பேச்சு:வரை
விளக்கம்
தொகுநான் கொடுத்துள்ள விளக்கம் நான் புரிந்து கொண்டதின் அடிப்படையில் எழுதியுள்ளேன். இவை எல்லாம் original research - புதிய கண்டுபிடிப்பாக, புத்தாய்வாய்வாகக் கருதுவார்களா எனத் தெரியாது. கூடாது எனில் நீக்கிவிடலாம். தமிழில் ஒரு சொல்லுக்கான எல்லாப் பொருளும் ஆழமான உட்தொடர்புகள் கொண்டவை. பல்வேறு நிலைகளில் உட்பொருள் நுண்ணிதின் உணர்த்துபவை. இவற்றை எல்லாம் பகிர்ந்துகொள்ளாமல் போவதால் இழப்புதானே ஏற்படும் என நினைக்கத் தோன்றுகின்றது. எனினும், இவை தக்கார் (மொழியியல் வல்லுநர்கள்) ஏற்பு தர வேண்டும், அதன்பின்தான் இங்கு பதிவு செய்யலாம் என்னும் முறை இருப்பது நல்லதே, ஆனால் தமிழ்ச்சூழலில் இப்படியான களங்கள் இல்லாமல் இருப்பது பெருங்குறையாக உள்ளது. பல்லாயிரக்கணக்கான கருத்துகள் பதிவு பெறாமலே போகின்றன. அறிவாளிகளின் மன்றம், சங்கம் என்று நிறுவி கருத்துகளை முன் வைத்து (முன்மொழிந்து) கருத்தாடி ஏற்பு, திருத்தத்துடன் ஏற்பு, மறுப்பு என்னும் நிறுவு வழிமுறைகள் தமிழ்ச்சூழலில் உருவாக வேண்டும். --செல்வா 20:18, 6 மே 2010 (UTC)