வாருங்கள், Sivakumar!
விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
நீங்கள் விக்கிபீடியாவில் தற்பொழுது இயங்கி வரும் அதே சிவக்குமார் என நம்புகிறேன் :) --ரவி (பேச்சு) 09:02, 9 செப்டெம்பர் 2005 (UTC)
பெயரிடல் மரபு
தொகுசிவகுமார், இங்கு தோள் கொடுக்க நீங்கள் வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. விக்கிபீடியாவில் உள்ளதை விட இங்கு அதிக அளவில் பக்கங்களை சிரமமில்லாமல் உருவாக்கித் தள்ளலாம் என்பது ஒரு வசதி :) மிக முக்கியமான ஒன்று. ஆங்கில சொற் தலைப்புகளில் உருவாக்கும் போது முதல் எழுத்தை capital letter ஆக எழுதாதீர்கள். ஏனெனில் art என்பது ஆங்கில சொல், Art என்பது ஜெர்மானிய சொல். விக்சனரி பன்முக அகராதி என்பதால், இதை கருத்தில் கொண்டு ஆங்கில சொற் தலைப்புகளை முழுவதும் small letterகளிலேயே உருவாக்கவும். ஏற்கனவே நீங்கள் உருவாக்கிய பக்கங்களை பின்னர் நம் யாருக்கேனும் நிர்வாகி அனுமதி கிடைக்கும் போது அழித்து விட்டு உள்ளடக்கங்களை தகுந்த பக்கங்களுக்கு நகர்த்தலாம்.--ரவி (பேச்சு) 06:06, 11 அக்டோபர் 2005 (UTC)
- சரி, ரவி தவறுக்கு வருந்துகிறேன். -சிவகுமார் 15:59, 11 அக்டோபர் 2005 (UTC)
ஆ..தவறெல்லாம் ஒன்றும் இல்லை. வருந்தவும் வேண்டாம் :) நானும் சிலப் பக்கங்களை இது மாதிரி உருவாகினேன். அப்புறம் தான் ஆங்கில விக்சனரியில் இருந்து இந்த பெயரிடல் மரபு தெரிய வந்தது.--ரவி (பேச்சு) 18:57, 11 அக்டோபர் 2005 (UTC)
while u give meaninig entries please use # sign instead of * sign for making list even if there is only one entry for meaning. lets make this MOS (Manual of style) as followed in en wiktionary. please don mind me mentioning small things like this..since we are starting wiktionary from scratch its better we take care of small things rather than spending more time on correcting it later. also see விக்சனரி:நடைக் கையேடு --ரவி (பேச்சு) 18:32, 12 அக்டோபர் 2005 (UTC)
check விக்சனரி:ஆலமரத்தடி
தொகுhi, check விக்சனரி:ஆலமரத்தடி for my recent message about preloaded templates. I kindly order u to spend 10 minutes here atleast to create few word entries :). I am sure that with the new template u can create pages at the minimum rate of 3 pages per minute :) also kindly vote for me at the beuraucrat elections for this wiktionary at விக்சனரி:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் right now we don have any administrator here and we really need it to give a face lift to wiktionary and start promoting it aggressively like wikipedia. i foresee faster development for wiktionary since contributing here is very easy and quick.--ரவி (பேச்சு) 20:05, 12 அக்டோபர் 2005 (UTC)
நன்றி
தொகுவாழ்த்துக்களுக்கு நன்றி, சிவக்குமார். (உங்களை சிவா என அழைக்கலாமா?).ஆனால் தேர்தல் முடிந்த பிறகு ஓட்டு போட்டிருக்கிறீர்கள் :) நேற்று கொஞ்சம் மெனக்கெட்டு மீடியாவிக்கி பக்கங்களை தமிழ்படுத்தியதால் விக்சனரி பக்கங்களில் தமிழை காண நன்றாக இருக்கிறது. உங்களுக்கு நேரமும் ஆர்வமும் இருக்கும் பட்சத்தில் நீங்களும் நிர்வாகி ஆகி மீடியாவிக்கி பக்கங்களை விக்கிபீடியா தளத்தில் இருந்து வெட்டி ஒட்ட உதவலாம். இதை தானியங்கிப் பயனரை கொண்டும் செய்ய முடியும். இது குறித்து உதவுவதாக சுந்தர் சொல்லி இருக்கிறார். அப்புறம், நீங்கள் மளமளவென சொற்களை சேர்த்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 3000 சொற்கள் என்ற இலக்கு வைத்திருக்கிறேன். எட்ட முடிகிறதா பார்ப்போம்--ரவி (பேச்சு) 12:14, 24 அக்டோபர் 2005 (UTC)
