படாகை என்றும் அழைக்கப்படும் பதாகை ஓர் அரசனின் அதிகாரத்தின் அடையாளமாகக் கருதப்படும் கொடியைக் குறிக்கும் சொல்லாகும். இதனால், அரசனைப் பதாகையான் என்றும் அழைப்பர். அதேபோல், ஒரு விருதின் அடையாளமாக உள்ள கொடியையும் இச்சொல் குறிக்கும்.[1] இவ்விரு பொருட்களிலிருந்து மாறுபட்டு, பரதநாட்டியத்தில், உள்ளங்கையையும் விரல்களையும் சேர்த்து உருவாக்கும் ஒரு நிலையைக் குறிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.[2] பெருவிரலையும் அணிவிரலையும் மட்டும் ஒன்றுசேர்த்து, பிறவற்றை நிமிர்ந்த நிலையில் வைக்கும் நிலையைத் திரிபதாகை என்பர்.[3]

பழங்காலத்து மெக்சிகோ முடியாட்சியின் சான் பாஸ் படையின் பதாகை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ)

பரதநாட்டியத்தில் பதாகை

பதாகை

  1. ensign, banner, placard, standard - அடையாளக் கொடி, சின்னம்; விளம்பரக் கொடி
  2. Gesture with one hand in which the thumb is bent while the other fingers are held close and upright - அபிநயம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- ensign

பயன்பாடு தொகு

என் பதாகை தாங்கிய உன் முகம் - "பார்த்த முதல் நாளே", வேட்டையாடு விளையாடு, 2006

மேற்கோள்கள் தொகு

"https://ta.wiktionary.org/w/index.php?title=பதாகை&oldid=1904522" இலிருந்து மீள்விக்கப்பட்டது