பேச்சு:dado
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
dado
- கட்டுமானவியல். சுவர்ப்பட்டி; பீடவிடை
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் dado
1) மேலுள்ளது சுந்தர் தானியங்கி வடிவம். இதிலுள்ளவைகளை நான் பரிந்துரைக்கும் வடிவத்திற்கு, கருத்தறிய முன்பக்கம் மாற்றியுள்ளேன்.--த*உழவன் 06:03, 16 ஆகஸ்ட் 2010 (UTC)
1.1)செல்வாவின் கருத்துகள்.
- தானியங்கியாய்ச் செய்யவிருப்பதால், பலவற்றையும் தீர எண்ணி செயல்படுத்தலாம்.
- நீங்கள் கூறியவாறு பலவற்றையும் எண்ணுகிறேன். இதுவரை கருதப்படும் பக்கவடிவம் உட்பட. ஏனெனில், பிற விக்சனரிகளில் தானியங்கி மூலம் எளிமையாக பல பணிகளைச் செய்கின்றனர். நாமும் அம்முறையை பின்பற்றினால், பல பலன்கள் கிடைக்கும். எனவே, முன்பு சுந்தர் வடிவமைத்த பக்க வடிவத்தில் சிறு மாறுதல்களை மட்டும் பண்ணினால் போதுமென்று எண்ணுகிறேன். விரைவில் எனது அனுபவங்களைக் கூறுகிறேன்.--த*உழவன் 07:55, 18 ஆகஸ்ட் 2010 (UTC)
- எடுத்துக்காட்டாக அது பெயர்ச்சொல்லா வினைச்சொல்லா என்று சுட்டுதல் வேண்டும். இக்குறிப்பு தரவுப்பட்டியலில் இல்லை எனில், இவற்றை இப்போதைக்கு விட்டுவிடலாம், ஆனால் அவை முக்கியம்.
- தரவுப்பட்டியலில் இல்லை. எனினும்,பெயர்ச்சொற்களே முக்கால் வாசி இருக்கிறது. பலரின் கருத்தறியவே மின்னூல் பற்றி கேட்டிருந்தேன். அனைத்திற்கும் பெயர்ச்சொல் என்று போட்டு விடலாமா? பிறகு தவறானதைத் திருத்திக்கொள்வோமா? எப்படியும் இன்னும் பலமுறை, எல்லாப் பக்கங்களையும் சீரமைக்க வேண்டிய சூழ்நிலையுள்ளது.--த*உழவன் 07:55, 18 ஆகஸ்ட் 2010 (UTC)
- அதே போல தற்பொழுது பயன்பாடு, சான்றுகோள் முதலானவை இல்லாவிடினும், அவற்றுக்கான வார்ப்புருக்கள் இட்டால், பின்னர் நிரப்ப எளிதாகவும் இருக்கும், அது தூண்டுகோலாகவும் இருக்கும்.
- பயன்பாடு, விளக்கம் என்று பல பட்டைகளைத் தவிர்க்கலாமென்று எண்ணுகிறேன். {.{பொருள்}},{.{விளக்கம்}}, {.{மொழிபெயர்ப்பு}}(அ) வார்ப்புருக்களே போதும். நிறைய பட்டைகள் இருப்பின், எதை எதில் இடுவது என்ற கேள்விகளுக்கு பதில் கூறவேண்டிய நிலை வரும். அதனால் நமக்கு பணிநேரங்கள் பாதிக்கிறது.--த*உழவன் 07:55, 18 ஆகஸ்ட் 2010 (UTC)
- எழுத்தாலும், ஒலிக்கோப்பாகவும் வருவன ஒரே வரியில் இருப்பது நல்லது. எழுத்தால் இடும் ஒலிப்பை தானியங்கிவழி இடமுடியும் என்றாலும், வேண்டாம் எனில் இப்போதைக்கு விட்டுவிடலாம் (ஆனால் பின்னர் சேர்க்க வேண்டும்; நீளமான சொற்களாக இருப்பனவற்றுக்கும் செய்யலாம்). எழுத்துவடிவில் ஒலிப்பைச் சுட்டும் குறிய்யிடுகளுக்கும், அவற்றை இணைக்க எளிதாக உள்தொடுப்ப்புத் தர இயலும். எடுத்துக்காட்டாக இப்படி-xடே6டோ6 காட்டலாம்