accept nomination for adminship
தொகுsiva,, sure u can get the access to all pages :) thats why i asked ur help to improve the media wiki pages. i have nomintaed u for adminship at விக்சனரி:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள். please accept the nomination. its funny to conduct election when only very few people are here. but tomorrow soeone should not say that we have acted without democracy..so i will wait for a week (which is normal norm to conduct elections in wikimedia projects) and then make u admin..actually i feel all admins in wikipedia shd be given adminship here also to kickstart this project..ok till then, we shall add words as usual..sundar has come up with first version of a word submission code to ad lot of words to tamil wiktionary easily.hopefully it comes soon and will make our work easier.--ரவி (பேச்சு) 10:34, 25 அக்டோபர் 2005 (UTC)
Siva, sysop access enabled for u now. together lets make wiktionary a better place.--ரவி (பேச்சு) 10:37, 1 நவம்பர் 2005 (UTC)
tamil word template
தொகுsiva, the internal link for the ஆங்கிலம் shall be removed. internal link for a language name in the translation section shall be given only when the language is not so familiar. for example, check the word run in english wiktionary. then, in my humble opinion, the main purpose of wiktionary is to give tamil meaning of any word in any language including tamil. so it may not be ok to just add the english translation for tamil word without explaining the meaning in tamil even if the word is very obvious like அரசன். but adding tamil meaning for such obvious tamil words may be boring or difficult..so time being i hope we can concentrate in just english-tamil dictionary..until we develop a tamil-multi lingual dictionary people shall use தேடு button instead of செல் button to search english meaning for tamil words..but feel free to what u think about my viewpoint.--ரவி (பேச்சு) 10:51, 25 அக்டோபர் 2005 (UTC)
சில குறிப்புகள்
தொகுthick என்பதை பெயர்ச்சொல் (கவனக்குறை?) என்று நீங்கள் குறிப்பிட்டிருந்ததை மாற்றி உரிச்சொல்லாக குறிப்பிட்டுள்ளேன். சில சமயங்களில் ஒரு சொல் என்ன சொல் வகை என்று குழப்பம் நேரும் சமயத்தில் ஆங்கில விக்சனரி தளத்தையோ dictionary.com தளத்தையோ பார்க்கலாம். வெறும் பெயர்ச்சொல் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் பல சொற்களின் பிறப் பயன்பாடுகளை இத்தளங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அப்புறம், சொற்களுக்கு உள் இணைப்பு தரும் போது மூலச் சொல்லுக்கு மட்டும் தரலாம் எனக் கருதுகிறேன். எடுத்துக்காட்டாக, [[ஆழமான]] என்று தருவதற்கு பதில் [[ஆழம்|ஆழமான]] என்று தரலாம். இவ்வாறு தருவதால் ஒவ்வொரு வேற்றுமை உருபுடன் இணைந்து உருவாகும் தனித்தனி சொற்களுக்கு பக்கங்கள் உருவாக்க வேண்டிய சிரமத்தை தவிர்க்கலாம். எனினும் மெல்லிய என்ற சொல்லுக்கு [[மெல்லிய]] என்று உள் இணைப்பு தருவது பொருத்தமானதே. இது மாதிரியான விதி விலக்குகளும் உண்டு தான்.--ரவி (பேச்சு) 15:37, 26 அக்டோபர் 2005 (UTC)
