பயனர் பேச்சு:Info-farmer/2014
நஞ்சுண்டன்
தொகுமேற்கண்ட பக்கத்தில் என்னுடைய வேண்டுகோளை அருள்கூர்ந்து நிறைவுசெய்யுங்கள்--Jambolik (பேச்சு) 16:18, 13 பெப்ரவரி 2014 (UTC)
- பணியடர்வு காரணமாக உடன் உதவ இயலவில்லை. படங்களுடன் விவரித்துள்ளேன். பல நிகழ்பட வழிகாட்டல்கள் உருவாக்க எண்ணியிருந்தேன். நேரமின்மையால், தள்ளிப்போகிறது.
சொல் ஆய்வுப்பற்றி
தொகுவிக்சனரியில் 'ஆரம்பம் ' என்ற பக்கத்தின் முடிவில் உங்கள் கருத்துக்களைக் கண்டேன்...சொல் ஆய்வு என்பது மிகவும் மயக்கம் தரக்கூடிய கடினமானப் பணி என்பது முற்றிலும் உண்மை...என் எண்ணப்படி ஒரு சொல் எந்த மொழியைச் சேர்ந்தது என்பதை ஒருவர் முடிவு செய்ய அந்த ஒருவர் தொடர்புடைய இருமொழிகளின் இலக்கண, இலக்கியங்களில் சிறந்த அறிவுடையவராக இருத்தல் வேண்டும்...எடுத்துக்காட்டாக ஆரம்பம் என்னும் சொல்லை ஆராயவேண்டுமானால் தமிழ், வடமொழி ஆகிய இரு மாபெரும் கடல்களின் நூல்களிலும் அறிவாற்றல் கொண்டிருக்கவேண்டும்...இம் மொழிகளின் இலக்கண, இலக்கியங்கள் மிகப்பழமையானவை...அவைகள் அனைத்தையும் கற்றுத்தேர்ந்து விட்டார் என்று ஒருவரையும், எவ்வளவு பெரியவர்கள் , ஆனாலும் சொல்லமுடியாது...தமிழ் மொழியின் சொற்செழுமையைக் கொண்டு உலகின் எந்த மொழியின் சொற்களிலும் சிலவற்றையாவது தமிழோடு தொடர்புபடுத்தி அந்தச் சொற்கள் தமிழிலிருந்து தோன்றியிருக்கலாம் என்ற நிலையை தோற்றுவிக்கமுடியும்...ஆரம்பம் என்னும் சொல் வட, தென் மொழிகளில் காணப்படுவதால் அங்கிருந்து இங்கு வந்ததாகவும் இல்லை இங்கிருந்து அங்கு போனதாகவும் வாதம் செய்யலாம்...தீர்வு காண எந்த மொழியின் மிகப்பழைய இலக்கிய, இலக்கணத்தில் இந்தச்சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது என்பதை அறிந்து அந்த மொழிக்கு உரியது என்றே தற்காலிகமான முடிவுக்கு வரலாம்...தற்காலிகமாக என்று ஏன் சொல்கிறேன் என்றால் பிற்காலத்தில் மேலும் ஆதாரங்கள் கிடைக்கலாம்...சொற்கள் இப்படி ஆராயப்படுகின்றனவா என்பது பெரிய கேள்விக்குறியே...வடமொழிக்கு வேதங்கள் வரையும், தென்மொழிக்கு தொல்காப்பியம் வரையும் ஒருவர் கற்றுணர்ந்து இருக்கவேண்டும்...இது நடைமுறை சாத்தியமா? ஆங்கிலத்தின் சொற்களின் மூலத்தை வெகு எளிதாகக் கண்டுபிடித்துவிடுகிறார்கள்...ஏனென்றால் ஆங்கிலம் பண்டைய மொழியல்ல...தமிழ், வடமொழி விடயத்தில் இது நடவாது...வெறும் வேர்சொற்கள் என்பனவற்றைக்கொண்டு ஆராய்ந்து ஒரு சொல்லின் மொழியை முடிவுசெய்வது எந்த அளவு முழுக்காப்பு (foolproof) என்பது தெரியவில்லை...ஏனென்றால் வேர்ச்சொல்லுக்கும் வேர் தேடினால் கிடைக்கக்கூடும் ...இத்தகைய சூழ்நிலையில் என்னைப்போன்ற மிகச்சாதாரணமான ஒருவன் தமிழின் ஒரு சொல்லின் மூலத்தை அறிய தமிழிலேயே உள்ள சென்னைப் பல்கலைப் பேரகராதி, வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் ஆகியவற்றை அணுகிச் செயல்படும்போது, அவைகளே தவறு என்று வேறொரு ஆதாரத்தைக் கொடுத்தால் அதைமட்டும் பிரமாணமாக எப்படி எடுத்துக்கொள்ளுவது?..மாறுபட்டக் கருத்துக்கள் எல்லாக்காலங்களிலும், முக்கியமாக அறிஞர்களிடையே இருந்துதான் தீரும்...வரும் காலத்தில் இவற்றையும் கேள்விக்குறியாக்கும் நிகழ்வுகள் ஏற்படலாம்... கடந்த ஒருகாலக்கட்டத்தில், தமிழில் தேவையில்லாமல், தமிழ்ச் சொற்கள் இருக்கும்போதே, வடசொற்கள் கலக்கப்பட்டது உண்மைதான்..அவை பெருமளவு நீக்கப்பட்டுவிட்டன...அவ்வாறு நீக்க அரும்பாடு பட்டவர்களே ஒருவருக்கொருவர் எண்ண வேறுபாடுகொண்டு நான், நீ என்று உராசிக்கொண்டால், அவர்களை பின்பற்றுகிறவர்களும் குழுக்களாகப் பிரிந்து இன்றுவரை செயல்பட்டுக்கொண்டிருந்தால் என்னைப்போன்றவர்களுக்கு இருக்கும் ஆர்வமும் குறைந்துவிடுமல்லவா...ஒன்று இப்படி மாறுபட்ட என்ணமுடையவர்கள் ஒன்று கூடி ஒரு முடிவெடுத்து இது இப்படிதான் என்று கூறவேண்டும் இல்லையென்றால் இருக்கும் தமிழ் ஆதாரங்களைக்கொண்டு எழுதப்படுவனவற்றில் தலையிடாமல் இருக்கவேண்டும்... தமிழ் ஆர்வலர்களின் சமுதாயம் (கவனம்..குறிப்பிட்டது தமிழ் பொது மக்களை அல்ல)மிக விழிப்பாகயிருக்கிறது...தமிழில் வேறு மொழிச் சொற்கள், காலத்தின் கட்டாயத்தால் தற்காலிகமாகக் கலந்தாலும், புதியதாக வடமொழிச்சொற்கள், தமிழ்ச் சொற்களுக்கு மாற்றாக கலப்பதற்கு எவரும் விடமாட்டார்கள்... முடிவாக, நல்ல தமிழில் எழுதவேண்டும் என்பவர்களை, அவர்கள் ஏதாவதொரு தமிழ் ஆதாரத்தை சார்ந்து எழுதும்போது, அது சரிஅல்ல என்று சொல்லி ஆர்வம் குன்ற வைத்துவிடாமலிருந்தால் சரி...இது ஒரு தமிழ் சாமானியனின் குரல்...
