பேச்சு:அக்கம்
உங்களது புது முயற்சி வரவேற்கத் தக்கது. அது பற்றிய எனது கருத்துக்கள் வருமாறு;-
- நீங்கள் வின்சுலோ தளத்தின் தகவல்களை, ஆதாரமாகக் கொண்டுள்ளீர்கள். பிற பொருள்களையும் சேர்த்து இருக்கலாம். உங்களின் தகவலாதாரங்களை தயவுசெயது வெளிப்படுத்தவும்.
- உங்களின் கருத்துக்களை, அந்தந்தப் பக்கத்தின் மேலுள்ள 'உரையாடல்' பகுதியில் தெரியப்படுத்தி, தெளிவுப் படுத்துங்கள். அல்லது, அப்பகுதியில் கூறப்பட்ட கருத்துக்களை கவனியுங்கள்.
- அனைத்து ஆங்கில எழுத்துக்களையும், சிறிய எழுத்துக்களில் எழுதுமாறு, இத்தள நிர்வாகிகள் கூறியிருப்பதை மறக்காதீர். நீங்கள் எழுதியுள்ள ஆங்கில சொல்லான Grain என்பதனை grain என மாற்றி, அதன் மூலம் ஏற்படும் பலன்களை அறியவும்.
- 'அக்கம்' என்ற சொல்லின், பொருள் பகுதியில் கடைசியாக 'பக்கம்' என்ற சொல் உள்ளது. அது அங்கு இருந்தால், தவறான பொருளைத் தரும். அது 'இவற்றையும் பார்க்க' எனும் பகுதியில் மட்டும் இருப்பது நலம்.'இவற்றையும் பார்க்க' என்புதனை 'ஒப்பிட்டறிக'என்று மாற்றினால் நன்றாக இருக்குமே!
- 'விளக்கப்படம்' என்பது தேவையானதா? அதற்குள் எப்படி படங்களைப் பயன்படுத்துவது? சிறிய இடமாக இருக்கிறதே?
- 'அவன் அக்கம் பக்கம் பார்த்துப் பேசினான்' என்பதன் மாற்றங்களை உணரவும்.
- பல பொருள்களைத் தரக் கூடிய தமிழ் சொற்களை உருவாக்கும் போது, அட்டவணைப் பயன்பாடு சிறப்பாகத்தான் படுகிறது. அது பற்றி நானும் எண்ணுகிறேன். உங்களது ஆர்வச் செயல், என் ஆர்வத்தினையும் தூண்டுகிறது.
- நமது புது முயற்சிகளோடு, இதுவரைப் பின்பற்றியுள்ள அகரமுதலி வழமைகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதே என் கருத்து. நன்றி! (தகவலுழவன் 16:55, 11 ஜனவரி 2009 (UTC))
Start a discussion about அக்கம்
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve அக்கம்.