- அற்புதமான காலத்தைக் கடந்து நிற்கும் குறிப்புகள். தமிழால் அயல்மொழிகளைக் கற்க தூண்டும். இதற்கு முழு கவனமும் செலுத்துங்கள். முடிந்தால் ஒலிக்கோப்புகளையும் இணைத்தால், பலரும் பரப்புவர். க¹, க², க³,... என்று குறிப்பதன் மூலம், அனைவரும் உரையாடலில் கூட குறிப்பதற்கு ஏதுவாக இருக்கிறது. இங்கிருக்கும் ஒலிப்புதவிக் குறிப்புகளையும், அங்கே ஒருங்கே அமைக்கப் பட்டுவிட்டதா? நெடுநாட்களாக ஒலிப்புதவிக் குறிப்புகள் இல்லாமல் இருந்தது. அதனை நிரப்பியது, மகத்தான காலம் வெல்லும் பணி. --த*உழவன் 07:55, 18 ஆகஸ்ட் 2010 (UTC)
- சொற்களுக்கு இடையே தக்க இடைவெளி, எவ்வெவ் சொற்கள் சாய்வெழுத்துகளில் அல்லது சிறிய எழுத்துகளில் இருக்க வேண்டும் என்று தீர எண்ணிச் செய்ய வேண்டும்.
- பொருளாகத் தரும் எல்லா சொற்களுக்கும் உள்ளிணைப்புத் தந்து, அதற்கு ஈடாக ஆங்கிலச்சொற்களை தானியங்கியாய் இடலாம் என்பது என் கருத்து. ஏனெனில் இதன்படி ஒன்றுக்கு ஒன்றான இணைப்பு தானியங்கியாய் நிகழும். இது எளிதாகச் செய்யக்கூடியது. ஆங்கிலத்தில் இரண்டு சொல் மூன்றுசொற்கோவைகள் இருப்ப்பன போல தமிழிலும் இருப்பதால் தவறில்லை. இன்னும் சொல்லப்போனால், இவற்றைத் தானியங்கியாய் கூட இருசொற்கோவை, முச்சொற்கோவை (ஆங்கிலம், தமிழ்) என்று பிரித்துப் பகுப்புகள் உருவாக்க இயலும். சொற்பகுப்பு என்பது சொல்லிடையே இடைவெளியைத் தேர்ந்து முடிவு செய்வது.
- ஆங்கிலச் சொற்பட்டியலிலிருந்து தமிழ் சொற்கோவை ஒன்றிற்கு(எ. கா.) மின்காப்புக் கதவ மின்புல விளைவுத் திரிதடையம், உருவாக்கப்பட்ட பிறகு அக இணைப்பு தருவதே, பலவிதத்திலும் சிறந்தது. தேவையற்ற சிவப்பு நிற எழுத்துக்களைத் தவிர்க்கலாம். படிப்பதற்கும் நன்றாக இருக்கும்.
- dado2 என்னும் பக்கத்தில் காட்டியுள்ளவாறு பக்கத்தை உருவாக்கும் நிரல்களை தனித்துப் பொருத்தும் தன்மையதாக (மாடுலர், தனிசை) இருக்க வேண்டும். ஏனினில் பின்னர் யாரும் வந்து திருத்தவோ, சேர்க்கவோ எளிதாக இருக்கும். இப்பொழுது dado என்னும் பக்கத்தை உருவாக்கியது போல பல செயல்களையும் பயனர் சேர்க்கவேண்டிய எழுத்துகளையும் பிணைத்து வார்ப்புருமூலம் இடுவது நல்ல முறையல்ல என்பது என் கருத்து. பிரித்துப் பொருத்துமாறும் எளிதாக பயன்ர்கள் கருத்துகளைச் சேர்க்குமாறும் இருக்க வேண்டும். இதனை நான் தனிசை (தனிசையாக, மாடுலராக) என்கிறேன்.
- மொழிப்பட்டையில் கொடிகள் இல்லாதவாறு dado3 என்னும் பக்கத்தில் காட்டுகிறேன்.
