பேச்சு:பிரான்சியம்
மாகிர் என்னூம் பயனர் உருவாக்கிய வார்ப்புரு_பேச்சு:fr என்னும் பக்கத்தில் இட்டிருந்த கருத்தை அவர் விருப்பத்துக்கு இணங்க் இங்கும் இடுகின்றேன் (சிறு மாற்றங்களுடன்).
பிரான்சு நாட்டில் பேசும் மொழி பிரான்சியம். பிரஞ்சு, பிரெஞ்சு ஆகிய சொல்வடிவங்களுக்கும் வழிமாற்றுகள் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில், ஆங்கிலேயர்கள் French (/fɹɛntʃ/) என்றாலும் பிரான்சு நாட்டவர் தங்கள் மொழியை வ்'றா*ன்சே (/fʁɑ̃.sɛ/) என்கிறார்கள் (இதில் றா* என்பது அவர்களுக்கே உரித்தான அடித்தொண்டை றகரம்). வி'ரான்சே என்பதற்கு மாறாக நாம் பிரான்சியம் என்கிறோம். பிரெஞ்சு என்பது pirenju என்று ஒலிக்கும். pirenchu என்று ஒலிக்க வேண்டுமெனில் பிரெஞ்ச்சு என்று ஒரு ச் கூட்டி எழுத வேண்டும். பிரான்சியம் என்பது எளிது. பிரான்சு என்பதோடும் நெருக்கமானது.--செல்வா 17:52, 4 ஆகஸ்ட் 2010 (UTC)--செல்வா 23:52, 4 ஆகஸ்ட் 2010 (UTC)
- மேலும் ஒவ்வொரு மொழியாளரும் ஒவ்வொரு விதமாக, தங்கள் மொழிக்கு உகந்தவாறு அழைக்கிறார்கள். எடுத்துக்காட்டாக பிரான்சு நாட்டுக்கு அருகே இருக்கும் இடாய்ச்சு மொழியாளர் französisch என்கிறார்கள், எசுப்பானிய மொழியாளர் francés என்கின்றனர். மற்ற மொழியாளர் கூறும் பெயர்களைப் பார்க்க இப்பக்கம் செல்க--செல்வா 23:58, 4 ஆகஸ்ட் 2010 (UTC)
- //ஒவ்வொரு மொழியாளரும் ஒவ்வொரு விதமாக, தங்கள் மொழிக்கு உகந்தவாறு அழைக்கிறார்கள்.// என்பது மிகவும் தொலைநோக்குள்ள சீரியக் கருத்து. நன்றி--த*உழவன் 01:00, 5 ஆகஸ்ட் 2010 (UTC)
மொழிகளின் ஒலிபெயர்ப்பை இப்படி அமைக்கலாமா? விக்சனரி ஆக்குநர்களுக்கு ஒரு முன்மொழிவு
தொகு- செல்வா, பிரான்சியம் என்பது நல்ல ஒலிப்பு என்றே கருதுகிறேன். அதுபோல, "அம்", "இயம்" என்னும் விகுதிகள் கொடுத்து மொழிப்பெயர்களைத் தமிழ்ப்படுத்துவது நல்ல முறை. ஆங்கில விக்கி தருகின்ற மொழிப்பட்டியல் இதோ: உலக மொழிகள். அதில் பேரெண்ணிக்கையான மக்கள் பேசுகின்ற மொழிகள் வரிசையாகத் தரப்பட்டுள்ளன. நூறு மில்லியனுக்கு மேலிருந்து தொடங்கி, குறைந்த அளவு 10 மில்லியன் வரை எண்ணிக்கையில் அமைந்த மக்கள் பேசுகின்ற மொழிகளை விக்கியைப் பின்பற்றி அடியில் தருகின்றேன். அவற்றின் தமிழ் ஒலிப்பு இவ்வாறு அமையலாம் என்பது என் கருத்து. வேறு வடிவங்கள் அமைக்கலாம் என்றால் தெரிவியுங்கள்.
- (ஆங்கில வடிவில்)மொழிகளின் பெயர்களும் - அவற்றிற்கு இணையான தமிழ் ஒலிபெயர்ப்பும் இதோ -
Mandarin Chinese: சீனம் (மந்தரிய சீனம்)
Spanish: எசுப்பானியம்
English: ஆங்கிலம்
Urdu/Hindi: உருது/இந்தி
Arabic: அரபி/அராபியம்
Bengali: வங்காளம்
Portuguese: போர்த்துகீசியம்
Russian: உருசியம்
Japanese: எப்பானியம் நிப்பானியம்/யாப்பானியம்?
