பன்மை விகுதி

தொகு

கீ.இராமலிங்கனார், மே. வி. வேணு கோபாலப் பிள்ளை பொன்ற அறிஞர்கள் கள் பன்மை விகுதியாக வரும் போது புணர்ச்சியெற்காது என்று "நாட்கள்", "பொருட்கள்" போன்றவை தவறு என்கிறனர். சிலர் மற்ற குற்றியலுகரம் போல வன்தொடர்குற்றியலுகரச் சொல்லுக்கு வலிமிகாது என்று "வாழ்த்துக்கள்", "எழுத்துக்கள்" போன்றவை தவறு என்கிறனர். ஆனால் மாத்திரையும் அலகிடலும் உச்சரிப்பின் முக்கியத்துவத்தைச் சொல்வதால் தமிழில் ஒலிப்பு முறை முக்கியம். இவ்வாறே செய்யுள் இலக்கியங்கள் எழுதப்பட்டுள்ளன. எனவே நாட்கள், பொருட்கள், வாழ்த்துக்கள், எழுத்துக்கள் போன்றவை தவறில்லை என்பது செங்கைப் பொதுவன், ஈழம் தமிழப்பன் போன்ற அறிஞர்களுடன் நானும் உடன்படுகிறேன். --Neechalkaran (பேச்சு) 02:43, 10 அக்டோபர் 2021 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:கள்&oldid=1913691" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கள்" page.