- கொடிமொழிப்பட்டையைத் தவிர்ப்பதற்கு முக்கிய காரணங்கள். தொகு வசதி தருவதில்லை. அதைவிடமுக்கியமானது ஒரு பக்கத்தில் அதிக படங்கள் வரும்போது, பக்கத்தோற்றம் பற்றி இரவி கூறிய கருத்துக்களைக் கருதுங்கள். இந்திய மொழிகளிலே இந்தியக் கொடி, மற்றும் மாநில சின்னம் இடுதலை ஏற்கிறேன். அங்கே ஒரே தொகு போதும். ஆனால், dove, abacus போன்ற தனிச்சொற்களில், பிற இலத்தீனிய சொற்களை சேர்க்கும் போது, அது பக்கத்தோற்றத்தை வெகுவாகக் குறைத்து விடும்.
- மேலும், நீங்கள் அனைவரும் எனக்கு கணினியைப் பரிசாக அளிப்பதற்கு முன் பல கடைகளில், பல ஊர்களில் இருந்து தமிழ்விக்சனரிக்கு பங்களித்த போது கிடைத்த அனுபவங்களையும் வைத்தே கூறுகிறேன். சரியான, தடையில்லாத இணையவேகம் கிடைப்பதில், தமிழகத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. கல்லூரிகளில் பொறியியலைத் தமிழால் கற்பிக்கத் துவங்கியுள்ளனர். அதனை நமக்குச் சாதகமாக மாற்ற வேண்டும். நமக்கு கொடுக்கப்பட்ட சொற்களில் 50,000 சொற்களுக்கு மேல் பொறியியல் குறித்தவையே.
பல நுணக்கமானச் சொற்களை ஆராயும், நீங்கள் கொடிகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது எனக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தருகிறது. இரவி, நற்கீரன், பவுல், நான் ஆகியோர் கொடிகளை முழுமனதுடன் வரவேற்க வில்லை என்பதனை நீங்கள் உற்றுநோக்க வேண்டும். வெளிப்படையாக பேசுவதே என் பாணி. என் தந்தையை ஒத்த நீங்கள், கவனம் செலுத்த வேண்டியவை ஏராளம் உண்டு. ஒலிப்புதவி, உயிரியில் துறையில் உள்ள கலைச்சொற்கள் .. போன்றவற்றில் உங்களது அனுபவமும், அறிவும் சேர்ந்தால் காலத்தையும் கடந்து, உங்களது உழைப்பு நிற்கும் என்பதே என் விருப்பம். அனைத்திலும் தமிழ் விளக்கம் எழுத வேண்டும். ஆங்கிலச் சொற்களை இடுவது நல்லதல்ல என்று கூறும் நீங்கள், ஆங்கில கொடிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாமா? இன்னும் எவ்வளவு ஆண்டுகள் இலத்தீனிய அறிவியல் சொற்களை, தமிழன் படிக்க வேண்டிய கட்டாயம் இருக்கவேண்டும். உங்களைப் போன்றோர் தான், தமிழிலும் கற்க, கற்பிக்க முடியும் என்பதனை நிரூபிக்க முடியும். ஒன்று திரள்வீர். தமிழை ஓங்கச் செய்வீர்.
- இப் பக்கம் வந்து கருத்திட்டமையால் , நான் இன்னும் தொலை நோக்குகிறேன். மிக்க நன்றி. --த*உழவன் 07:55, 18 ஆகஸ்ட் 2010 (UTC)
- இவை என் முடிந்த முடிபுகள் அல்ல.
- வளர்வது முடிவதில்லை அல்லவா?. தமிழ் தழைத்தோங்க, உங்கள் சிந்தனைகள் சிறகடிகட்டும். நன்றி. வணக்கம் --த*உழவன் 07:55, 18 ஆகஸ்ட் 2010 (UTC)
--செல்வா 14:41, 16 ஆகஸ்ட் 2010 (UTC)
1.2) பழ. கந்தசாமி கருத்துகள்
- சொல் பெயர்ச்சொல், வினைச்சொல் முதலியவற்றைக் குறித்தல் நலம். எனினும், த.இ.ப அப்படிப் பகுக்கவில்லை என்றாலும், அவர்கள் கொடுத்த கிட்டத்தட்ட லட்சம் புதியசொற்களுக்கு அவ்வாறு இடவேண்டும். கூடுதல் பணிதான்.
