ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பாயிரம்(பெ)

  1. முகவுரை; முகப்புரை; அறிமுகவுரை; நோக்குரை
  2. பொருளடக்கம்
  3. வரலாறு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. preface, introduction, preamble, prologue
  2. synopsis, epitome
  3. origin; history
விளக்கம்
  • பாயிரத்தின் இலக்கணம் பற்றி நன்னூல் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
  • ஆக்கியோன் பெயரே வழியே எல்லை
நூல்பெயர் யாப்பே நுதலிய பொருளே
கேட்போர் பயனோடு ஆய் எண் பொருளும்
வாய்ப்பக் காட்டல் பாயிரத்து இயல்பே (நன்னூல் #47)
  • பாயிரத்தில் ஆக்கியோன் பெயர் (நூலின் ஆசிரியர் பெயர்), வழி (முதல்நூலா அல்லது வேறு நூலின் தழுவலா?), எல்லை (நூலின் கதை, சம்பவங்கள் நடக்கும் இடம் அல்லது எல்லை?), நூற்பெயர் (புத்தகத்தின் தலைப்பு). யாப்பு (நூலின் பாடல்கள் எழுதப்பட்ட இலக்கண அடிப்படை), நுதலிய பொருள் (நூல் கூறும் மையப்பொருள்), கேட்போர் (நூல் அரங்கேற்றப்பட்டபோது அதனைக் கேட்ட பெரியவர்கள்), பயன் (நூலைப் படிப்பதன் பயன்) ஆகியவை கூறுதல் இயல்பு.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • செறுமனத்தார் பாயிரங் கூறி (பழமொ. 165)
  • அருந்தமிழ்க்குப் பாயிரம் (சடகோபரந். 9)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பாயிரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :அணிந்துரை - பாசுரம் - முகப்புரை - அறிமுகவுரை - முகவுரை - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாயிரம்&oldid=1094993" இலிருந்து மீள்விக்கப்பட்டது