத்திரங்கள் சதாசிவ நட்சத்திரங்களாக குறிப்பிடப்பட்டு ஒரு மனிதனுக்கு எண்ணமும் உணவும் இன்றியமையாதது என்பதை உணர்த்துவதாக உள்ளது
அடுத்ததாக பூசம் அனுஷம் உத்திரட்டாதி இது சனியினுடைய ஆதிக்கத்திற்கு உட்பட்ட நட்சத்திரம்
சனி பகவான் நம்முடைய தர்மத்திற்கு காரகன் தொழிலுக்கு காரகன் ஜீவனத்திற்கு காரகன் ஒரு மனிதன் இயங்க வேண்டும் என்றால் சனி பகவான் நன்றாக இருக்க வேண்டும் இயங்க வேண்டும்
ஆகவே தான் இந்த சனி பகவானுடைய மூன்று நட்சத்திரங்களான பூசம் அனுஷம் உத்திரட்டாதி இந்த நட்சத்திரங்கள் சதாசிவ நட்சத்திரங்களின் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது
ஒரு மனிதன் பிறப்பெடுப்பதற்கும் அவன் கருமங்கள் செய்வதற்கும் சனிபகவானை காரண கர்த்தாவாக இருக்கிறார் ஆகவே இவருடைய இந்த மூன்று நட்சத்திரங்களும் இருக்கும் ராசிகளும் இயங்கிக் கொண்டே இருக்கும் வரை தான் இந்த மனிதன் இயங்கிக் கொண்டிருக்க முடியும்
சனிபகவான் ஆயுளுக்கு காரகன் ஆகவே இவை இயங்காவிட்டால் மனிதனுக்கு மறைவு தான்
அடுத்ததாக உத்திரம் உத்திராடம் இந்த நட்சத்திரங்கள் சூரியனுடைய ஆதிக்கம் பெற்றது சூரிய பகவான் நம்முடைய உயிருக்கும் ஆன்மாவிற்கும் காரகன் இந்த பிரபஞ்சத்திற்கு காரகன் சூரியன் இல்லாவிட்டால் இந்த உலகம் இல்லை உயிர்கள் இல்லை எந்த ஜீவராசிகளும் இல்லை
சூரியன் எப்பொழுதும் ஒளி வீசிக்கொண்டு தான் இருக்கிறார் ஒருநாள் கூட அயர்ந்து ஓய்வெடுப்பது கிடையாது ஆகவே அவருடைய உத்திரம் மற்றும் உத்திராடம் நட்சத்திரம் சிம்மம் கன்னி ராசியிலும் தனுசு மற்றும் மகர ராசியிலும் பரவியிருந்து உயிர்கள் உருவாவதற்கும் உயிர்கள் வளர்வதற்கும் காரண கர்த்தாவாக அமைந்திருக்கிறது
இந்த நட்சத்திரங்கள் இயங்காவிட்டால் உயிர்கள் தோன்றாது உலகம் தோன்றாது உலகத்தில் ஜீவராசிகள் ஜலித்திருக்க முடியாது
இறுதியாக ரேவதி நட்சத்திரம் இது புதனுடையது ரேவதி நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் இறுதியாக இடம்பெற்றுள்ள நட்சத்திரம் இது மீன ராசியில் கடைசி நட்சத்திரமாக இருக்கின்றது
மீன ராசி மோட்சத்தை குறிக்கக்கூடிய ராசி ஆகவே தான் மீன ராசியில் இந்த ரேவதி நட்சத்திரம் அமைந்திருக்கிறது அதோடு மட்டுமல்லாமல் இந்த நட்சத்திரம் புதனுடைய நட்சத்திரம் புதன் பகவான் மீன ராசியில் நீச்சம் அடைவார்
இது குறிப்பிடும் சூட்சுமம் என்னவென்றால் புதன் பகவான் என்பவர் நம்முடைய ஞாபக சக்திக்கும் நம்முடைய அறிவுக்கு மூளைக்கும் மூளையில் உள்ள நரம்புகளுக்கும் நியூரான் சிஸ்டத்திற்கும் கடவுள் இந்தப் பூவுலகில் ஒரு உயிர் ஜனித்து வாழ்ந்து இறுதியில் மரணிக்கும் பொழுது அவனுடைய அத்துணை ஞாபகங்களும் அளிக்கப்பட்டு அடுத்த பிறவிக்கு நகர்த்தப்படுவதற்கு ஒரு காரணமாகவே இந்த ரேவதி நட்சத்திரம் மீன ராசியில் அமர்ந்திருப்பதும் புதன் மீன ராசியில் நீச்சம் அடைவதற்குமான காரணம்
அடுத்த பிறவி எடுக்கும் பொழுது இவருக்கு முன் ஜென்ம ஞாபகங்கள் இருக்கக் கூடாது என்பதற்காகவே ரேவதி நட்சத்திரம் மீன ராசியில் அமைந்து இருக்கிறது
வாசகர்களுக்கும் இந்த பதிவை படித்தவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்
இந்த சதாசிவ நட்சத்திரங்கள் பற்றிய என்னுடைய ஆய்வு கட்டுரையை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் கருத்துக்களை பதிவிடவும் மேலும் இது போன்ற ஜோதிடம் சம்பந்தமான கட்டுரைகளை படிப்பதற்கு என்னுடைய இந்த பக்கத்தை பின் தொடரவும் மேலும் ஏதேனும் உங்களுக்கு ஜோதிடம் சம்பந்தமான தகவல் அல்லது ஜோதிடம் பார்க்க வேண்டும் என்றால் கீழே உள்ள எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் செல்வம் கர்மா ஜோதிடர் மற்றும் ஆராய்ச்சியாளர் 8838286872