பேரன்புடைய திரு. இரவி அவர்களே,
தங்கள் அருமையான இந்த முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எனக்குத் தற்போது சில தேர்வுகள் இருப்பதால் இன்னும் 2-3 மாதங்களுக்குள் வந்து என்னாலியன்ற பங்களிப்பைத் தருவேன் என்று அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பு, பாசம் மற்றும் நன்றிகளுடன்,
காசிகணேசன் ரங்கநாதன்.
வருக
தொகுவாருங்கள், Ranganath73!
விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
ரங்காநாத், உங்கள் செய்தி கண்டு மகிழ்ந்தேன். உங்கள் தேர்வுகளை நன்றாக முடித்து விட்டு வாருங்கள். நீங்கள் தட்டச்சு செய்தது சரியாக தெரியவில்லை. அதை http://www.suratha.com/reader.htm என்ற தளத்தை பயன்படுத்தி புரிந்து கொண்டேன். Unicode தமிழில் தட்டச்சு செய்தால் மட்டுமே அவற்றை இத்தளத்தில் படிக்க முடியும். unicode தமிழ் தட்டச்சு உதவிக்கு இந்தப்பக்கத்தை படிக்கவும்.--ரவி (பேச்சு) 14:57, 9 அக்டோபர் 2005 (UTC)