Parthi
வாருங்கள், Parthi!
விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--ரவி 12:08, 17 ஜூலை 2006 (UTC)
குறிப்பு
தொகுபார்த்தி, உங்கள் பங்களிப்பு கண்டு மகிழ்ச்சி. விக்சனரியில் சொல் உள்ளிடும் முறைக்கு ஏற்ப சிறு மாற்றம் செய்துள்ளேன். அந்த மாற்றத்தை இங்கு கவனிக்கவும்--ரவி 05:35, 29 ஜனவரி 2007 (UTC)
வார்ப்புரு பயன்பாடு
தொகு- அதிமதுரம் என்பதில் படங்களையும், சிலமாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளேன். உங்களின் கருத்தறிய ஆவல்.
- நீங்கள் எத்துறையில் ஈடுபாடு கொண்டவர் என தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். துறைசார்ந்த வல்லுனர்களின் வழிகாட்டல் இருப்பின் மேலும் தமிழ் விக்சனரியை மேம்படுத்தலாம் என்றே எண்ணுகிறேன்.
- வார்ப்புரு என்பது திரும்ப திரும்ப பயன்படுபவைகளுக்கான கட்டுமானப் பெட்டி. இதனால் பிழைகள் தவிர்க்கப்படும். புதியவர்களும் எளிமையாக செயல்பட உதவும். ஆனால், ஓரிரு சொற்களுக்குத் தேவைப்படுபவைகளை, வார்ப்புருக்களாக உருவாக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
தொடர்ந்து வருக.. அவ்வப்போது எனது எண்ணங்களைத் தெரிவிக்கிறேன். வணக்கம்--த*உழவன் 00:14, 3 ஜனவரி 2011 (UTC)