பேச்சு:திமிசுக்கட்டை
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Jambolik
//பாதித் தமிழ் -பாதி புறமொழி--தெலுங்கு வேர்க் கொண்ட ஒரு சொல்.// இக்கூற்று தவறானது எனவே நீக்குகின்றேன். திமிசு என்பது தூய தமிழ்ச்சொல். திம்மை என்றால் பருமை, திம்மலி என்றால் பருத்தவள். திம்மெ என்பது தெலுங்கு ஆனால் திம், திம்மை, திமிசு என்பன தமிழ். வலுவான வேங்கை மரத்துக்கும் திமிசு என்று பெயர். செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் பேரகரமுதலியைப் பார்க்கவும். அப்பக்கத்தை இங்கே பதிவிடலாமா என அறியேன். தமிழ்நாட்டரசின் ஒப்புதல் உண்டு என நினைக்கின்றேன். பிளிக்கரில் பதிவிட்டிருக்கின்றேன். பார்க்கவும் [1]
- దిమ్మీస్,దిమిస (தி3ம்மீஸ், தி3மிஸ) என்னும் தெலுங்குச் சொற்கள் சாலையைச் செப்பனிடும் இந்தச் சாதனத்தைக் குறிக்கிறது...வேறு அர்த்தங்கள் கிடையாது...இவற்றில் திம்மீஸ் என்பது நெல்லூர் மாவட்டத் தெலுங்கு வழக்கு...தமிழில் திமிசுக்கட்டை என்று பொருள்..இந்தச் சாதனத்தின் நடுவிலுள்ளத் துளையில் ஒரு நீண்டக் கட்டையை இணைத்துக் கையாள்வர்...தெலுங்கு దిమ్మీస్-திம்மீஸ் சொல்லும், தமிழ் கட்டை என்னும் சொல்லும் இணைந்து திமிசுக்கட்டை என்னும் தமிழ்ச் சொல் உருவாகியுள்ளது...தூய தமிழ்ச்சொல்லாக திமிசு தரும் அர்த்தங்கள் வேறானவை...--Jambolik (பேச்சு) 14:18, 25 அக்டோபர் 2016 (UTC)