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண்
மெய்ப்பொருள் காண் பதறிவு--வள்ளுவம்.
பொறுமையாக படித்ததற்கு நன்றி...வணக்கம்--Jambolik (பேச்சு) 22:17, 14 பெப்ரவரி 2014 (UTC)
- //உலகின் எந்த மொழியின் சொற்களிலும் சிலவற்றையாவது தமிழோடு தொடர்புபடுத்தி அந்தச் சொற்கள் தமிழிலிருந்து தோன்றியிருக்கலாம் என்ற நிலையை தோற்றுவிக்கமுடியும்..// இந்த வரிகள் என் கல்லூரிப் பேராசிரியர் கூறியதை நினைவு படுத்தியது. அன்று விளையாட்டுப்பிள்ளையாக இருந்தேன். இன்றும் கூட விளையாடுகிறேன். ஆனால், தமிழோடு. இவ்விளையாட்டில், பல உரையாடல் பக்கங்களின் வழியே பலவற்றைக் கற்கிறேன். அந்தவகையில் அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். நான் சரியான பாதையில் நடப்பதற்கு , இவ்வுரையாடல்கள் உதவுகின்றன.
//தீர்வு காண எந்த மொழியின் மிகப்பழைய இலக்கிய, இலக்கணத்தில் இந்தச்சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது என்பதை அறிந்து அந்த மொழிக்கு உரியது என்றே தற்காலிகமான முடிவுக்கு வரலாம்// ஒரு சொல் நமது இலக்கியங்களில் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான ஒரு செயலியை நண்பர்களின் துணைகொண்டு உருவாக்க முயன்று வருகிறேன். அதனை திறநிலை மென்மியமாக(Open source software) வெளியிட நாங்கள் உறுதியாயுள்ளோம். இது தமிழ்கணிமை ஆய்விற்கான, முதற்படிக்கல்லாக இருக்கும் என்றே நம்புகிறேன். இந்த வெளியீட்டை மேலும் பலர் வளர்த்தால், நம் மொழியும் பிற மொழிகளைப் போல, கணினியியலை தன்வசமாக்கலாம். //அவைகளே தவறு என்று வேறொரு ஆதாரத்தைக் கொடுத்தால் அதைமட்டும் பிரமாணமாக எப்படி எடுத்துக்கொள்ளுவது?.// நமது முன்னோர்களின் எண்ணங்கள் அனைத்தையும் இணையத்தில் பேண வேண்டும் என்ற ஆசை என்னுள் இருக்கிறது. தற்போது சென்னைப்பேரகரமுதலியின் தரவுகளை நம் விக்சனரியில் சற்று விரிவு படுத்தி, பதிவேற்ற முனைந்து வருகிறேன். அதற்கென பல்வேறு இணையத்தேடல் செய்து கொண்டு இருந்த போது, விக்கிமூலத்தில் பாவாணரின் ஆவணத்தை பதிவு செய்தேன். அதுபற்றிய குறிப்புகள் உரையாடற்பக்கத்தில் நடந்த தால், நமது விக்கிமூலத்திலும் உள்ளது என்ற குறிப்பை மட்டுமே அங்கு தர விழைந்தேன். ஆதாரமாக அல்ல என்பதை தாழ்மையுடன் கூறக் கொள்ள விரும்புகிறேன். ஒரு தமிழ் பயிலும் மாணவன் என்ற முறையில், என்னால் இயன்ற அளவு முழுமையை நோக்கி பயணிக்கிறேன். பிழையிருப்பின், மன்னிக்கவும். உண்மையில் உங்களின் பார்வை, மிக ஆழமான சிந்தனையை என்னுள் வளர்க்கிறது. கருத்தில் கொள்வேன். நன்றி. வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 06:45, 15 பெப்ரவரி 2014 (UTC)
குறிப்புகள்
தொகுவணக்கம் தகவலுலவன் அவர்களே, எனது நிரலாக்க ஆற்றல் பற்றிய குறிப்புகளைக் கேட்டிருந்தீர்கள். நான் ஜாவா நிரலாக்க மொழிக்கான பயிற்சி பெற்றுள்ளேன். நன்றி. --ச.பிரபாகரன் (பேச்சு) 07:46, 17 மார்ச் 2014 (UTC)
- மிக்க மகிழ்ச்சி. அப்பொழுது உங்களுக்கு javascript நெருக்கமாகும் அல்லவா? இந்நிகழ்படத்தைக் காணவும். இதன் மூல நிரலைக் காணவும். அது போல ஒரு சில ஆழிகளை(buttons) நீங்கள் செய்ய இயலும் என எண்ணுகிறேன். உங்களின் எண்ணமறிய ஆவல்.--தகவலுழவன் (பேச்சு) 07:57, 17 மார்ச் 2014 (UTC)
- சில வருடங்களுக்கு முன்பு Javascript பற்றிப் படித்த நூலறிவு இருந்தது. ஆனால், அனுபவ அறிவு அவ்வளவாக இல்லாத காரணத்தினால், இவ்வளவு காலம் கடந்த பிறகு மறந்துவிட்டது. இருந்தாலும், ஆர்வம் இருப்பதால், கற்றுக்கொண்டு செய்ய முற்படுவேன்.--ச.பிரபாகரன் (பேச்சு) 13:09, 17 மார்ச் 2014 (UTC)