Siva, hereafter, could u pls copy the meanings of the words in edit summary like sundar is doing? It really helps to know the details without needing to visit each page. I will also do so in future--ரவி (பேச்சு) 19:08, 8 நவம்பர் 2005 (UTC)
மீண்டும் உங்களை இங்கு பார்ப்பதில் மகிழ்ச்சி. எங்கேயும் ஓடி விடாமல் தொடர்ந்து இருங்கள் :)--ரவி 08:08, 18 ஜூலை 2006 (UTC)
entree
தொகுsee talk:entree--ரவி 21:59, 22 ஜூலை 2006 (UTC)
நன்றி
தொகுசிவா, என் அழைப்ப ஏத்து தினம் வந்து தைரியம் தர்றதுக்கு நன்றி ;) Wiktionary:அனைத்து மொழி விக்சனரிகளிலும் இருக்க வேண்டிய சொற்கள் பக்கத்தில் இருக்க சொற்களை முன்னுரிமை கொடுத்து தமிழாக்கலாம்--ரவி 12:11, 16 ஆகஸ்ட் 2006 (UTC)
வாக்குச் சேகரிப்பு
தொகுஇங்கு சென்று, பயனர் மாணிக்கத்தை தமிழ் விக்சனரி நிர்வாகியாகத் தேர்ந்தெடுப்பது குறித்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவும். நன்றி--ரவி 16:27, 31 ஆகஸ்ட் 2006 (UTC)
தர மேம்பாடு
தொகுசிவா, இன்று நூற்றுக் கணக்கில் சொற்கள் சேர்க்கப்பட்டாலும், புள்ளி விவரக் கணக்கு காட்டும் சொற்கள் எண்ணிக்கை அதற்கேற்றவாறு ஏறவில்லை. இதற்கான காரணத்தை சரியாகப் புரிந்து கொள்ள இயலாவிட்டாலும், ஒரு ஊகம் மட்டும் உண்டு. உள்ளிணைப்பு இல்லாத பக்கங்களை ஒரு அதிகாரப்பூர்வப் பக்கமாக விக்கி மென்பொருள் இனம் காணாது என நினைக்கிறேன். முன்னர் புதுப்பக்க வார்ப்புருக்களில் உள்ளிணைப்புக்கான [[]] குறிகளை தந்திருந்தேன். ஆனால், சில புதுப்பயனர்களால் அதன் பயன்பாட்டை சரியாகப் புரிந்து பயன்படுத்த இயலாததால் அதை அண்மையில் நீக்கினேன். இதனால் பல பக்கங்களில் உள்ளிணைப்பு இல்லை. எனவே நீங்கள் பிற பயனர் பக்கங்களை சரி பார்க்கும்போது, பொருத்தமான இடங்களில் உள்ளிணைப்புகளை தருமாறு வேண்டிக் கொள்கிறேன். இயன்ற அளவு ஆங்கில விக்சனரி, dictionary.com தளங்களில் இருந்து எடுத்ததுக்காட்டு வாசகங்கள், கூடுதல் பொருள்கள், சொற் பயன்பாடுகளை சேர்ப்பதும் விரும்பத்தக்கது. புதுப் பயனர்கள், விக்சனரியின் முழுமையான செயல்பாடு, தரக்கட்டுப்பாடு ஆகியவைகளை உள்வாங்கி நிறைவாகச் செயல்பட சிறிது காலம் பிடிக்கும். அது வரை நம்மைப் போன்றவர்கள் தர மேம்பாட்டில் கவனம் செலுத்துவது சரியாக இருக்கும். தேடல் பெட்டிகளில் தேடுபவருக்கு சொல் கிடைக்கிறதா என்பது தான் முக்கியம். ஆகையால், தற்பொழுதைக்கு சொற்கள் எண்ணிக்கை பிழையை குறித்து அதிகம் கவலைப்பட வேண்டாம் என நினைக்கிறேன். விக்சனரியின் அளவை உயர்த்திக் காட்டாமல் தர மேம்பாட்டில் ஈடுபடவும் இது நமக்கு அவகாசம் அளிக்கிறது. ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள சொற்களின் எண்ணிக்கை, உள்ளிணைப்புகள் ஆகியவையும் விக்கிமீடியாவால் தர அளவுகோள்காக கருதப்படுகின்றன. உள்ளிணைப்பு தரும்போது பக்கம் முழுக்க சிகப்பு இணைப்புகள் அப்பிக் கிடப்பது போல் இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இனி ஆங்கிலச் சொற்கள் போக, தமிழ்ச் சொற்களுக்கும் பொருள் சேர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அப்பொழுது தான் சிகப்பு இணைப்புகள் நீலமாக மாறும். இரண்டு நாட்கள் முன்னர் என் வலைப்பதிவில் விக்சனரி பற்றிய எழுதியதன் பயனாக விக்சனரிக்கு கூடுதல் கவனிப்பும் பங்களிப்பும் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன். உமாசுதனுக்கு அடுத்து இளஞ்சூறாவள் போல் இன்று அஜித் வந்து சேர்ந்திருக்கிறார் :)--ரவி 13:20, 8 செப்டெம்பர் 2006 (UTC).
