"fossil" என்பதன் தமிழாக்கம் என்ன--நிரோஜன் சக்திவேல் 16:41, 11 ஆகஸ்ட் 2006 (UTC)


விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

நிரோ, fossil என்பதற்கான தமிழாக்கத்தை fossil பக்கத்தில் சேர்த்திருக்கிறேன். நீங்கள் பொருள் அறிய விரும்பும் சொற்களை இங்கு சேருங்கள். தளத்தை பயன்படுத்துவது குறித்த ஐயங்களை ஒத்தாசை பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் பொருள் அறிய விரும்பியதும் சரியான தளத்திற்கு வந்து அதைக் கேட்டதில் மகிழ்ச்சி. இது போன்ற விழிப்புணர்வு வருங்காலத்தில் விக்சனரியின் பயன்பாட்டை அதிகரிக்கும் என்று நம்புகிறேன். விக்கிபீடியாவில் சொற்பொருள் குறித்த உரையாடல்களை இங்கு செய்யலாம். --ரவி 18:17, 11 ஆகஸ்ட் 2006 (UTC)


நிரோ, தமிழ் விக்சனரி மிகவும் தொடக்க நிலையிலேயே உள்ளது. அதனால் பல சொற்களுக்கு பொருள் காண இயலாமல் இருக்கலாம். எனினும், தற்பொழுது முனைப்புடன் பல சொற்களை சேர்த்து வருகிறோம். நீங்களும் சொற்களை சேர்க்க மேலே காணப்படும் புதிய சொற்களை சேர்க்கவும் என்ற இணைப்பை பின்பற்றவும். இன்னும் ஓர் ஆண்டுக்குள் பயனுடைய அகரமுதலியாக இதை வளர்த்து விடலாம் என்பது என் நம்பிக்கை. பார்க்கலாம். நீங்கள் பொருள் அறிய விரும்பும் சொற்களை விக்சனரி:கோரப்பட்ட சொற்கள் பக்கத்தில் சேருங்கள். தளத்தை பயன்படுத்துவது குறித்த ஐயங்களை மட்டும் ஒத்தாசை பக்கத்தில் கேளுங்கள். enigma என்பதற்கான தமிழ்ச் சொல் எனக்குப் புரிபடவில்லை. video game என்பதை நிகழ்பட விளையாட்டு என்று சொல்லலாம். எனினும் இது புழக்கத்தில் உள்ள சொல் இல்லை--ரவி 11:08, 14 ஆகஸ்ட் 2006 (UTC)

தமிழ் விக்சனரியில் சேர்க்கக் கோரும் சொற்கள் தொகு

இவற்றில் **** குறியீடுகள் உள்ளவை தமிழ் ஆங்கில டிக்சனரியில் பார்த்து அறிந்தேன்.

  • hard drive - உள்தாங்கி
  • memory cards - நினைவு தாங்கி அட்டை
  • system- முறை
  • tools - கருவி
  • operating - இயங்கு
  • dual-இரட்டை வேடங்கள்
  • Prophecy-யோஸியம்,குறி சொல்லல்****

வருக மாமன்னா தொகு

வருக மாமன்னா :) இந்த உதவிப் பக்கம் உங்களுக்கு உதவியாக இருக்கும். உரிச்சொல் என்றால் adjective / adverb இரண்டுக்கும் பொருந்தும். கொஞ்ச காலத்துக்கு ஓரிரு சொற்களாக உள்ளிடுங்கள். விக்சனரி format கைவரப்பெற்றதை உறுதி செய்து கொண்டு படையெடுப்பைத் தொடங்கலாம். இந்திய மொழி விக்சனரிகளில் தமிழ் தான் முதல். உலக அளவில் 32வது இடத்தில் இருக்கிறோம். இந்த வகையில் தமிழ் விக்கிபீடியாவைக் காட்டிலும் பல இடங்கள் முன்னணியில்.--ரவி 07:16, 28 ஏப்ரில் 2007 (UTC)