- மகிழ்ச்சி. மேலே கூறிய நிகழ்படத்தில் ஒரு சொல்லுக்கு முன்னும், பின்னும் சதுரஅடைப்புகுறிகள்[[ ]] போடப்படுகிறது அல்லவா? அது தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. யாதெனில், [[ குறியீடுகளுக்கு முன் # என்ற குறியீட்டையும் சேர்த்து, #[[ எனப்போடுமாறு அமைக்கப் பட்டுள்ளது. நீங்கள் அடைப்புக் குறியீடுகள் போடாமல், #குறியீடு மட்டும் ஒவ்வொரு சொல்லுக்கு முன்னும் இடுமாறு செய்ய முயற்சித்துப் பாருங்களேன். அல்லது ஒவ்வொரு வரியின் தொடக்கத்தில், எந்த ஒரு வெற்றிடமும்(white space) இல்லாமல் இருக்க வேண்டும். தவறுதலாக தட்டச்சும் போதும், வேகமாக செயற்படும் போதும், அந்த வெற்றிடம் பல நேரங்களில் உண்டாகும். ஒரு ஆழியை(button) அழுத்தினால், தொடக்கத்தில் உள்ள வெற்றிடம்(white space) நீங்க வேண்டும். பலருக்கும் இந்த இரண்டும் தேவை. மற்றவை பிறகு.. --தகவலுழவன் (பேச்சு) 13:30, 17 மார்ச் 2014 (UTC)
- ஆழியின் நிரலாக்கத்தை எப்படி சோதித்துப் பார்ப்பது? --ச.பிரபாகரன் (பேச்சு) 15:07, 17 மார்ச் 2014 (UTC)
- பயனர்:Jayarathina/wikt.js இவர் உருவாக்கிய பக்கத்தைப்போல, பயனர்:ச.பிரபாகரன்/wikt.js என்ற உங்களின் நிரலாக்கப்பக்கத்தினை முதலில் உருவாக்குக. பிறகு, பயனர்:Jayarathina/common.js பக்கத்தைப் போல, இயக்குநிரல் கட்டளைப் பக்கத்தை போல, உங்களுக்கான கட்டளைப்பக்கத்தை உருவாக்கிக் கொள்ளவும். Jayarathina உருவாக்கிய பக்கத்தை, நான் பயன்படுத்த, பயனர்:தகவலுழவன்/common.js என்ற பக்கத்தை உருவாக்கிக் கொண்டேன். நீங்கள் உருவாக்கிய பக்கத்தை நான் சோதிக்கும் போது, அதனை முற்றிலும் நீக்கிவிட்டு, உங்களின் நிரலை இட்டுக் கொள்வேன். ஒரே நேரத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட கட்டளைப்பக்கத்தை சோதித்துப் பார்ப்பதில் சில வழுக்கள் உள்ளன. அவற்றினைக் குறித்து, பிறகு அலசுவோம். Jayarathina பணியடர்வாக இருப்பதால், ஓரிரு வாரங்கள் நம்முடன் கலந்தோலசிக்க இயலா சூழ்நிலையில் உள்ளார். --தகவலுழவன் (பேச்சு) 15:35, 17 மார்ச் 2014 (UTC)
- வணக்கம் தகவலுழவன் அவர்களே, பயனர்:ச.பிரபாகரன்/wikt.js எனும் நிரலில் நீங்கள் கேட்ட இரண்டு தேவைகளையும் சேர்த்துவிட்டேன். முக்கியமானவற்றை சோதனை செய்துவிட்டேன். அனைத்திற்கும் இந்நிரல் வேலைசெய்யுமா என்று சோதனை செய்து பார்க்கும் வேலை மீதமுள்ளது. மேலும், ஆழிகளுக்கான படத்தை மாற்றவேண்டும். நன்றி. --ச.பிரபாகரன் (பேச்சு) 18:30, 17 மார்ச் 2014 (UTC)
- ஆழியின் நிரலாக்கத்தை எப்படி சோதித்துப் பார்ப்பது? --ச.பிரபாகரன் (பேச்சு) 15:07, 17 மார்ச் 2014 (UTC)
- மகிழ்ச்சி. மேலே கூறிய நிகழ்படத்தில் ஒரு சொல்லுக்கு முன்னும், பின்னும் சதுரஅடைப்புகுறிகள்[[ ]] போடப்படுகிறது அல்லவா? அது தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. யாதெனில், [[ குறியீடுகளுக்கு முன் # என்ற குறியீட்டையும் சேர்த்து, #[[ எனப்போடுமாறு அமைக்கப் பட்டுள்ளது. நீங்கள் அடைப்புக் குறியீடுகள் போடாமல், #குறியீடு மட்டும் ஒவ்வொரு சொல்லுக்கு முன்னும் இடுமாறு செய்ய முயற்சித்துப் பாருங்களேன். அல்லது ஒவ்வொரு வரியின் தொடக்கத்தில், எந்த ஒரு வெற்றிடமும்(white space) இல்லாமல் இருக்க வேண்டும். தவறுதலாக தட்டச்சும் போதும், வேகமாக செயற்படும் போதும், அந்த வெற்றிடம் பல நேரங்களில் உண்டாகும். ஒரு ஆழியை(button) அழுத்தினால், தொடக்கத்தில் உள்ள வெற்றிடம்(white space) நீங்க வேண்டும். பலருக்கும் இந்த இரண்டும் தேவை. மற்றவை பிறகு.. --தகவலுழவன் (பேச்சு) 13:30, 17 மார்ச் 2014 (UTC)
- சில வருடங்களுக்கு முன்பு Javascript பற்றிப் படித்த நூலறிவு இருந்தது. ஆனால், அனுபவ அறிவு அவ்வளவாக இல்லாத காரணத்தினால், இவ்வளவு காலம் கடந்த பிறகு மறந்துவிட்டது. இருந்தாலும், ஆர்வம் இருப்பதால், கற்றுக்கொண்டு செய்ய முற்படுவேன்.--ச.பிரபாகரன் (பேச்சு) 13:09, 17 மார்ச் 2014 (UTC)