- செல்வாவும் இது குறித்து வழிகாட்டியிருந்தார்.மேலே பாரக்கவும். நன்றி.--த*உழவன் 07:55, 18 ஆகஸ்ட் 2010 (UTC)
- பயன்பாடு, விளக்கம், ஆதாரம் முதலியவற்றை (இப்போது அப்பகுதி வெற்றிடமாக விடப்பட்டாலும்) இடுதல் நலம். அது நமது அட்டிப்படைப் பக்கம் என ஆகும்.
- செல்வாவும், நீங்களும் கூறியது ஏற்புடையது. அதற்குரியவைகளைச் செய்து விட்டுத் தெரிவிக்கிறேன்.--த*உழவன் 07:55, 18 ஆகஸ்ட் 2010 (UTC)
- கொடியுடைய பட்டையே அழகாக உள்ளது போலத் தோன்றுகிறது.பழ.கந்தசாமி 19:02, 16 ஆகஸ்ட் 2010 (UTC)
- அழகாகத் தான் இருக்கிறது. மேலேயே, இதற்கு விரிவாக எனது அனுபவங்களை எடுத்துரைத்துள்ளேன். காணவும். நன்றி.வணக்கம்.--த*உழவன் 07:55, 18 ஆகஸ்ட் 2010 (UTC)
எல்லோருடைய கருத்துகளையும் படித்தேன். எல்லோரும் சேர்ந்து என்ன முடிவெடுத்தாலும் சரியே. ஆனால் மொழிக்கென தனியாக பட்டைஒன்று இடுவது நல்லது என்பது மட்டுமல்லாமல், கொடியுடன் உடைய பட்டையை முறைப்படி கருத்துக் கணிப்பு செய்து தேர்வு செய்தபிறகு தகவலுழவன் ஒருவருக்காக மீண்டும் கருத்துக் கணிப்பு நடத்துகிறோம். பவுல் அவர்களும் முன்னர் ஒப்புதல் தந்திருந்தார். இரவியும் நற்கீரனும் அப்பொழுது பங்கு கொள்ளவில்லை. மீண்டும் கருத்துக் கணிப்பு செய்வது முறையாகாது எனினும், உடன்படுகின்றேன் (வேறு என்ன செய்வதென்று புரியவில்லை, கூட்டாக எடுத்த முடிவை ஏற்கவில்லை எனில்!!). கொடியோடோ, கொடியில்லாமலோ ஒரு மொழிப்பட்டை இருப்பதற்கான காரணங்கள் முன்னமே விளக்கியுள்ளேன். பொருள், விளக்கம், மொழிபெயர்ப்புகள், சான்றுகோள்கள் முதலானவற்றுக்குத் தனி பட்டைகள் இட்டு ஒழுங்குப்படுத்துவது மிகவும் நல்லதென்பது என் கருத்து. தொகு மீசுட்டு உருவாக்குவது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளேன். தகவல் உழவன் கூறும் கொடிமொழிப்பட்டையைத் தவிர்ப்பதற்கு முக்கிய காரணங்கள். தொகு வசதி தருவதில்லை. என்பது சரியில்லை. எப்படி உருவாக்குவது என்று பலமுறை கூறியுள்ளேன். எப்படியாயினும், மிக மிகப் பெரும்பாலான பக்கங்கள் ஒருபக்க விளக்கமாகவே இருக்கும், ஆகவே இடர் ஏதும் இராது. இதே கருத்தை முன்னமும் பல முறை கூறியுள்ளேன். மேலே கூறியுள்ள கருத்துகளுக்குப் பிறரும் கருத்து தெரிவித்தால் நன்றாக இருக்கும். தொகு மீசுட்டு வருவதற்கான முறையை மீண்டும் கீழே காட்டியுள்ளேன்.--செல்வா 01:06, 19 ஆகஸ்ட் 2010 (UTC)
(தமிழிணைய மாநாடு 2010)
தொகு(தமிழிணைய மாநாடு 2010) என்பது பின்னாளில் த.இ.ப இணையத்தளம் ஒருங்குறிக்கு மாற்றப்பட்டால், அப்பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஒரு வார்ப்புருவில் தேவையான மாற்றங்கள் செய்தால் அது இப்பொழுது பதிவேற உள்ள ஒரு இலட்சம் சொல்லிலும் தெரிந்துவிடும். இல்லையெனில், மீண்டும் ஒரு முறை பலமணிநேரம் தானியங்கி இயங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.