German: செருமானியம்/இடாய்ச்சு
Javanese: யாவானியம்
Punjabi: பஞ்சாபி/பஞ்சாபியம்
Wu: சீனம் (வூ சீனம்)
French: பிரான்சியம்
Telugu: தெலுங்கு
Vietnamese: வியத்நாமியம்
Marathi: மராத்தி/மராத்தியம்
Korean: கொரியம்
Tamil: தமிழ்
Italian: இத்தாலியம்
Turkish: துருக்கியம்
Cantonese/Yue: சீனம் (கந்தோனியம்/யூ சீனம்)
Tagalog (including Filipino): தகலாகியம் (பிலிப்பீனம்)
Gujarati: குசராத்தி/குசராத்தியம்
Min: சீனம் (மின் சீனம்)
Maithili: மைத்திலியம்
Polish: போலாந்தியம்
Ukranian: உக்கிரேனியம்
Malay: மலாயம் மலாய்??
Bojpuri: போசுபுரியம் போச்பூரியம்??
Xiang: சீனம் (சியாங் சீனம்)
Malayalam: மலையாளம்
Kannada: கன்னடம்
Sunda: சுண்டம்
Burmese: பர்மியம் (பர்மீயம்)
Oriya: ஒரியம் ஒரியா??
Persian: பெர்சியம் பாரசீகம்??
Hakka: சீனம் (அக்க சீனம்)
Hausa: அவுசம்
Romanian: உரோமானியம்
Indonesian: இந்தொனேசியம் இந்தோனேசியம்??
Azerbaijani: அசர்பைசானியம்
Dutch: நெதர்லாந்தியம்
Gan: சீனம் (கான் சீனம்)
Thai: தாயியம் தாய்லாந்தியம்??
Yoruba: யொரூபம்
Sindhi: சிந்தி (சிந்தியம்)
Pashto: பாசுதியம் பாசுத்தோ/பாசுத்தோனியம்??
Uzbek: உசுபெக்கியம்
Igbo: ஈபோ
Saraiki: சரைக்கியம்
Amharic: அம்காரிக்கியம்
Nepali: நேப்பாளியம்
Serbo-Croatian: செர்போ குரோயேசியம்
Kurdish: குருதியம்
Cebuano: செபுவானியம்
Assamese: அசாமியம்
Malagasy: மலகாசியம்
Hungarian: உங்காரியம்
Zhuang: சீனம் (சுவாங் சீனம்)
Madurese: மதுரையம்
Singalese: சிங்களம்
Greek: கிரேக்கம்
Fula/Fulfulde: பூலம்
Czeck: செக்கியம்
Shona: சோனம்
Oromo: ஒரோமம்
- 10 மில்லியனுக்குக் குறைந்த எண்ணிக்கையில் பேசுவோர் இருந்தாலும் குறிப்பிடத்தக்க மொழிகள் சில கீழே வருகின்றன -
Somali: சோமாலியம்
Zulu: சூளு
Quechua: கெச்சுவம்
Kazak: காசாக்கியம்
Tibetan: திபெத்தியம்
Haitian Creole: எயித்தி கிரயோலம்
Belarusian: பெலரூசியம்
Swedish: சுவீதியம்
Bulgarian: புல்காரியம்
Khmer: கிமேரியம்
Xhosa: கோசம்
Balochi: பலோசியம்
Afrikaans: ஆப்பிரிக்கானியம்
Hebrew: எபிரேயம்
Catalan: எசுப்பானியம் (கத்தலானியம்)
Turkmen: துருக்குமேனியம்
Kongo: கோங்கோ
Tajik: தசீக்கியம்
Santali: சாந்தாலியம்
Albanian: அல்பானியம் (அல்பேனியம்)
Armenian: அருமேனியம்
Mongolian: மங்கோலியம்
Danish: தேனியம்
Tatar: தாத்தாரியம்
Slovak: சுலோவாக்கியம்
Swahili: சுவாகிலி(யம்)
Romani: உரோமானியம்
Norwegian: நொர்வேசியம்
Tibetan: திபெத்தியம்
Kashmiri: கசுமீரியம்
Konkani: கொங்கணி
Balinese: பாலினேசியம்
Yiddish: இதீசியம்
Lithuanian: இலுத்துவானியம்
Gondi: கோந்தியம்
Lingala: இலிங்காளம்
Latvian: இலாத்வியம்
Basque: பாசுகியம்
Naga: நாகம்
Welsh: வெல்சியம்
Maltese: மால்தேசியம்
Corsican: கோர்சிகியம்
Samoan: சமோவம்
Irish: அயர்லாந்தியம்
Icelandic: அய்சுலாந்தியம்
Maori: மவோரியம்
Tahitian: தகீத்தியம்
Tongan: தோங்கியம்
Sanskrit: சமசுகிருதம்
Esperanto: எசுபெராந்தம்
- இரண்டு ஆட்கள் மட்டுமே பேசும் மொழி Ter Sami என்றுள்ளது. அதைத் தமிழில் தெர்சாமியம் என்றால் எப்படி?
