பயனர் பேச்சு:Mdmahir/lang-names-to-tamil.js

மாகிர் பேச்சு:பிரான்சியம் என்னும் பக்கத்தில் பவுல் ஐயா கொடுத்த பெயர்களைப் பாருங்கள். மிகப் பெரும்பாலானவற்றுக்கு இப்பெயர்களைப் பயன் படுத்தலாம் என்று ஒரு பொது உணர்வு உள்ளது இவற்றில் சில மாறுபடலாம். Danish என்று ஆங்கிலத்தில்ல் அழைத்தாலும், தமிழில் டேனியம் என்பது பொருந்தும்.அவர்கள் தங்கள் மொழியை Dansk டேன்சிக் என்பதுபோல அழைக்கிறார்கள். இதே மொழியை எசுப்பானியர் டானெ என்கிறார்கள், பிரான்சு நாட்டினர் டான்வா என்கிறார்கள். ஆகவே நம் மொழிக்கு உகந்தவாறு டேனியம் அல்லது இடேனியம் எனலாம். அடுத்து மொழி வரிசை எப்படி இருக்க வேண்டும் என்றும் கருதலாம்--செல்வா 14:26, 26 ஆகஸ்ட் 2010 (UTC)

மிகப்பெரும்பாலும் சரியாக உள்ளன, ஆனால் சில மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளன. Deutsch (the so-called German) என்பதை இடாய்ச்சு என்றே எழுதுகிறோம். இம்மொழியை பிரான்சியர் ஒரு விதமாகவும் இன்னும் பலர் பல விதமாகவும் அழைக்கின்றனர். அம்மொழியாளர், தங்கள் மொழியை ஒலிக்கும் விதத்துக்கு நெருக்கமாக இருப்பது நல்லது. Danish என்பதை டேனியம் என்று எழுத வேண்டும். Persian என்பதைப் பாரசீகம் என்பது பொருத்தமானது (பெர்சியம் வேண்டாம்) (அவர்கள் Farsi என்கின்றனர்). Bhojpuri என்பதை போச்பூரி அல்லது போச்பூரியம் எனலாம். வேறு சிலவற்றைப் பற்றி விரைவில் எழுதுகிறேன். --செல்வா 17:19, 14 டிசம்பர் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mdmahir/lang-names-to-tamil.js&oldid=1346610" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the user page of "Mdmahir/lang-names-to-tamil.js".