‘மறுதாம்பு’

தொகு

‘மறுதாம்பு’

இனிப்பும், கசப்பும் கொண்ட வாழ்வில் பொய்மையும் ஒரு சுவையென்று அறியும் தருணத்தில் வாழ்விற்கான நீட்சியை இனங்காண்கிறார் தோழன் மபா. வாழ்க்கையை விரிவாக்கம் செய்து ஓலை அனுப்பியிருந்த கடவுள், மனிதர்கள் ‘மால்’களின் மின் தூக்கிகளில் கடைவாயில் அதக்கிய பீட்ஸாவுடன் வார இறுதிப் பொழுதுகளில் கடன் அட்டைகளைக் கையில் ஏந்தி களமாடும் போக்கைக் கோபத்துடன் கவனித்திருக்கிறான். எருக்கஞ்செடி மண்டி, ஏர் உழாமல் பாலையாகி விட்ட நிலங்களுக்கு யார் பொறுப்பு ஏற்பது என்பது கடவுளின் கேள்வி; (ப.103). ‘வந்தேறிகள் சூழ் உலகு’ என்ற இன்றைய உலகை ஆள்வோர் யாரென இனங் காட்டுகிறார்.

கண்ணியமிக்க கனவான்களே உலகம் முழுவதும் நிறைந்து இருப்பதையும், குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து பிஞ்சுக் கைகளில் இரத்தத்தைப் பூசுவதற்கும், உலகளாவிய விதத்தில் போர்களைத் திணிப்பதற்கும் அவர்கள் திட்டமிடுவதையும் அம்பலப்படுத்துகிறார். செம்பரம்பாக்கம் ஏரிக்கரை உடைத்துப் பெருகி சென்னை மாநகரை மூழ்கடித்த ஊழிப் பெருவெள்ளம் வடிந்தபின் நகரெங்கும் பூத்திருந்த பாலித்தீன் (நச்சுப்) பூக்களைக் காட்சிப்படுத்துகிறது ஒரு கவிதை. ‘கட்டிங் கேட்ட கடவுள்’, ‘ஆதி நிலத்து தேவதை’ ‘அது மாத்திரம்‘ கவிதைகளில் சாதியத்தின் மீது சவுக்கடி வீசுகிறார் தோழன் மபா. ‘விநாயகரின் கதறல்’ படித்ததும் சிரிப்பதா, இன்றைய சூழலில் விநாயகர் படும் பாட்டை நினைத்து அழுவதா என்று புரியாமற் போகிறது. ‘அடகு’, ‘சுவடுகள்’ கவிதைகள் சோகச் சித்திரங்களாய் அமைகின்றன. ”தோழன் மபாவின் கவிதைகள் நாம் அறியாத சந்து பொந்துகளுக்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன” என்கிறார் கவிக்கோ அப்துல் ரகுமான். ‘மேய்ச்சல் நிலம்‘, வளமான வண்டல்மண் படிவுகள் நிரம்பியதுதான் என நிறுவுகிற படைப்பு. நேரடியாகவும், வெடிப்புறவும் பேசுகிற வரிகள். ‘மறுதாம்பு’கள் மீண்டும் மீண்டும் துளிர்க்கும் என்பதில் ஐயமில்லை. எழிலார்ந்த அட்டையும், ‘மண்குதிரை’ச் சின்னமும் பொருத்தமானவை.

-புத்தகம் பேசுது.

புத்தகம் பற்றிய சிறு குறிப்பு:

கவிஞர் தோழன் மபா' எழுதிய மறுதாம்பு கவிதை நூல் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் தேதி, கவிக்கோ அப்துல் ரகுமான் மற்றும் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் அவர்களால் சென்னையில் உள்ள கவிக்கோ மன்றத்தில் வெளியிடப்பட்டது. கவிஞர் அமிர்தம் சூர்யா' மற்றும் கவிஞர் நாச்சியாள் சுகந்தி ஆகியோர் விழாவில் சிறப்புரை ஆற்றினார்கள்.

விழாவினை கவிஞர் வேல் கண்ணன் தொகுத்து வழங்கினார்.

பக்கம் 104 விலை ரூ.90/-

இப் புத்தகத்தை மேய்ச்சல் நிலம் பதிப்பகம் வெளியீட்டது,.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Greatmaba&oldid=1986385" இலிருந்து மீள்விக்கப்பட்டது