கண்டேன் மகிழ்ந்தேன். மொத்தம்4ஆழிகளை அமைத்துள்ளீர்கள். 2முன்பு இருந்தது. இரண்டு நீங்கள் உருவாக்கியது. மஞ்சள், பச்சை , மஞ்சள், பச்சை என அமைந்துள்ளது. சரியா? இதில் 3வதாக உள்ள, 2வது மஞ்சள் ஆழியை அழித்தினால், #குறியீடு மட்டும் அனைத்துச்சொற்களின் முன்னேயும் போடுகிறது. 4வதாக உள்ள பச்சையாழி, முன்னால் உள்ள வெற்றிடத்தை மட்டும் நீக்குகிறது. இவற்றில் ஒரு வழு இருப்பதாக எண்ணுகிறேன்.அதனால் அவரின் முதல் இரண்டு ஆழிகளையும், அவற்றிற்கான நிரல்களையும் நீக்கிவிட்டு உங்களின் நிரலை மட்டும் எழுதி சோதிக்கவும். எடுத்துக்காட்டாக, ஒரு வாக்கியத்தின் உள்ளே ஏதேனும் [[~~~~.குறியீடுகள் எண்கள் இருந்தால் அவற்றினையும் நீக்கிவிடுகிறது. இவ்வாறு நீக்குதல் கூடாது. ஏனெனில், ஒரு பயனர் தனது படைப்பை, குறியீடுகளுடன் எழுத வாய்ப்புண்டு. அவர் தனது எழுத்தாக்கத்தை செய்த பிறகு, முன்னுள்ள வெற்றிடத்தை மட்டும் நீக்கவே, உங்களின் இரண்டாவது ஆழியை அழுத்துகிறார். எனவே, வெற்றிட நீக்கியை முதலில் அமைக்கவும். இது எப்பொழுதும், அனைத்து மொழி விக்கியருக்கும் பயன்படும். இவ்வசதி எந்த விக்கியிலும் இல்லையென்பது குறிப்பிடதக்கது. . எனவே, இதனை தனியே அமைக்கவும். அடுத்துள்ள, #போடும் ஆழியை பிறகு அமைக்க வேண்டுகிறேன். இது தமிழ் விக்சனரிக்கு மட்டுமே பயன்படக்கூடியது. ஒரு சொல்லுக்கான விளக்கம் எழுதும் போது, இது பயனாகும். {எ.கா) அரசர்சின்னம். ஒவ்வொன்றாக அமைத்து சிறப்புற செய்வோம். WikiEditor_Toolbar_Icons இந்நேரத்தில் ( ) என்பதை வெற்றிட நீக்க ஆழியாகவும், ( ) என்பதை # குறியீட்டு ஆழிக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். பிறகு வேண்டிய வடிவத்தை அங்குள்ள வழிகாட்டல் படி உருவாக்கிக் கொள்ளலாமென்றே எண்ணுகிறேன். தயவுசெய்து
“ | அவர்களே | ” |
என்றெல்லாம் என்னை அழைக்க வேண்டாம். நான் இங்கிருக்கும் பேரார்வமுள்ள பங்களிப்பாளர்களில் ஒருவன். அவ்வளவே. தகவலுழவன் என்று அழைத்தாலே போதும். என்றும் நட்பு வேண்டி, ஆவலுடன் முடிக்கும்.--தகவலுழவன் (பேச்சு) 02:06, 18 மார்ச் 2014 (UTC)
ஈராழிகள்
தொகு- நீங்கள் கூறியது போலவே செய்துவிட்டேன். இப்பொழுது, பயனர்:ச.பிரபாகரன்/wikt.js எனும் நிரலில் ஈராழிகள் மட்டுமே உள்ளன. முதல் ஆழி, ஒரு வரியில் உள்ள தேவையில்லா இடைவெளிகளை நீக்கும். உதாரணமாக, வரியின் முதலில் உள்ள இடைவெளிகள், வரியின் இடையில் தொடர்ந்து ஒன்றிற்கும் மேற்பட்ட இடைவெளிகள்(இவற்றை ஒரு இடைவெளியாக மாற்றும்). வரி என்பது எங்கு 'Enter' விசை இருக்கிறதோ அது வரை ஒரு வரியாகக் கொள்ளப்படும். இரண்டாவது ஆழி, முதல் ஆழி செய்வதைச் செய்துவிட்டு பின்பு வரியின் முதலில் # குறியீட்டைச் சேர்க்கும். --ச.பிரபாகரன் (பேச்சு) 08:17, 18 மார்ச் 2014 (UTC)
- ஈராழிகளையும் பயன்படுத்திப் பார்த்தேன். 2வதாக உள்ள H-ஆழி மட்டும் தனது இலக்கை சரியாக செய்கிறது. மகிழ்ச்சி. ஆனால், முதலாவது ஆழி தனது செயலை செய்யும் போது, அனைத்து வரிகளிலும் உள்ள குறியீடுகளை நீக்கி விடுகிறது. இப்பக்கத்திலேயே செய்து பார்க்கவும். எவ்வித குறியீடுகளையும் நீக்கா வண்ணம் நிரல் எழுதுங்கள். நமது இலக்கு யாதெனில், இந்த ஆழி, தொகுத்தல் சாளரத்திலுள்ள தொடக்க எழுத்துக்களின் முன்னுள்ள இடைவெளியை மட்டும் நீக்கும் வண்ணம் அமைக்கவும். மற்றவைகளை எதுவும் செய்யக்கூடாது.அப்பொழுது தான் இந்த ஆழிக்குறிய படத்தில் இருப்பது போல, இடபக்கச்சீரமைவு(left alignment) அமையும். எடுத்துக்காட்டுக்கு இப்பத்தியையே தொடக்க இடைவெளியுடன் அமைத்துள்ளேன்.--தகவலுழவன் (பேச்சு) 09:30, 18 மார்ச் 2014 (UTC)
- நீங்கள் கூறியது போலவே மாற்றங்கள் செய்துவிட்டேன். குறியீடுகளை நீக்கும் நிரலை நீக்கிவிட்டேன். வரியின் கடையில் உள்ள இடைவெளிகளை நீக்கும் நிரலும் வரியின் இடையில் தொடர்ந்து ஒன்றிற்கும் மேற்பட்ட இடைவெளிகள் இருந்தால் அதை ஒரே இடைவெளியாக மாற்றும் நிரலும் கூடுதலாக உள்ளது. இவற்றையும் நீக்கவா?. --ச.பிரபாகரன் (பேச்சு) 10:11, 18 மார்ச் 2014 (UTC)
- மிக அற்புதம் நண்பரே! அவைகள் அப்படியே இருக்கலாமென்றே எண்ணுகிறேன். ஏனெனில், இந்த ஆழிதேவையற்ற இடைவெளிகளை மட்டும் நீக்கும் திறன் உடையதாக ஆகிவிட்டது. தொகுத்தலின் போது, எளிதில் கட்புலனாகா இடர் இது. புதியவர்களுக்கு மட்டுமல்லாது, பழகியவர்களுக்கும் இது மிகவும் உதவும். இருப்பினும் ஒரு விதி விலக்கை உருவாக்க இயலுமா?
