பேச்சு:அரபி அரிச்சுவடி

  • மாகிர், வடிவமைப்பு மிக அழகாக உள்ளன. ஒலியெழுத்துகளின் பெயர்களோடு, அதற்கான ஒலியன் ஒலிப்பையும் சுட்ட வேண்டும். ஆங்கிலத்தில் A (ஏ) என்றாலும் அதற்கான ஒலிப்பு அ, ஆ, ஏ, ae (xஏ அல்லது ஏ2)என்று ஒலிகள் ஏற்கும். எழுத்தின் பெயர் A (ஏ).
  • அரபியில் வரும் தொண்டைக் கற்றொலி ஹ அல்ல என்பது நான் புரிந்துகொண்டது. இது தவறாக இருக்கலாம். சில ஒலிகள் ஃகா என்பது போலும், இன்னும் பல விதமாகவும் மாறும். தமிழ் எழுத்துகளைக் கொண்டே குறித்தால் நன்றாக இருக்கும். எம்மொழியையும், அம்மொழியைத் தக்கவர்களிடம் இருந்து பயின்றால்தான் நுட்பமான ஒலிப்புகள் பெற இயலும். எந்த எழுத்தையும் குறியீடுகளையும் மட்டும் கொண்டு உணரமுடியாது. இன்ன ஒலிக்கு இன்ன குறியீடு என்று பின்னர்நாம் கொள்கிறோம். pat என்னும் ஆங்கிலச்சொல்லில் வரும் ஒலியைக் கேட்டிருந்தால்தான் எப்படி எழுதிக்காட்டினாலும் புரியும். pat என்பதை xபேட் என்று எழுதிக்காட்டலாம், ஆனால் தமிழ் டகரம் என்பது நாவளையொலி (அதாவது நாவை வளைத்து மேலண்ணத்தில் ஒற்றி ஒலியெழுப்புகிறோம்), ஆனால் ஆங்கில t என்னும் ஒலி நுனிநாவை பல்லுக்குப் பின்னே உள்ள மேட்டுப் பகுதிக்கு (alveolar) அருகே ஒற்றி எழுப்பும் ஒலி. இவ்வேறுபாட்டைக் காட்ட xபேட்5 என்று குறிக்கின்றோம். இதில் ட1, ட2, ட3, ட4 ஆகிய நான்கும் நாவளையொலிகள் (தமிழ அல்லாத இந்திய மொழிகளில் சிறிதளவு காணப்படும் ஒலிகள் ட2 (= ठ), ட4 = ढ ஆகிய இரண்டும்). ஆகவே ட5 = t, ட6 = d (இந்த d, द ड ஆகிய இரண்டும் அல்ல; மெல்லொலி நுனிநா டகரம்). இந்த மேலொட்டு எண்களை ஒதுக்கி விட்டுப் படித்தாலும் (பிழை எனினும்) ஓரளவுக்குச் சரியான ஒலிப்பைப் பெறுவோம். மிகப் பல ஒலிகள் உள்ளனவாகையால், துல்லிய ஒலிக்குறிகள் வடிக்கும் நோக்கில் (அதாவது துல்லிய ஒலி வேறுபாடுகளுக்காக நாம் கொள்ளும் தனித்தனி ஒலிக்குறிகள்) தமிழ் எழுத்துகளில் மேலொட்டு கீழொட்டு எண்களைப், புரிந்த சில எழுத்துகள் அல்லது குறிகள் இட்டு எழுதுவது வளம் கூட்டும் என்று கருதுகின்றேன்.

நீங்கள் தமிழ்-கிரந்த எழுத்துகளில் குறித்துள்ளவற்றுக்கும் அனைத்துலக ஒலியன் நெடுங்கணக்கில் (அஒநெ) உள்ள ஒலிப்புகளுக்கும் பல மாறுபாடுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக மூன்று புள்ளிகளுள்ள ﺙ (Ṯāʾ) என்னும் எழுத்தை அஒநே (IPA) θ என்கிறது. நீங்கள் "ஷே" என்று கூறுகின்றீர்கள். அதே போல خ (Ḫāʾ) என்பது velar fricative எனப்படும் ஒலியாகிய /x/ எனக் குறிக்கின்றனர். இவற்றை நோக்கும்பொழுது இங்கே நீங்கள் ஹ்ஹே என்பது சரியானதா, பொருத்தமானதா? என்னும் கேள்வி எழுகின்றது. இவ்வொலி ஏறத்தாழ (முற்றும் அல்ல) எஃகு என்று நாம் சொல்லும் பொழுது வரும் ஃக என்னும் ஒலி. எனவேதான் இதனை, க எனக் குறித்தேன். ح (Ḥāʾ)என்பதற்கு நேரடியான ஆங்கில ஒலிப்பு ஏதும் இல்லை (தமிழிலும் இல்லை), ஆனால் அதுவும் ஒரு வகையான தொண்டைக் காற்றொலி என்பதால் ஃ3 என்று குறித்தேன்.

