பேச்சு:பதாகை

இச்சொல் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் வந்த ஒருபாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலரும் இதற்கான பொருளை அறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். என்னிடம் நேரடியாகவும், இணைய அரங்கிலும் பலர் இதைக் கேட்டுள்ளனர். இதற்கான விக்சனரிப் பதிவை சிறப்பாகத் தருவதன் மூலம் நமது தளம் தேடுபொறியில் இவர்கள் கண்களில் படவும், இதன் பயனை அவர்கள் உணரவும் ஏதுவாகும். பக்கத்தைப் பார்த்து தேவையான மெருகூட்டல்களைச் செய்யவும். முடிந்தால் நான் பயன்படுத்தியுள்ள மேற்கோள்களுக்கு {{cite web}}, {{cite book}} போன்ற வார்ப்புருக்களைப் பயன்படுத்தவும். -- Sundar 11:08, 3 அக்டோபர் 2006 (UTC)Reply

சுந்தர், விளக்கம் நன்று. யாகூ ஆன்சர்சில் இது குறித்து ஒரு கேள்வி வந்திருந்து நான் விளக்கமும் தந்திருந்தேன். பாடலாசிரியர் தாமரை இது போன்று அதிகம் அறியப்பெறாத அழகிய (?!) சொற்களை எடுத்தாண்டு வருகிறார். எடுத்துக்காட்டுக்கு, காக்க காக்க படத்தில் வரும் கலாபக் காதலா, தூது வருமா பாடல் வரிகள்..--ரவி 17:24, 3 அக்டோபர் 2006 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:பதாகை&oldid=20768" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பதாகை" page.