- அதாவது ஒரு வாக்கியத்திலோ அல்லது வரியிலோ, இடைவெளிக்குப் பிறகு, மெய்யெழுத்து வந்தால், அந்த மெய்யெழுத்துக்கு முன்னுள்ள அனைத்து இடைவெளியும் நீக்கும்வண்ணம் செய்ய இயலுமா? எதற்கு எனில், தமிழ்99 தட்டச்சு முறையில் ஒரு சிறு குறை உள்ளது. அதனை நீக்கவே கேட்டேன்.
- எடுத்துக்காட்டாக, அம்மா என்று அடிக்கும் போது, தமிழ்99ம் என்ற எழுத்துக்குரிய புள்ளியை தானே வைத்து விடும். அது அப்பொழுது வசதி. ஆனால், தத்தை என்ற சொல்லை தட்டச்சிடும் போது, தத்தை என இடைவெளியுடன் தான் தட்டச்சிட வேண்டும். இப்படி இடைவெளியில்லாமல் அடித்தால்,த்ததை என்றே வரும். வேகமாக தட்டச்சு செய்பவர், தனது தட்டச்சை முடித்தவுடன் அது உள்ள இடங்களைத் தேடி, (தத்தை) இடைவெளியை நீக்க வேண்டும். இந்த குறையை, நீக்கவே விதிவிலக்கு செய்ய இயலுமா எனக்கேட்டேன்.
- இந்த இடைவெளித் தொந்தரவை அறிந்த சிங்கப்பூர் அரசு, தனது தமிழ் தட்டச்சு பலகையிலும், கூகுளின் தட்டச்சுப் பலகையிலும், இந்த புள்ளி தானாக (எ.கா = அம்மா) இடாது. நாம்தான் இட வேண்டும். இவ்வாறு புள்ளிகளை நாமே இடுவது, நமக்கு கூடுதல் வேலை.
- எனவே, தமிழ்99 தட்டச்சுப் பலகையால் ஏற்படும் இந்த இடரை நீக்க, இந்த மெய்யெழுத்து விதிவிலக்கு மிகவும் அவசியம். அதாவது ஒரு இடைவெளிக்குப் பிறகு, எந்த ஒரு மெய்யெழுத்தும் வரக்கூடாது. அப்படி வந்தாலும், உங்கள் ஆழி விதிவிலக்காக எண்ணி, இடைவெளியை நீக்கி விட வேண்டும். நெருக்கிச் சீராக்கித் தரவேண்டும். இந்நிலையில் உங்கள் ஆழி, 98%சிறப்பாக, பயனர்களின் தேவையை சீராக்குகிறது. இந்த விதிவிலக்கு2%. இதுவும் நீங்கள் அமைத்து விட்டால், தமிழின் இலக்கணமும், தமிழ்99குறையும் நீங்கி, 100% அடைய என்னுள் விருப்பம். உங்கள் சூழ்நிலை அறிய ஆவல்.--தகவலுழவன் (பேச்சு) 12:11, 18 மார்ச் 2014 (UTC)
- இடைவெளிக்குப் பின் மெய்யெழுத்து வந்தால் அவ்விடைவெளியை தேவையில்லாத இடைவெளியாகக் கொண்டு, அதை நீக்கும் நிரலும் சேர்த்துவிட்டேன். ஓரிரு முறை சோதனை செய்துவிட்டேன். வேலை செய்கிறது. நீங்களும் ஒரு முறை வேலைசெய்கிறதா என்று பார்த்துக் கூறவும். காலி வரியையும் தேவையில்லாத வரியாக இந்நிரல் நீக்குகிறது. இது சரியா?. நன்றி. --ச.பிரபாகரன் (பேச்சு) 13:31, 18 மார்ச் 2014 (UTC)
- மெய்யெழுத்துக்களின் இடைவெளியையும் நீக்க நிரலமைத்தமைக்கு அக மகிழ்கிறேன். எந்த வேலையும் செய்யாமல், அடுத்தவர்களை எடைபோடும் நபர்களின் நடுவில் மாட்டிக்கொண்டு விழித்தேன், நீங்கள் அசத்திவிட்டீர்கள். புத்துணர்ச்சி ஊட்டியமைக்கு மிக்க நன்றி. மெய்யெழுத்து இடைவெளி போல, குறிகளுக்கு இடையே ஏற்படும் இடைவெளி பற்றி ஆய வேண்டும். அவற்றால் அதிக இடர் வருவதில்லை. அப்படி ஏற்படின் தங்களிடம் கோருவேன்.
- இடைவெளிக்குப் பின் மெய்யெழுத்து வந்தால் அவ்விடைவெளியை தேவையில்லாத இடைவெளியாகக் கொண்டு, அதை நீக்கும் நிரலும் சேர்த்துவிட்டேன். ஓரிரு முறை சோதனை செய்துவிட்டேன். வேலை செய்கிறது. நீங்களும் ஒரு முறை வேலைசெய்கிறதா என்று பார்த்துக் கூறவும். காலி வரியையும் தேவையில்லாத வரியாக இந்நிரல் நீக்குகிறது. இது சரியா?. நன்றி. --ச.பிரபாகரன் (பேச்சு) 13:31, 18 மார்ச் 2014 (UTC)
- அடுத்து என்ன பண்ணலாம்? என ஆழ்ந்து சிந்திக்கிறேன். பிறகு விரிவாகக் கூறுகிறேன். இருப்பினும், ஓர் எண்ணம். எடுத்துக்காட்டாக, இப்பக்கத்தினையே எடுத்துக் கொள்க. (எ.கா = அம்மா) என்பதில் உள்ள (எ.கா) என்பது, ஒரு பக்கத்தினைத் தொகுக்கும் போது வந்தால், மாற்றுக என்ற ஆழியை அழுத்தினால், {{எ.கா}} என மாற வேண்டும். இதுபோல ஒன்றிற்கும் மேற்பட்ட சொற்கள் வந்தால், அதற்கே உரிய மாற்று சொற்களாக(multiple find &replace), ஒரே நேரத்தில் மாற்ற இயலுமா?--தகவலுழவன் (பேச்சு) 17:35, 18 மார்ச் 2014 (UTC)
- மிக்க நன்றி. ஒரே சுட்டில்(Click) பல மாற்றுச்சொற்களை ஒரே நிரலில் மாற்றவியலும். --ச.பிரபாகரன் (பேச்சு) 18:22, 18 மார்ச் 2014 (UTC)
- அடுத்து என்ன பண்ணலாம்? என ஆழ்ந்து சிந்திக்கிறேன். பிறகு விரிவாகக் கூறுகிறேன். இருப்பினும், ஓர் எண்ணம். எடுத்துக்காட்டாக, இப்பக்கத்தினையே எடுத்துக் கொள்க. (எ.கா = அம்மா) என்பதில் உள்ள (எ.கா) என்பது, ஒரு பக்கத்தினைத் தொகுக்கும் போது வந்தால், மாற்றுக என்ற ஆழியை அழுத்தினால், {{எ.கா}} என மாற வேண்டும். இதுபோல ஒன்றிற்கும் மேற்பட்ட சொற்கள் வந்தால், அதற்கே உரிய மாற்று சொற்களாக(multiple find &replace), ஒரே நேரத்தில் மாற்ற இயலுமா?--தகவலுழவன் (பேச்சு) 17:35, 18 மார்ச் 2014 (UTC)