நீங்கள் தந்த அட்டவணையைக் கீழ்காணுமாறு மாற்றம் செய்யலாமா? (இன்னும் முடிவு பெறவில்லை.. முடிந்ததும், இந்த குறிப்பை நீக்கிவிடுகின்றேன்).- --செல்வா 16:57, 19 ஆகஸ்ட் 2010 (UTC)--செல்வா 00:00, 20 ஆகஸ்ட் 2010 (UTC)

பெயர் அலிஃப் பே3, b டே1, t தே1, θ சீ3ம், dʒ 3ஏ, ħ கே, x டா6ல், d தா3ல், ð ரே2, trilled r
எழுத்து அலிஃப் பே3, b டே1, t தே1, θ சீ3ம்,dʒ ஃ3ஏ, ħ small>ஃகே, x டா6ல், d தா3ல், ð ரே2, trilled r
பெயர் சை8ன், z சை7ன், s சூ5வைன்,ʃ ட்சா7ட், sˤ டா3ட்6, dˤ டே2, tˤ சே9, ðˤ, zˤ ʿ, ʿஅய்ன்,ʿ கு3வைன், ɣ வே2, ஃவே, f
எழுத்து ஜைன் ஷைன் ஷுவைன் சாத் ல்லாத் த்தோ ல்லோ அய்ன் குவைன் ஃபே
பெயர் கா2வ்2, q கா1வ்1, லாம்,ல், l மீம், ம், m நூன், n 2, h வாவ், வ்3 w யே, ய், j    
எழுத்து காஃப் குவாஃப் லாம் மீம் நூன் ஹே வாவ் யே    
Some letters have an initial, medial and final form.

உச்சரிப்பு

தொகு

அரபு மொழியில் எகர ஏகார ஒகர ஓகாரங்கள் கிடையாது.

செல்வா மேற்காணும் நீங்கள் சுட்டிய ஒலிப்பான்களில் உள்ள ஏகாரங்கள் அரபுமொழிக்கு உரியவையல்ல; ஃபார்ஸிக்குரியவை. (என்று விவரம் தெரிந்தவரிடம் உறுதிபடுத்திக்கொண்டு எழுதுகிறேன்) அவருடைய உதவியுனூடே கீழ்க்கானும் பட்டியல் இவற்றை கட்டுரைப் பக்கத்தில் இடலாமா? மேலும் எழுத்துக்களுக்கு, த உழவன் சுட்டிகாடியபடி இசுலாம் கல்வி தளத்தில் உள்ள ஒலி கோப்புகளை பயன்படுத்தலாமா? அவை இலவசமாக பயன்படுத்தலாம் என்று அறிகிறேன்.

பெயர் ஒலி காட்டு
அலிஃப்   ஃ/அ and
பா   ப் Tab
தா   த் த்து
ஃதா   ஃத் Thanks (ஃதாங்ஸ் என்பதை எகிப்தியர் 'ஸேங்ஸ்' என உச்சரிப்பர்)
ஜீம்   ஜ் Tajmahal
ஹா


 
ஹ் (நடுத் தொண்டையின் குழலிரு பகுதிகள் ஒட்டியும் ஒட்டாமலும் உரசி வரும் ஓசை)
ஃகா   ஃக் காரித் துப்பும்போது தொண்டை உராய்வுடன் உண்டாகும் முதல் ஒலி
தால்   த் வந்தால் எனும் சொல்லில் உள்ள த்+ஆ
ஃதால்   ஃத் வருவதால் எனும் சொல்லில் உள்ள த்+அ
ரா   ர் Car
ஸ்ஸாய்   'ஸ் Buzz
ஸீன்  ஸ் Bus
ஷீன்   ஷ் Cash
ஸாத்   ஸ் Because
ழ்ழாத்   ழ்த் வாழ்த்து
த்தா   த் இதழ் குவித்து, அடித்தொண்டையால் ஒலிக்கும் கோத்து

ள்ளா

 
ள் இதழ் குவித்து, அடித்தொண்டையால் ஒலிக்கும் வந்தாள்
ஐன்   'ஃ க'ஃ-பா
கைன்   'க் ஃப்ரென்ஞ்ச்காரர்கள் 'மெர்ஸி' (நன்றி)என்பதை 'மெ'க்ஸி' என்பர்.
ஃபா   ஃப் ஆ-ஃப்
"காஃப்   "க் Queue
காஃப்   க் பார்க்
லாம்   சொல்
மீம்   ம் ம்
நூன், n   நான்
ه   ஹ் ஹ்ஹா
வாவ், வ்   வ் வ்வை
யே, ய், j

