Shahjahan
என் பெயர் ஷாஜஹான். பதிப்பு மற்றும் அச்சுத் துறையில் பணியாற்றிய அனுபவம் உண்டு. பதினைந்து ஆண்டுகளாக குடும்பத்துடன் - மனைவி, 2 மகள்கள் - தில்லியில் வசிக்கிறேன். தில்லித் தமிழ்ச் சங்கத்தில் சுமார் பத்தாண்டுகள் இயன்ற பங்களிப்பை செலுத்தியிருக்கிறேன். தற்போது சங்கத்தில் மீண்டும் தலையெடுத்துள்ள பின்னடைவுப் போக்குகள் காரணமாக சற்றே ஒதுங்கியிருக்கிறேன். பத்திரிகை நிருபராக சில காலம் பணியாற்றினேன். தலைநகரத் தமிழோசை என்ற மாத இதழை தில்லியிலிருந்து நடத்தி, பதினைந்து இதழ்களுக்குப் பிறகு நிறுத்தி விட்டேன். தமிழில் புத்தக வடிவமைப்பு, தட்டச்சு, மொழியாக்கம் ஆகிய பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறேன். பதிப்பாசிரியராகவும், மொழிபெயர்ப்பிலும் சில நூல்களை வெளிக் கொணர்ந்திருக்கிறேன். நேஷனல் புக் டிரஸ்ட், சாகித்ய அதாதமி, ரூபா அண்ட் கோ, மாக்மில்லன் மற்றும் சில பதிப்பகங்களுக்கு நூல்களை கதிர்அச்சுக் கோப்பு செய்து தரும் பணி ஆற்றி வருகிறேன். தலைநகரில் மொழியாக்க சேவைத் துறையில் தனிமுத்திரை பதித்திருக்கிறேன் என்பதை (அடக்கத்துடன்) கூறிக்கொள்கிறேன். நூல்கள் படிப்பதில் அளவற்ற ஆர்வம். புதியவன் என்ற புனைபெயரில் எழுதுவதும் உண்டு. இணையத் தமிழில் ஆர்வம் உண்டு. நல்ல நண்பர்கள் வட்டம் உண்டு. ஒத்த சிந்தனைத் தோழர்களை நாடுகிறேன். இயன்ற அளவுக்கு என் பங்களிப்பைத் தரும் நோக்கம் உண்டு. முகவரி R. Shahjahan Flat No. 4 Subhram Complex D-96 Munirka New Delhi - 110067 Phone: 26194291