ஆழி3(மாற்றுக)
தொகு5,6 வருடங்களுக்கு முன் திவா. என்றால் என்னவென்று தெரியாமல் விழித்தேன். அப்புறம் இராமகி அது, திவாகர நிகண்டு என்று கூறினார். இதுபோல உள்ள சொற்சுருக்கங்களை விரிவாக்க முதலில் அவற்றினைத்தொகுக்க எண்ணினேன். அதன் விளைவாக, சென்னைப் பேரகரமுதலியில் ஏறத்தாழ1500க்கும் மேற்பட்ட சொற்சுருக்கங்கள் உள்ளன என்பதனை அறிந்தேன். அவற்றின் சொல்விரிவை அனைவரும் அறிந்து கொள்ள இந்த ஆழி உதவப்போகிறது. காண்க. அடித்தளம் இட்டு தாருங்கள் ஒவ்வொன்றாக அதில் இணைத்து விடுகிறேன். பின்பு விரிவாகக் கூறுகிறேன். --தகவலுழவன் (பேச்சு) 18:38, 18 மார்ச் 2014 (UTC)
- சொற்சுருக்கங்களை மாற்றும் ஆழியின் நிரலும் சேர்த்துவிட்டேன். நிரலின் தொடக்கத்தில் மாற்றவேண்டிய சொற்சுருக்கங்களைச் சேர்க்க வேண்டும். ஒரு சொல்லை இன்னொரு சொல்லாக மாற்றும் நிரலும் உள்ளது. உதாரணமாக, நிரலின் தொடக்கத்தில் 'தொல்.' என்று மட்டும் இருந்தால் அது {{தொல்.}} என்று மாறிவிடும். இதே, 'தொல்.~தொல்காப்பியம்' என்று இருந்தால், 'தொல்.' எனும் சொல் 'தொல்காப்பியம்' என்று மாறிவிடும். --ச.பிரபாகரன் (பேச்சு) 14:00, 19 மார்ச் 2014 (UTC)
- பிரபா! எனக்கு தலைகால் புரியவில்லை. மிக்க நன்றி. உங்கள் நட்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடன் படித்த நண்பர் ஒருவர் தற்போது, உயர்ந்த மருத்துவராக உள்ளார். அவரது பெயரும் பிரபாகரன்!. என் தந்தைக்கு புற்று நோய் என்று கூறிய பொழுது, அவரை நீண்ட நாட்களுக்கு பின், தயக்கத்துடன் சந்தித்தேன். உடன் விரைந்து நடவடிக்கை எடுத்து, அறுவை மருத்துவம் செய்து சாதனை புரிந்தார். இப்ப என் தந்தை நலமாக உள்ளார். அவரைப் போல நீங்கள் எடுத்த இலக்கை விரைந்து செவ்வனே முடித்து விட்டீர்கள். என் அப்பா நலமான போது எனக்கு கிடைத்த மகிழ்ச்சி. இப்பொழுது கிடைக்கிறது. உங்களது செயலால், பைத்தான் தானியங்கி நிரல்கள், AWB என்ற கருவியின் உதவி, அட்டவணைச்செயலி(spreadsheet), நோட்பேட்++ என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக தாவி, எனது முயற்சிகளை செய்து கொண்டு இருந்தேன். பலருக்கும் கற்று தர முயன்ற போது, பல தடைகள் எழுந்தன. இனி அனைத்தும் விக்சனரியிலேயே அமைத்துவிடலாம் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. ஏறத்தாழ 60%பணிகளை, நாம் இனி விக்சனரியின் தொகுப்பானுக்குள்ளேயே செய்யலாம். இந்த நிரல் மூலம் வேண்டிய மாற்றங்களை உள்ளீடு செய்துவிட்டால், சென்னைப்பேரகரமுதலியின் தரவுகளை, மேம்படுத்தி பதிவேற்றி விடலாம். தற்போதுள்ள அவ்வடிவம் நூல் வடிவத்தை ஒத்தது. அதிலுள்ள சொற்சுருக்கங்களை இனி யாவரும் அறிய அடிகோலி விட்டீர்கள். ஒரு ஐயம்! எனக்கு வேண்டிய மாற்றத்தைப் பெற, நான் எப்படி உள்ளீடுகளை இதில் அடித்தளமிட முடியும். (எ. கா.) என்ற சொல்லை அடித்த பிறகு, 3வது ஆழியை சொடுக்கிப்பார்த்தேன். அது {.{எ. கா.}} என மாறவில்லையே? இப்படி வந்தால், இப்படி மாற்று என்ற அடிப்படையில், நான் சொற்களை, உங்கள் நிரலில் சேர்ப்பது எப்படி? --தகவலுழவன் (பேச்சு) 17:11, 19 மார்ச் 2014 (UTC)
- மிக்க நன்றி... :)
- நிரலின் தொடக்கத்தில் 'தொல்.','குறள்.','திவா.' என்று ஒரு வரி இருக்கும். அதாவது, தற்பொழுது இம்மூன்றிற்கு மட்டும் சொற்சுருக்கம் விரிவாக்கப்படும். (எ. கா.) என்பதையும் விரிவாக்க வேண்டுமென்றால் அங்கு ஒரு , இட்டுவிட்டு பின்பு எ. கா. என்பதையும் அங்குள்ளது போலவே சேர்த்து விடவேண்டும். இந்நிரலில் மேலும் ஒரு புதிய தேவையை எதிர்காலத்தை மனதில் கொண்டு சேர்த்துள்ளேன். அதாவது, நிரலின் தொடக்கத்தில் 'எ. கா.' என்று மட்டும் இருந்தால் அது {{எ. கா.}} என்று மாறிவிடும். இதே, 'எ. கா.~எடுத்துக்காட்டு' என்று இருந்தால், 'எ. கா.' எனும் சொல் 'எடுத்துக்காட்டு' என்று மாறிவிடும். அதாவது, ஒரு சொல்லை இன்னொரு சொல்லாக மாற்றுவது. --ச.பிரபாகரன் (பேச்சு) 17:44, 19 மார்ச் 2014 (UTC)