பார்க்க
தொகுபார்க்க விக்சனரி:துப்புரவுக் கையேடு--ரவி 15:41, 15 செப்டெம்பர் 2006 (UTC)
:)
தொகுவிக்கிபீடியா 10,000 கட்டுரை நோக்கிப் பாயும்போது, விக்சனரியில் கடந்த 100 நாட்களில் 100 சொற்கள் கூட ஏற்றப்படவில்லை ;( ஒரு நாளைக்கு ஆளுக்கு 5 சொற்களாவது ஏற்ற வேண்டும். ஆளுங்க வந்து போனா எனக்கும் இங்க பங்களிக்க உற்சாகமா இருக்கும்.--ரவி 09:38, 7 மார்ச் 2007 (UTC)
- நீங்க திரும்ப வந்ததில் மகிழ்ச்சி. petrolக்கு ரோந்து என்று பொருள் இருக்கும் அளவுக்கு விக்சனரியின் துப்புரவு இருப்பது, விக்சனரியின் பயன்பாட்டை நகைப்புரியதாக்கி விடும் ;( . இன்றைய பேச்சுப் பக்க உரையாடல்கள் மகிழ்ச்சி அளிக்கிறது. அப்பப்ப வந்து போனா இங்க இருக்கவங்களுக்கும் தெம்பா இருக்கும் :) --ரவி 13:36, 21 ஏப்ரில் 2007 (UTC)
பங்களிப்பதன் மூலம் பங்களித்த பயனர் பெரும் பயன் பற்றி அறிய ஆவல். Hellocsrini 00:51, 12 மே 2007 (UTC)
மொழிப்பட்டை பற்றிய கருத்துக் கணிப்பு
தொகுபயனர்களின் கருத்து வேண்டப்படுகின்றது. ஒரு சொல்லின் மொழியை அறிவிக்கும் பட்டையை உருவாக்குவது பற்றி உங்கள் கருத்துகள் வேண்டப்படுகின்றது. இக் கருத்துக் கணிப்பு 4 நாட்கள் நடைபெறும் (சூன் மாதம் 8 ஆம் நாள்வரை)). மொத்தம் மூன்று கேள்விகள் உள்ளன. உங்கள் கருத்துகளைப் ஆலமரத்தடி என்னும் பக்கத்தில் பதிவு செய்யுங்கள். நன்றி.--செல்வா 15:08, 4 ஜூன் 2010 (UTC)
Your administrator status on the Tamil Wiktionary
தொகுHello. A policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc.) was adopted by community consensus in 2013. According to this policy, the stewards are reviewing activity on wikis with no inactivity policy. You meet the inactivity criteria (no edits and no log actions for 2 years) on the wiki listed above. Since that wiki does not have its own rights review process, the global one applies. If you want to keep your rights, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at m:Stewards' noticeboard, and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights. If you wish to resign your rights, you can reply here or request removal of your rights on Meta. If there is no response at all after approximately one month, stewards will proceed to remove your administrator and/or bureaucrat rights. In ambiguous cases, stewards will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact the stewards. Rschen7754 04:58, 11 பெப்ரவரி 2015 (UTC)