பேச்சு:அரபி
அரபி என்றால் அரபு மொழி பேசுபவர்களை அரபி என்று சொல்வதுண்டு. அதன்படி அரபி எழுத்து, அரபி அரிச்சுவடி என்று சொற்களில் பி என்று எழுதுவதை விட பு (அரபு) என்று எழுதுவதுதான் சரியானது என்று கருதுகிறேன். அரபு மாதங்கள், அரபுலகம், அரபுதேசம், அரபுத் தமிழ் போன்ற சொற்பதங்களை நான் ஏற்கெனவே பலமுறை கேட்டிருக்கிறேன். தெரிந்தவர்கள் விளக்கவும். -- Mahir78 14:03, 24 ஆகஸ்ட் 2010 (UTC)
- இரண்டுவிதமாகவும் எழுதுவதைப் பார்த்திருக்கின்றேன். அரபி என்றால் வேறு எச்சொல்லையும் சேர்க்காமலே, அது அரபு மொழி என்று புரியும். அரபு என்று என்று எழுதினால், அரபு மொழி என்று எழுத வேண்டும்.. எபிரேயம்,பாரசீகம் என்பது போல அராபியம் என்றும் சொல்லலாம். எப்படி இருந்தால் நல்லது என்று மாகிர் நீங்களோ பிறரோ கூறுவதைச் சீராகப் பின் பற்றுவோம். எனக்கு இதில் தனிப்பட்ட கருத்துகள் எதுவும் இல்லை. (மொழிப்பெயர் -அம் என்று முடியும்படி பவுல் அவர்கள் கூறியவாறு அமைக்க இயலுமா என்னும் ஒரு நப்பாசை அவ்வளவுதான்).--செல்வா 23:46, 24 ஆகஸ்ட் 2010 (UTC)
- Mahir, செல்வா, மொழி என்னும் பொருளில் Arabic (language) என்பதை அரபி என்று கூறுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். இசுலாமியர் பலர் அவ்வாறே கொள்கின்றனர். (காண்க: அரபி = Arabic).அரபு என்னும் சொல்லைப் பெயர் உரிச்சொல்லாகக் கருதலாம். எ.டு.: arabian desert = அரபுப் பாலைநிலம்; arabian music = அரபு இசை.
சென்னைத் தமிழ் அகரமுதலியில் அரபுத் தமிழ், அரபி என்னும் சொற்களைக் காணலாம். (காண்க: அரபு = arabian).
எனவே, மொழியைக் குறிக்க அரபி, பெயர் உரியாக வரும்போது அரபு என்று சொல்வது நலம் என்பது என் கருத்து. --பவுல்-Paul 04:14, 25 ஆகஸ்ட் 2010 (UTC)
- கருத்துகளுக்கு நன்றி பவுல்! --செல்வா 20:36, 25 ஆகஸ்ட் 2010 (UTC)