- பிரபா! எனக்கு தலைகால் புரியவில்லை. மிக்க நன்றி. உங்கள் நட்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடன் படித்த நண்பர் ஒருவர் தற்போது, உயர்ந்த மருத்துவராக உள்ளார். அவரது பெயரும் பிரபாகரன்!. என் தந்தைக்கு புற்று நோய் என்று கூறிய பொழுது, அவரை நீண்ட நாட்களுக்கு பின், தயக்கத்துடன் சந்தித்தேன். உடன் விரைந்து நடவடிக்கை எடுத்து, அறுவை மருத்துவம் செய்து சாதனை புரிந்தார். இப்ப என் தந்தை நலமாக உள்ளார். அவரைப் போல நீங்கள் எடுத்த இலக்கை விரைந்து செவ்வனே முடித்து விட்டீர்கள். என் அப்பா நலமான போது எனக்கு கிடைத்த மகிழ்ச்சி. இப்பொழுது கிடைக்கிறது. உங்களது செயலால், பைத்தான் தானியங்கி நிரல்கள், AWB என்ற கருவியின் உதவி, அட்டவணைச்செயலி(spreadsheet), நோட்பேட்++ என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக தாவி, எனது முயற்சிகளை செய்து கொண்டு இருந்தேன். பலருக்கும் கற்று தர முயன்ற போது, பல தடைகள் எழுந்தன. இனி அனைத்தும் விக்சனரியிலேயே அமைத்துவிடலாம் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. ஏறத்தாழ 60%பணிகளை, நாம் இனி விக்சனரியின் தொகுப்பானுக்குள்ளேயே செய்யலாம். இந்த நிரல் மூலம் வேண்டிய மாற்றங்களை உள்ளீடு செய்துவிட்டால், சென்னைப்பேரகரமுதலியின் தரவுகளை, மேம்படுத்தி பதிவேற்றி விடலாம். தற்போதுள்ள அவ்வடிவம் நூல் வடிவத்தை ஒத்தது. அதிலுள்ள சொற்சுருக்கங்களை இனி யாவரும் அறிய அடிகோலி விட்டீர்கள். ஒரு ஐயம்! எனக்கு வேண்டிய மாற்றத்தைப் பெற, நான் எப்படி உள்ளீடுகளை இதில் அடித்தளமிட முடியும். (எ. கா.) என்ற சொல்லை அடித்த பிறகு, 3வது ஆழியை சொடுக்கிப்பார்த்தேன். அது {.{எ. கா.}} என மாறவில்லையே? இப்படி வந்தால், இப்படி மாற்று என்ற அடிப்படையில், நான் சொற்களை, உங்கள் நிரலில் சேர்ப்பது எப்படி? --தகவலுழவன் (பேச்சு) 17:11, 19 மார்ச் 2014 (UTC)
ஆழி 1ல் உள்ள வழு குறித்து
தொகுவழுவை சரி செய்துவிட்டேன். நன்றி --ச.பிரபாகரன் (பேச்சு) 16:14, 20 மார்ச் 2014 (UTC)
கட்டுரையையும் படத்தையும் பதிவேற்றம் செய்துவிட்டேன் எப்படி கட்டுரையுடன் படத்தை சேர்ப்பது
தொகுகட்டுரையையும் படத்தையும் பதிவேற்றம் செய்துவிட்டேன். எப்படி கட்டுரையுடன் படத்தை சேர்ப்பது தயவு கூர்ந்து தெரிவிக்கவும்
- கோப்பின் பெயரை, முதலில் நகலெடுத்துக் கொள்ளவும்.
- பின்பு, கீழுள்ள விக்கிநிரல்கள் என்பதில் 3வதாக உள்ள [[|150px|{{PAGENAME}}|thumb|right]] என்பதை அழுத்தவும்.
- இப்பொழுது உங்களின் தொகுத்தல் திரையில், ஒரு சிறுகோடு மறைந்து மறைந்து தோன்றும். (150 என்ற எண்ணுக்கு முன்னால்)
- நகலெடுத்த கோப்பின் பெயரை அதனுள் ஒட்டவும்.
- பிறகு முன்தோற்றம் கண்டு, சேமிக்கவும்.
--தகவலுழவன் (பேச்சு) 08:29, 24 மார்ச் 2014 (UTC)
- நான் உருவாக்கும் கட்டுரை பக்கங்களை சிரியதகவல்களை வண்ண கட்டங்களுடன்(பெட்டி) அழகாக தொகுக்க விரும்புகிறேன்.
வண்ணக்கட்டங்களை எப்படி உருவாக்குவது.தயவு கூர்ந்து உதவுங்கள்.
நண்பரே,நாம் உருவாக்கும் பக்கத்தில் வண்ண எழுத்துக்கள் மற்றும் சிறு கட்டங்களுடன் செய்திகளை எப்படி தொகுப்பது உதவுங்கள்.
- நீங்கள் தொகுத்துக்கொண்டு இருக்கும் பக்கம், விக்கிப்பீடியா என்ற கட்டுரைப் பகுதிக்குரியது. நீங்கள் புதியவர் என்பதால், இங்கு இக்கட்டுரை உருவாக்கப்படும் வரை வழிகாட்டப்படுவீர்கள். எந்த விக்கிக் கட்டுரையும் வண்ணங்களில் எழுதக்கூடாது. எனது பயனர் பக்கம் என்பதால், அதனைப் பயன்படுத்துகிறேன். நீங்களும் உங்கள் பயனர் பக்கத்தை, அதுபோல நகலெடுத்து, உருவாக்கிக் கொள்ளலாம். எனவே, கட்டுரையினை வளருங்கள். அதுவரை வண்ணங்கள் வேண்டாம். உங்கள் கட்டுரையை ஆவலாக படித்து வருகிறேன். எனவே, தயவுசெய்து கட்டுரையை விரிவாக்கவும்.ஏரியூர்-சுஞ்சல்நத்தம் உருவாக்கி முடித்தவுடன், கூறவும். பல நிழற்படங்கள் இணைக்கலாம். ஊர்கோவில், மசூதி, பஞ்சாயித்து அலுவலகம், சர்சு, பேருந்து நிலையம், இரயில் நிலையம், கல்லுடைக்கும் தொழிலாளி, கல்லுடைப்பவரின் கருவிகள்..இதுபோன்ற படங்களே பிறநாட்டவர் விரும்பி காண்பர். பொதுவகத்தில் பதிவேற்றுவதில் இடர் இருப்பின், இங்கேயே பதிவேற்றவும். பிறகு அதனை இணைந்து மேம்படுத்துவோம். ஆவலுடன். வணக்கம்--தகவலுழவன் (பேச்சு) 06:59, 26 மார்ச் 2014 (UTC)
CSVLoader on Wiktionary
தொகுHi, sorry for writing in English, I saw that you have been using CSVloader plugin for AWB to create new entries on Wiktionary.
