பல சொற்கள் உருவாக்குவது கண்டு மகிழ்ச்சி!நீங்கள் ஒரு நிரலர் என்பதால், 100% சிறப்பாக தங்கள் பதிவுகள் இருக்க வேண்டுமென்று எண்ணுகிறேன். அதனால் நான் செய்துள்ள மாற்றங்களைக் காணுங்கள். என்னை தொடர்பு கொள்ளவும். நான்தரும் குறிப்புகளை சீர்தூக்கி பார்த்துவிட்டு வேகம் கூட்டவும். பல சொற்களுக்கு அடித்தளங்கள் தேவைப்படுகின்றன. அதனை நாம் இணைந்து அமைத்து விட்டு, மளமளவென்று பதிவேற்றி விடுவோம்.-- உழவன் +உரை.. 13:27, 8 அக்டோபர் 2013 (UTC)Reply

கண்டிப்பாக நண்பரே வேகத்துடன் தரமும் தேவை. நிச்சயம் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்படி எனது நடவடிக்கைகள் அமையும். --ராஜு சரவணன் (பேச்சு) 13:36, 8 அக்டோபர் 2013 (UTC)Reply

படம்

தொகு
 
களாத்தி

இது நேபாளத்தில் பயன்படுத்தப்படும் கருவி என கூறப்பட்டுள்ளது. இங்கு பிற வேளாண்மை கருவிகளைக் காணலாம்.எப்படத்தையும் அப்பகுதியில் தேடிப்பாருங்கள். இல்லையேல், இங்கு படமிடுங்கள். நான் முடிந்தவரை இப்படிதான் இணைப்பேன். முடியவில்லையாயின், நண்பனின் கருவிகொண்டு நானே எடுப்பேன். அப்பதான் பிறர் காப்புரிமை என்று கூறி நீக்காமல் இருப்பர்.-- உழவன் +உரை.. 18:43, 8 அக்டோபர் 2013 (UTC)Reply

இணைவோம்

தொகு

தமிழை தூக்கியெறிவதைக் கண்டு வெதும்பி, மனம் குமுறியவர்களில், உங்களைப் போல நானும் ஒருவன். எனவே, இங்கு சேர்ந்து பல கட்டுரைகளை திருத்தி அறிவை வளர்த்துக் கொள்கிறேன். அடிக்கடி இங்கு தான் சுற்றிக் கொண்டிருப்பேன். கருவிகள், மொழியாக்கம், உதவி, சந்தேகம், கருத்து போன்ற எது இருந்தாலும் இதே பக்கத்திலேயே கேளுங்கள். மற்றவர்களின் பேச்சுப் பக்கங்களிலும் கேட்கலாம். எனக்கு தெரிந்தவரை விடை கூறுவேன். உங்கள் யோசனைகளையும் கூறுக! இணைவோம். விக்கிப்பீடியா என்ற திட்டத்திற்கும் வருக! அங்கே கட்டுரைகள் எழுதப்படுகின்றன. உங்கள் விருப்பத் துறைகளில் எழுதலாம். :) செய்ய வேண்டியன நிறைய உள்ளன. இணைவோம். நன்றி! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:51, 18 அக்டோபர் 2013 (UTC)Reply

நன்றி நண்பரே. நிச்சயம் கட்டுரை பக்கம் வரவேண்டிய வேலை உள்ளது. அதற்கு முன்னர் விக்சனரியில் எடுத்த சில முக்கிய வேலைகள் முடிக்கவேண்டியுள்ளது. முடிந்ததும் அடுத்த இலக்கு கட்டுரைகள் தான்.மேலும் உங்களின் பேச்சும் உதவும் மனப்பான்மையும் எனக்கு நல்ல ஊக்கத்தை கொடுக்கிறது. --ராஜு சரவணன் (பேச்சு) 16:23, 18 அக்டோபர் 2013 (UTC)Reply

பொதுவகம்

தொகு

வேண்டுகோளுக்கு இணங்க படங்களை இணைத்தமைக்கு நன்றி. உங்கள் படங்களை பொதுவகத்தில் பதிவேற்றி விட்டு இங்கு நீக்கி விடலாம்.உரிய மாற்றங்களை மின்னஞ்சலில் அனுப்புகிறேன்--தகவலுழவன் (பேச்சு) 03:39, 3 சூலை 2014 (UTC)Reply

அண்மைய மாற்றங்கள்

தொகு

மின்னஞ்சலில் கூறியபடி 4 சொற்களில் மாற்றங்கள் ஏற்படுத்தினேன். {{subst:noun-ta என்று இருந்த தை {{subst:noun-ta| என மாற்றினேன். அதாவது பக்கவடிவ சூத்திரம், ஆங்கில விளக்கம்,தமிழ் விளக்கம் என அமைந்துள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒரு | (pipeline) கோடு பிரிக்கிறது. அப்பொழுது தான், பக்க வடிவம் தோன்றும்.மேலும் எதிளை என்ற சொல்லில் படமும், பகுப்பு ஒன்றும் இணைத்துள்ளேன். மேலும், நீங்கள் கூறிய படி முதலில், தரவேற்றம், அடுத்து தரமேற்றம். மின்னஞ்சலில் வழிகாட்டியமைக்கு நன்றி. வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 17:28, 13 ஆகத்து 2014 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Raju_Saravanan&oldid=1884690" இலிருந்து மீள்விக்கப்பட்டது