பேச்சு:പുഴ
மலையாளத்தில் புழ என முடிதலே இவ்வார்த்தையின் மெய்யுச்சரிப்பு. ஆயினும், வடமொழிகளிற் காணப்படுவதைப்போல மலையாளத்திலும் மயங்கொலிகள் காணப்படுகின்றன. இதில் புழ என முடிந்தாலும் புழா எனப் படித்தல் வேண்டும். இதேப்போல கத = கதா; சாய = சாயா; மாங்ங = மாங்ஙா. மேலும் தமிழில் ஐ என முடியும் வார்த்தைகளை மலையாளத்தில் ஆ என முடியும் ஒருப் பண்பைக்காணலாம். காட்டாக கதை = கதா; கலை = கலா; சாயம் = சாயா; புழை = புழா; மழை = மழா இவர்களிலிருந்தே பல தமிழ்வார்த்தைகள் வடமொழிக்கு புகுந்திருக்கலாம். ஆனால் தமிழில் புழை என்னும் வார்த்தையே மலையாளத்தில் புழா என மாறியது எனலாம். ஆனால், இன்றளவில் தமிழில் புழை என்பதற்கு வேறுப்பொருளைப் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு நோக்கும்போது, புழைக்கடை என்னும் வார்த்தை ஆறின்கடைப் பகுதி என்பது பொருளாகும். ஆனால் இதற்குத் தமிழிலோ வீட்டின் பின்புறம் என விளித்துவருகின்ரனர். நன்றிகளுடன். --சிங்கமுகன் 18:56, 21 அக்டோபர் 2011 (UTC)