பிள்ளையார் சுழி

தமிழ்

தொகு
 
பிள்ளையார் சுழி:
இவரின் குறிப்பே பிள்ளையார்சுழி
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பிள்ளையார் சுழி, பெயர்ச்சொல்.
  • (பிள்ளையார்+சுழி)
  1. எழுதத் தொடங்குங்கால் மங்கலமாக வரையப்படும் 'உ' என்ற குறி
  • எந்தக் காரியம் தொடங்கினாலும், அது ஒரு தடையுமில்லாமல் வெற்றிகரமாக நடந்தேற பிள்ளையாரை வணங்கி/துதித்துவிட்டு தொடங்கவேண்டுமென்பது இந்துக்களின் மத நம்பிக்கையும், வாழ்க்கையின் நடைமுறையுமாகும்...பிள்ளையாரே உருவாக்கியதாகக் கருதப்படும் 'உ' என்னும் குறிக்கு பிள்ளையார்சுழி என்று பெயர்ச்சூட்டி, எதை எழுதத்தொடங்கினாலும் எழுதப்படும் நோக்கம்/காரியம் இனிதே வெற்றிகரமாக, நடந்தேற காகிதத்தின் தலைப்பகுதியின் நடுவே, இக்குறியை யிடுவர்...இந்த பிள்ளையார்சுழியின் அர்த்தங்களைப்பற்றி பற்பலக் கருத்துகள் உள்ளன...அவற்றை தமிழ் விக்கிப்பீடியாவில் காணுங்கள்.
  • பேச்சு வழக்கில் பிள்ளையார்சுழி போடுதல் என்றால் ஒரு வேலை/காரியத்திற்கு சம்மதித்து, அதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்குதல் என்றுப் பொருள்

பயன்பாடு

தொகு
  • எந்த வேளையில் நான் இந்த கோடை விடுமுறைக்கு ஊட்டிக்கு போகலாமென்றேனோ, என்னவோ அதற்குள் அவர் அதற்கு பிள்ளையார்சுழி போட்டுவிட்டார்!


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A propitiatory mark made at the commencement of any writing



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிள்ளையார்_சுழி&oldid=1278022" இலிருந்து மீள்விக்கப்பட்டது