மன்னவா, புதிய போர்ககளத்திற்கு தங்களை வரவேற்கிறேன்.--சிவகுமார் 08:03, 29 ஏப்ரில் 2007 (UTC)

சில குறிப்புகள் தொகு

நிரோ, அகர வரிசையில் நீங்கள் சொற்களைச் சேர்க்கத் தொடங்கி இருப்பது கண்டு மகிழ்ச்சி. என்ன அகரமுதலியைப் பயன்படுத்துகிறீர்கள்? சில குறிப்புகள்:

  • கட்டுரைச் சுருக்கத்தில் தொடக்கம் என்று எழுதுவதற்குப் பதில் சொல்லின் பொருளையே அப்படியே வெட்டி ஒட்டி விடுங்கள். இது பல சொற்களின் பொருளை அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் இருந்தே கண்காணிக்க உதவும். என் தொகுப்புச் சுருக்கங்களை எடுத்துக்காட்டுக்காக நீங்கள் பார்க்கலாம்.
  • ஒத்த பொருள் சொற்களை ஒரே வரியில் ; என்ற குறி கொண்டு பிரித்துத் தாருங்கள். எடுத்துக்காட்டுக்கு, flower பக்கத்தில் பூ, மலர் என்ற ஒத்த பொருள்கள் தரப்பட்டுள்ள விதத்தையும் tank பக்கத்தில் வேறு வேறு பொருள்கள் அடுத்தடுத்த வரிகளிலும் தரப்பட்டுள்ளதைப் பாருங்கள்.
  • மொத்தச் சொற்களையும் அப்படியே உள்ளிணைப்பாகத் தராமல் பொருத்தமான வேர்ச்சொற்களுக்கு மட்டும் இணைப்பு தாருங்கள். எடுத்துக்காட்டுக்கு, [[நிலையான]] என்று தராமல் [[நிலை|நிலையான]] என்று தாருங்கள். [[உடந்தையாய் இருப்பவன்]] என்று தராமல் [[உடந்தை|உடந்தையாய்]] இருப்பவன் என்று தாருங்கள்.

--ரவி 20:22, 28 ஏப்ரில் 2007 (UTC)


விரைவில் இங்கு ஒரு படையெடுப்பு நடத்தப்படும் காத்திருங்கள்........--நிரோஜன் சக்திவேல் 18:47, 30 ஏப்ரில் 2007 (UTC)

தயவுசெய்து, படையெடுப்புக்கு முன் அவ்வப்போது ஓரிரு சொற்களாய் உள்ளிடுங்கள். தங்கள் விக்சனரி நடையை உறுதிப் படுத்திக் கொண்ட பின், படையெடுப்பைத் தொடங்கலாம். இல்லாவிட்டால், பின்னர் விக்கியாக்கம் செய்வது சிரமமாக இருக்கும். நன்றி.--ரவி 18:56, 30 ஏப்ரில் 2007 (UTC)

நிரோ, உங்கள் அண்மைய ஆக்கங்கள் நன்று. ஒரு பக்கத்தில் குறைந்தது ஒரு உள்ளிணைப்பாவது இருந்தால் தான் அதை ஒரு கட்டுரைப் பக்கமாக விக்கி மென்பொருள் கணக்கில் எடுக்கிறது. எனவே, பொருத்தமான இடங்களில் ஒரு பக்கத்துக்கு ஒரு சொல்லுக்காவது உள்ளிணைப்பு வருமாறு இயன்றளவு சொற்களைச் சேருங்கள். அதற்காக, பொருத்தமில்லா தேவையற்ற இணைப்புகளையும் நாம் வலிந்து திணிக்கப்போவதில்லை. நன்றி--ரவி 11:16, 2 மே 2007 (UTC)Reply

Your account will be renamed தொகு

08:29, 20 மார்ச் 2015 (UTC)

பெயர் மாற்றப்பட்டது தொகு

12:03, 19 ஏப்ரல் 2015 (UTC)