பேச்சு:குருட்டாம்போக்கு

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

பேச்சு வழக்குச் சொற்களை சேர்க்கலாமா? குருடன்போக்கு என்பது தானே சொல் -தமிழ்க்குரிசில்

  • பேச்சு வழக்குகள் அனைத்தையும் உருவாக்குவதைத் தவிர்க்கலாம் என்பது எண்ணம். ஆனால், குருடன் போக்கு என்பது தான் குருட்டாம் போக்கு என்பதனை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.-- உழவன் +உரை.. 01:40, 13 நவம்பர் 2012 (UTC)Reply
பேச்சு வழக்குகளை பதிவேற்றக் கூடாது என்று விக்சனரியில் ஒரு கொள்கை முடிவு எடுக்கப்பட்டால் பின்பற்ற ஒரு தடையுமில்லை. குருட்டாம்போக்கு என்னும் சொல் தமிழ் க்யூப் என்னும் தமிழ் அகராதி இணையத்தில் நான் பதிவேற்றிய பொருளிலேயே உள்ளது. தேடியதில் கண்டேன்...<http://www.dictionary.tamilcube.com/index.aspx/>...புர்ரால் என்னும் விக்சனரி பக்கத்தில் வட்டார வழக்குகளை பதிவேற்றுங்கள் என்றீர்கள். தற்போது அவைகளை தவிர்க்கலாம் என்பது தங்கள் எண்ணம் என்பது தெரிகிறது!--Jambolik (பேச்சு) 16:46, 13 நவம்பர் 2012 (UTC)Reply
நண்பரே! //பேச்சு வழக்குகள் அனைத்தையும் உருவாக்குவதைத் தவிர்க்கலாம் என்பது எண்ணம். // அனைத்தையும் .. என்றே என் முன்மொழிவையே வைத்தேன்.நீங்கள் கூறியபடி பலர் ஒன்று கூடி, எடுக்கும் கொள்கை முடிவை எதிர்நோக்குகிறேன். தனிப்பட்ட முறையில், குறிப்பிட்ட சில பேச்சு வழக்குகளை உருவாக்குதலை, நான் நோக்கமாகக் கொண்டுள்ளேன். குறிப்பாக கடலுக்குச் சென்று வரும் மீனவர்களின் வாழ்வில் பயன்படுத்தும் சொற்கள். சில காரணங்களால் அதனை ஒத்தி வைக்கவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன். வணக்கம்.-- உழவன் +உரை.. 18:24, 13 நவம்பர் 2012 (UTC)Reply

தனிப்பட்டவர்களின் பேச்சில் காணப்படும் சொற்களைப் பதிவு செய்ய வேண்டும் தான்! ஆனால், கொச்சையாக அன்றி எழுத்து வழக்குத் தமிழில் பதிவு செய்யப் பட வேண்டும். வேண்டுமானால் கொச்சை வழக்கிற்கு வழிமாற்று தரலாம். விரைவில் இது குறித்த உரையாடல் தேவை -தமிழ்க்குரிசில்

Return to "குருட்டாம்போக்கு" page.