நியமனம், நியமம் சொற்கள்

தொகு

என்னிடம் ஒருவர் 'appointment' (குறிப்பிட்ட நேரத்தில் ஒருவரை சந்திக்க நேரம் குறித்தல் என்ற கருத்துப்பட) என்ற சொல்லுக்கு நல்ல தமிழ்ச் சொல் என்ன என்று கேட்டார். 'ஏற்பாடு', 'முன்னேற்பாடு' போன்ற சொற்கள் பொருத்தமில்லை என்று கூறினார். 'நேரத்தைக் குறித்தல்' போன்றன விளக்கம் கொடுப்பதுபோல் இருப்பதாகவும், ஒரு தனிச்சொல்லாக இருந்தால் நன்றாக இருக்கும் எனவும் கூறினார். நேரத்தை முதலே நியமித்தல் என்பதனால் 'நேரநியமம்' என்று கூறலாமா என்று கேட்டேன். அது ஓரளவு பொருத்தமாகத் தெரிவதாகவும், ஆனால் 'நியமம்', 'நியமனம்' போன்ற சொற்கள் தூய தமிழ்சொற்களா அல்லது வடமொழி கலந்த சொற்களா என்று கேட்டார். எனக்கு சரியாகத் தெரியாதபடியால் இங்கே கேட்கின்றேன். தெரிந்தவர்கள் கூறுங்கள். --கலை 23:24, 18 மார்ச் 2011 (UTC)

  • கலை, இப்பொழுதுதான், இதனைப் பார்க்கின்றேன். Appointement என்பதற்கு முகன்மையாக இரண்டு பொருள்கள் உண்டு. (1) குறித்த நேரத்தில், குறித்த இடத்தில் ஒருவரைப் பார்க்க, சந்திக்க ஏற்பாடு அல்லது முன்னேற்பாடு கொள்தல், (2) ஒருவருக்கு ஒரு வேலை, அல்லது பணியைக் கொடுத்து அதனை ஏற்றல். அப்பாயிண்ட்மெண்ட் என்னும் ஆங்கிலச் சொல்லை எல்லா இடத்துக்கும் ஏற்றவவறு ஒரே மாதிரி தமிழில் வழங்குவது இயல்பாய் இராது. பொதுவாக மேலே கூறிய முதலாவது பொருள் தமிழில் நேர ஏற்பாடு என்றே சொல்லலாம். நேரம் கொடுத்தார் என்று சுருக்கமாகவும் சொல்லலாம். அதாவது சந்திக்க நேரம் ஏற்பாடு செய்து கொடுத்தார் என்று பொருள். இன்னொரு எடுத்துக்காட்டு: மருத்துவரைச் சந்திக்க சனிக்கிழமை 8 மணிக்கு நேர ஏற்பாடு செய்தோம், மருத்துவர் சனிக்கிழமை 8 மணிக்கு நேரம் தந்தார் என்றெல்லாம் சொல்லலாம். appointment என்பதன் இரண்டாவது பொருளைத் தமிழில் அமர்த்தினார், பணியமர்த்தினார், பொறுப்பில் அமர்த்தினார் என்று இடம் சார்ந்து சொல்லலாம். I have a Doctors' appointment at 10:30 என்பதைத் தமிழில் எனக்கு 10:30 மணிக்கு மருத்துவரோடு சந்திப்பு நேரம் உள்ளது அல்லது எனக்கு 10:30 மணிக்கு மருத்துவரோடு நேரம் உள்ளது என்று சொல்லலாம். நான் 10:30 மணிக்கு மருத்துவரோடு நேர ஏற்பாடு செய்துள்ளேன் என்றும் சொல்லலாம். ஏற்பாடு என்னும் சொல் ஏல்+பாடு அதாவது ஏற்றுக்கொண்ட முறைப்பாடு (ஏல்->ஏற்றல்; கல்-கற்றல் போல). தக்க முறைப்பாடு என்று பொருள்; எனவே ஏற்பாடு என்றாலே agreed deed/procedure அல்லது mutually agreed deed/procedure or deed/procedure agreed mutually ahead of time என்று பொருள். முன்னேற்பாடு என்பது ahead of time, preparatory என்னும் பொருள்களை வலியுறுத்தும் சொல். நியமம், நியமனம் என்பன தமிழ்ச்சொற்கள் அல்ல, பொருளும் விளங்காதன (தமிழ்வழி). நேர ஏற்பாடு செய்திருக்கின்றோம் என்பது we have arranged an appointment என்பது போன்ற பொருள் தருவதே.--செல்வா 02:37, 21 மே 2011 (UTC) சிறு திருத்தங்களுடன்.--செல்வா 15:19, 26 மே 2011 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:appointment&oldid=996749" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "appointment" page.