:)--பவுல்-Paul 02:33, 5 ஆகஸ்ட் 2010 (UTC)
ஆகா! அருமை! அருமை! ஒன்றிரண்டைத்தவிர மற்றதெல்லாம் அப்படியே நீங்கள் பரிந்துரைத்த படியே இருப்பது பொருத்தமாகவும் சீராகவும் அழகாகவும் இருக்கும் !! அந்த ஒன்றிரண்டும் இதே போல அழகாக இருந்தாலும் வேறு காரணங்களுக்காக சிறிது மாற்றலாம் என நினைக்கின்றேன். சப்பான் நாட்டு மொழியை எப்பானியம் என்பதற்கு மாறாக நிப்பானியம் (அவர்கள் மொழியை நிப்பான், நிஃகோன் என்றிறார்கள்). யாப்பானியம் என்ரும் கூறலாம். என் பரிந்துரை நிப்பான் மொழி நிப்பானியம். அதே போல சிலவற்றுக்கு அம், இயம் இல்லாமலும் இரு முறையாக இருக்கலாம். எ.கா. மராத்தி, குசராத்தி, ஒரியா (இவை மராத்தியம், குசராத்தியம், ஒரியம் என்று முறை சார்ந்தும் இருக்கலாம்) இப்படி அம், இயம் என்று சேர்த்துச் சொல்லிப் பழகினால், கூடவே மொழி என்ற சொல் சேர்க்காமலே அது மொழி என விளங்கும். என் மாற்றுப் பரிந்துரையை அருகே இட்டிருக்கின்றேன் (கேள்விக்குறியுடன்). மிக்க நன்றி.--செல்வா 02:55, 5 ஆகஸ்ட் 2010 (UTC) பிறவற்றைப் பின்னர் பகிர்கிறேன்...--செல்வா 02:55, 5 ஆகஸ்ட் 2010 (UTC)
- செல்வா,நிப்பானியம் சிறப்பாக உள்ளது. இந்திய மொழிகளான மராத்தி, குசராத்தி போன்றவை குறித்து நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கும் உடன்படுகிறேன். Pashto மொழியை Afghani எனவும் அழைக்கின்றனராம். அப்படியென்றால் தமிழில் "ஆப்கானியம்" என்றே கூறலாமோ?
Thai என்பது தமிழில் "தாய்" என்னும் சொல்லோடு குழம்பக்கூடும். எனவே "தாய்லாந்தியம்" பொருத்தமாகலாம். "மலாய்" என்பதைவிட "மலாயம்"?? பாரசீகம் நாட்டைக் குறிக்க தமிழில் வழங்குவதுதான். மொழிக்கும் அதைப் பொருத்தலாம்.
மொழியாக்கம் தொடரட்டும்!--பவுல்-Paul 05:00, 5 ஆகஸ்ட் 2010 (UTC)
பாரசீகம் என்பது அவர்கள் தங்கள் மொழியை வா'ர்சி (Farsi) என்கிறார்கள், அதனால். ஆப்கானில் பல மொழிகள் உள்ளன. ஆகவே ஆப்கானியம் பொருந்துமா எனத் தெரியவில்லை (சரி பார்க்கப்பட வேண்டும்; பொருந்தக்கூடியதாக இருக்கலாம்). பச்^ட்டோ என்பதைப் பட்டோ, பட்டானியம் என்றும் சொல்லலாம். --செல்வா 05:06, 5 ஆகஸ்ட் 2010 (UTC)