How do you create entries that start with a lower case letter (like constant of aberration, for example)? When I use CSVLoader it automatically converts them to upper case (for example, it would create an entry Constant of aberration).
I saw that Ganeshk on Wikipedia introduced automatic capitalization in version 1.0.0.15., are you using the one before that (1.0.0.14.)? If so maybe you could send it to me via email? That would be great! (I would need to make an email for my wiki account first though.) Neitrāls vārds (பேச்சு) 11:08, 28 மார்ச் 2014 (UTC)
- Thanks for asking. I am not having the older version CSV loader. Now, I am using a google spreadsheet uploader. My friend designed it. So, I am not in a need of AWB now. If you like to know about it, convey your message here. Bye!--தகவலுழவன் (பேச்சு) 12:54, 29 மார்ச் 2014 (UTC)
- Right now I would prefer to use AWB, so I hope User:Ganeshk (the creator of CSVLoader) will get back at me. (In the meanwhile I have many country names that I can do because they require upper case.) Anyways, thanks for the information! Neitrāls vārds (பேச்சு) 19:47, 29 மார்ச் 2014 (UTC)
- I saw the CSVLoader talk page. I too hope. May i know, in which language Wiktionary, your are going to contribute?--தகவலுழவன் (பேச்சு) 01:51, 30 மார்ச் 2014 (UTC)
தெலுங்கு பகுப்புகள் தேவை
தொகுஉணவுப் பொருட்கள், இயற்கைச் சொற்கள், காய்கறிகள் ஆகிய பகுப்புகள் தெலுங்கு மொழிக்குத் தேவை என்றுக் கேட்டிருந்தேன்...இறையியல், இந்துவியல், சமூகச்சொற்கள், அரசியல் போன்ற பகுப்புகளும் தேவைப்படும்..அந்தந்தப் பக்கங்களிலும், என் பேச்சுப்பக்கத்திலும் ஏற்கனவே இதற்கான கோரிக்கை இருக்கிறது..--Jambolik (பேச்சு) 23:55, 3 ஏப்ரல் 2014 (UTC)
விண்ணப்பம்
தொகுஉங்களை நேர் காண விரும்புகிறேன்.. மா.ஜெயகோபி +919444449575 மகிழ்ச்சி. சனியன்று இரவு 7மணிக்கு பிறகு, சந்திப்போம். எனது எண்90 95 34 33 42--தகவலுழவன் (பேச்சு) 07:27, 18 ஏப்ரல் 2014 (UTC)
- உங்களுடன் உரையாடியதில் மகிழ்ச்சியே.--தகவலுழவன் (பேச்சு) 05:54, 3 சூலை 2014 (UTC)
வணக்கம்!
தொகுதகவலுழவன், வணக்கம், நலமா? பணியழுத்தம் தொடர்வதால், அண்மையில் நான் அதிகம் பங்களிக்க இயலவில்லை. இன்னும் ஓரிரு மாதங்களில் சற்றேனும் பங்களிக்க இயலும் என நம்புகிறேன். உங்களை விரைவில் ஒரு நாள் அழைக்கிறேன். நன்றி பழ.கந்தசாமி (பேச்சு) 05:51, 3 சூலை 2014 (UTC)
- அனைவரும் நலமாக இருப்பீர்களென்றே எண்ணுகிறேன். இயல்பான எனது வாழ்க்கையில் முன்னேற்றமே. உங்களைச் சந்திக்கும் நாளை ஆவலுடன் எதிர்நோக்குவேன்.--தகவலுழவன் (பேச்சு) 05:53, 3 சூலை 2014 (UTC)
விக்சனரி 3.js
தொகுதகவலுழவன் அவர்களே! நான் பயனர்:Shrikarsan/add template bracket.js என்பதை பயனர்:Shrikarsan/விக்சனரி 3.js என்ற தலைப்பிற்கு நகர்த்தியுள்ளேன். உங்களது common.js இல்
importScript('பயனர்:Shrikarsan/add template bracket.js');
என்ற வரியைநீக்கிவிட்டு
importScript('பயனர்:Shrikarsan/விக்சனரி 3.js');
என்ற வரியை இணையுங்கள். நன்றி!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:34, 19 ஆகத்து 2014 (UTC)
- சரிங்க! ஆனால், இந்த 1,2,3 என்பன தற்காலிமானது தான். அனைத்தையும் விரைவில் ஒரே விக்சனரித் தொகுப்பானாக மாற்றி அனைத்து மொழியினருக்கும் கொடுக்க உள்ளோம். அப்பொழுது ஆங்கிலபக்கமே உதவும்.தேவையெனில் உகந்த பெயரும், உகந்த படமும் பிறகு தீர்மானித்துக் கொள்ளலாம்.--தகவலுழவன் (பேச்சு) 11:42, 19 ஆகத்து 2014 (UTC)
உதவி...
தொகுவணக்கம்! The Living Legend award - இதனை எங்ஙனம் மொழிபெயர்ப்பது? உதவுங்கள்! --Selvasivagurunathan m (பேச்சு) 14:59, 6 திசம்பர் 2014 (UTC)
- Legend என்ற சொல்லின் மூலம் இலத்தீன். இதற்கு 'கற்க வேண்டிய புதுமை' என்றும் பொருள் கூறலாம். 'மனிதருள் மாணிக்கம்' என்று நாம் கூறுவது போல, மேற்கத்திய கலச்சாரத்தில், கலைத்துறையில் இச்சொற்றொடரை பயன்படுத்துகின்றனர். 'இசை ஞானி இளையராசா' என்பதிலுள்ள, 'ஞானி', என்பது, இதனையே குறிக்கிறது என எண்ணுகிறேன். 'நிகழ்கால ஞான விருது' என்றோ, 'வாழும் மாகலைஞன் விருது' என்றோ கூறலாமென்று எண்ணுகிறேன். பிறரின் எண்ணங்களையும் அறியக் கோருகிறேன். வணக்கம்--தகவலுழவன் (பேச்சு) 16:02, 6 திசம்பர் 2014 (UTC)