வரவேற்புரைகள் தொகு

வருக!

  • பல சொற்களைக் காணுங்கள். பிறகு சொற்பதிவுகளை சிறப்பாக செய்திடுங்கள். ஏதேனும் உதவி தேவையெனின் , இப்பக்கத்திலேயே கேட்கவும். ஓரிரு நாட்களில் உங்களது உதவிகளை நானோ, பிறரோ செய்வர்.
வணக்கம்.--த*உழவன் 01:44, 27 நவம்பர் 2010 (UTC)Reply

நன்றிகள் தொகு

ஒரு சிறு திருத்தம் தேவை. "என் பங்களிப்புகள்" சொடுக்கினால் வரும் பக்கத்தின் தலைப்பு(Title) "பயனர் பெயர்" -இற்கான பயனர் பங்களிப்புக்கள் என்று உள்ளது. இதை சிறிது திருத்தம் செய்து, "பயனர் பெயர்" -ன் பயனர் பங்களிப்புக்கள் என்று இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.

  • பயனர் பக்கம், பயனர் பேச்சு என்பதனை யார்வேண்டுமானாலும் பார்க்கலாம். ஆனால், என் பங்களிப்புகள் என்பதனை புகுபதிகை செய்தவர் மட்டுமே காணமுடியும் என்பதால், அப்படி பெயரிட்டு இருக்கலாம் என எண்ணுகிறேன். எனினும், நீங்கள் கூறுவது போல பெயரிட்டால் ஒரு சீரான பெயரமைப்பு உருவாகிறது. வாய்ப்பு வரும் போது சுந்தர், இரவி போன்றோரிடம் கூறுகிறேன். நீங்களும் கூறுங்கள். உங்களைப்போலவே விக்கி பொது என்பது wikicommons க்கு ஏற்ற மொழிபெயர்ப்பு அல்ல என்று எண்ணுகிறேன். விக்கி ஊடக நடுவம் எனலாம். தெரன்சு கூறுவது போல விக்கிக் கோப்பகம் எனலாம் என்று எண்ணுகிறேன். அத்தோடு உங்கள் முன்மொழிவையும் தகுந்தோரிடம் சொல்லக் காத்திருக்கிறேன். தொடர்ந்து நீங்கள் வந்து பங்களிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.
உங்களைப் பற்றி அறிய ஆவல். விக்சனரிக்கு நீங்கள் வந்தடைந்த விதத்தையும் கூறினால் மகிழ்வோம். பிறரையும் பங்களிக்கத் தூண்ட வசதியாக இருக்கும். எத்துறையில் உங்களுக்கு ஆர்வம் அதிகம் ? என்பதையும் தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்.--த*உழவன் 15:58, 27 நவம்பர் 2010 (UTC)Reply
  • நான் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மிரட்டுநிலை எனும் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். தகவல் தொழில் நுட்பம் - பொறியியல் படித்து விட்டு தற்போது சென்னையில் மென்பொருள் துறையில் பணி. சுமார் ஒரு வருடம் முன்பே விக்கியில் கணக்கு தொடங்கியும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. மிகவும் வருந்துகிறேன். இனிமேல் தொடர்ந்து பங்களிப்பேன். இணையதளம், வேர்ட்பிரஸ், அடோபி ப்ளெக்ஸ் இவைகளில் எல்லாம் எனக்கு அனுபவம் இருக்கிறது. விக்கியில் உங்களது பங்களிப்பு உன்னதம். உங்களுக்கு நான் முதற்கொண்ட தமிழ் சமூகம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளது.

நான் முறைப்படி கணினியைக் கற்றவனல்ல. வெறும் அனுபவ அறிவே. இங்கு ஏறத்தாழ 3வருடங்களுக்கு முன் வந்தேன். இப்பொழுது ஓரளவு பலரால் கற்றிருக்கிறேன். அவ்வப்பொழுது உங்களது பங்களிப்புகளில் எனது அனுபவங்களால் மாற்றங்களை எற்படுத்துகிறேன். அதனை நீங்களும் உணர்ந்தால் மகிழ்ச்சியே. உங்களைப் போன்றக் கணினித்துறையினர், இங்கு நிறைய செய்ய முடியும் என எண்ணுகிறேன். இணைவோம். இனிது பல செய்வோம்.தட்டச்சுப்பலகையில் TAb விசைக்கு மேலுள்ள ~~~~ குறியீட்டை எண்ணிக்கையில் வேறுபடுத்தி இட்டு, முன்தோற்றம் காணவும். 4குறியீடுகள் இட்டு,எந்த பேச்சுப்பக்கத்திலும் உரையாடலை முடிப்பது விக்கியர் வழக்கம். அதனால் உங்களின்பெயர்,நேரம், தேதிமுதலியவை தானாகவே விக்கிநிரலால் தோன்றும். அதனை நீங்களும் செய்யுங்கள். மீண்டும் இணைவோம். --த*உழவன் 15:59, 29 நவம்பர் 2010 (UTC)Reply

javascript- உதவி தொகு

உங்கள் பதிவுகளை மீண்டும் காண்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. மிகக்குறைந்த நேரத்தில், பலரும் மிகச்சிறப்பாக பங்களிக்கவும், பல்வேறு தேவைகளுக்கும், மிக எளிய ஆழிகள் (tool buttons) ஆலோசித்து, அமைக்க உள்ளோம். அதில் நீங்களும் பங்கேற்க விரும்புகிறேன். உங்களது javascript அனுபவம், விக்சனரிக்கு உதவலாம். ஒரு ஆழி அமைக்கவாவது, நீங்கள் நிரல் எழுதித் தரக்கோருகிறேன். உங்களின் எண்ணம் அறிய ஆவல். இதுவரை இத்தகைய முயற்சி, 170 மொழிகளில் செயற்படும் எந்த ஒரு விக்சனரி திட்டத்திலும் எடுக்கப்பட வில்லை. ஆதலால், ஆதரவு தருக. வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 08:46, 24 பெப்ரவரி 2014 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Arunprabu.v&oldid=1224771" இலிருந்து மீள்விக்கப்பட்டது