 

ய் வாராய்

-- Mahir78 15:17, 20 ஆகஸ்ட் 2010 (UTC)

மிக்க நன்றி மாகிர். இது ஓர் அருமையான உரரயாடலாக அமைகின்றது. நீங்கள் தே, ஷே என்று ஏகாரம் இட்டு எழுதியதாலேயே அப்படி நான் இட்டேன். அவ்வொலிகளை ب (Bāʾ) ت (Tāʾ), ط (Ṭāʾ), د (Dāl) என்பது போல ஆங்கில விக்கியில் தந்துள்ளார்கள்.

இசுலாம் கல்வித்தளத்தில் உள்ளதைக் கட்டாயம் இங்கு இடலாம், ஆனால் அவர்களிடம் இருந்து இவை கிரியேட்டிவ் காமன்சு பகிர்வுரிமத்தின் கீழ வெளியிட இணங்குவார்களா என்று எழுத்துவடிவில் பெற்றபின் இடுவது நல்லது. நீங்கள் இட்டிருக்கும் அட்டவணை அருமை, அதனைச் சற்றே மாற்றி கீழே இடுகின்றேன். தமிழ் எழுத்துகளைக் கொண்டே எல்லா ஒலிப்புகளையும் குறிக்க முற்படுவோமே. (சிறிதளவு இப்பொழுது செய்துள்ளேன். மீதத்தைப் பின்னர் செய்கின்றேன். செய்து முடித்த பின்னர் இவ்வரியை நீக்கி விடுகின்றேன்) நிங்கள் சொல்லும் ஒலிப்புகள் சற்று வேறுபாடாக உள்ளது. நானும் என் அரபி தெரிந்த நண்பர்களைக் கேட்டுப்பார்க்கின்றேன், [இப்பக்கத்தில்] உள்ளதோடு நீங்கள் கூறும் சில செய்திகள் மாறுபடுகின்றன. இப்பக்கத்தப் பார்த்தும் உங்கள் கருத்துகளைக் கூற வேண்டுகிறேன். அரபி எழுத்துகள் பக்கத்தைச் சிறப்பாக வடிக்க நீங்கள் மிகவும் உதவ முடியும்.

பெயர் ஒலி காட்டு
அலிஃப்   ஃ/அ and
பா3   ப் கம்ம், கம்,
தா1   த் த்து
ஃதா   ஃத் Thanks (ஃதாங்ஸ் என்பதை எகிப்தியர் 'ஸேங்ஸ்' என உச்சரிப்பர்)
ஜீம்   ச்3 பஞ்சம் , கெஞ்சல் Tajmahal
3


 
3 (நடுத் தொண்டையின் குழலிரு பகுதிகள் ஒட்டியும் ஒட்டாமலும் உரசி வரும் ஓசை)
கா   க் காரித் துப்பும்போது தொண்டை உராய்வுடன் உண்டாகும் முதல் ஒலி
தா3ல்   த்3 வந்தால் எனும் சொல்லில் உள்ள த்+ஆ
ஃதால்   ஃத் வருவதால் எனும் சொல்லில் உள்ள த்+அ
ரா   ர் Car
ஸ்ஸாய்   'ஸ் Buzz
ஸீன்  ஸ் Bus
ஷீன்   ஷ் Cash
ஸாத்   ஸ் Because
ழ்ழாத்   ழ்த் வாழ்த்து
த்தா   த் இதழ் குவித்து, அடித்தொண்டையால் ஒலிக்கும் கோத்து

ள்ளா

 
ள் இதழ் குவித்து, அடித்தொண்டையால் ஒலிக்கும் வந்தாள்
ஐன்   'ஃ க'ஃ-பா
கைன்   'க் ஃப்ரென்ஞ்ச்காரர்கள் 'மெர்ஸி' (நன்றி)என்பதை 'மெ'க்ஸி' என்பர்.
ஃபா   ஃப் ஆ-ஃப்
"காஃப்   "க் Queue
காஃப்   க் பார்க்
லாம்   சொல்
மீம்   ம் ம்
நூன், n   நான்
ه   ஹ் ஹ்ஹா
வாவ், வ்   வ் வ்வை
யே, ய், j

 

ய் வாராய்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:அரபி_அரிச்சுவடி&oldid=779342" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அரபி அரிச்சுவடி" page.