பேச்சு:நகம்
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by George46 in topic நகம் = nail, toe
நகம் = nail, toe
தொகுசெல்வா, ஆங்கிலத்தில் கை நகம், கால் நகம் என்னும் வேறுபாடு இருப்பதையும் தமிழ் பதிகையில் காட்டலாமோ?--பவுல்-Paul 14:22, 9 செப்டெம்பர் 2010 (UTC)
- குறிக்கலாம். ஆங்கிலத்தில் கை விரல்களுக்கும், கால் விரல்களுக்கும் வெவ்வேறு பெயர்கள் உண்டு(finger, toe). ஆனால் தமிழில் விரல் என்பது கைகால்களுக்குப் பொது. நகம் என்பது தமிழில் கைகால்களுக்குப் பொது என்பது போலவே ஆங்கிலத்திலும் nail என்பது பொது. தேவை என்று நினைப்பதைத் தயங்காது சேர்த்துவிடுங்கள். (வேண்டும் எனில் பின்னர் வேண்டியவாறு திருத்திக்கொள்ளலாம்). --செல்வா 14:55, 9 செப்டெம்பர் 2010 (UTC)
- இன்னொன்று. தமிழில் கட்டை விரல் அல்லது பெருவிரல் என்பது கைக்குப் பயன்படுத்துகின்றோம்.. இவற்றைக் கால்விரல்களில் உள்ள பெருவிரலுக்கும் பயன்படுத்தலாம் (ஆனால் கால் கட்டை விரல் என்பது அவ்வளவாகப் பயன்பாட்டில் இல்லை என நினைக்கின்றேன். கால் பெரு விரல் என்றே அதிகம் கூருகின்றோம்), ஆனால் ஆங்கிலத்தில் big toe என்றும், thumb என்று கைகால்களின் பெருவிரல்களுக்கு வேறுபட்ட சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். இவை எல்லாம் ஆங்கில மொழிச்சொற்களில் சேர்க்கவேண்டும் (இங்கு தேவை இராது என்றே நினைக்கின்றேன்). --செல்வா 14:59, 9 செப்டெம்பர் 2010 (UTC)
- நீங்கள் சொல்வதுபோல, toenail, fingernail என்று ஆங்கிலப் பதிகையில் கொடுத்துவிடலாம். --பவுல்-Paul 15:43, 9 செப்டெம்பர் 2010 (UTC)