இதிலுள்ள கருத்துக்களை எப்பொழுது வேண்டுமானாலும், தோன்றும் கருத்துக்களுக்கு ஏற்ப மாற்ற வகைசெய்யப்பட்டுள்ளது. தற்பொழுது இருக்கும் தகவல்கள் மாதிரிக்காக அமைக்கப்பட்டுள்ளது.
[1] என்ற குறியீடு பின்னாளில், வேறு சொற்கள் இயற்றப்பட்டால் அவற்றினை வேறுபடுத்த உதவுகிறது. இது கொடைச்சொல் என்று எளிதாக அடையாளம் காணலாம். அந்த எண்ணை அழுத்தினால் அதுபற்றிய முழுவிவரம் தெரியும். தெரியும் விவரங்களையும் மேலதிக தகவல் மாற்றங்களாகச் சேர்க்கலாம். எதிர்காலத்தில் பிற கொடைகள் கொடுக்கப்பட்டால் அவற்றினையும் இது போலவே 2, 3, .. என எண்ணிட்டு வேறுபடுத்த முடியும். --த*உழவன் 05:13, 31 ஆகஸ்ட் 2010 (UTC)
- சதுர அல்லது பகர அடைப்புக்குறிகளுக்குள் ([1] என்பது போல) இருந்தால் அடக்கமாக இருக்கும். கோண அடைப்புக்குறிகள் இருபுறமும் நீட்டிக்கொண்டு இருப்பது அழகாக இருப்பதாக என் கண்களுக்குத் தெரியவில்லை. (), {} ஆகியவும் பொருத்தமாக இருக்கலாம். அதாவது துருத்திக்கொண்டிராமல் இருந்தால் நன்றாக் இருக்கும். சிறுசெய்திதான்- small things make it beautiful, but beuaty is no small thing என்பார்களே அது போல. --செல்வா 15:09, 31 ஆகஸ்ட் 2010 (UTC)
உங்களின் கருத்துபடி மாற்றி பார்த்தேன். முன்பு விட எடுப்பாக இருக்கிறது. நமது பக்கவாட்டுத் தொகு வசதியில் கூட அத்தகைய அடைப்புக்குறி இருப்பதைக் கண்டறியாமல் விட்டு விட்டேன். ஒரு சீரான குறியீடு இப்பொழுது நன்கு அமைந்தது எனக்கு நிறைவைத் தருகிறது.
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார். ஞான தங்கமே!
என்ற பாடல் நினைவுக்கு வந்தது. இப்ப கோணஅடைப்புக் <> குறியீடுகளைக் கண்டால், எனக்கு இப்பொழுது சிரிப்புதான் வருகிறது. எனது செயல்களைத் தொடர்ந்து கண்டு, என்னை மேம்படுத்தி வருவதற்கு மிக்க நன்றி.--த*உழவன் 17:00, 31 ஆகஸ்ட் 2010 (UTC)
படங்களை இட வார்ப்புரு வேண்டாம்
தொகுஇந்த பக்கத்தில் உள்ளது போல படங்களை இட வார்ப்புருக்கள் வேண்டாம். இப்பக்கத்தைத் தொகு என்று சொடுக்கி, படம் எவ்வாறு இடப்பட்டுள்ளது என்று காணவும். {{அடுத்தடுத்து2படங்கள்|File:Dado (PSF).png|File:TajDado.jpg|130px}} என்று உள்ளது. இவை திருத்துவதற்குக் குழப்பம் ஏற்படுத்தும். படங்கள் வெவ்வேறு படவணுக்களில் (பிக்ஃசல் அளவில்) இருக்க வேண்டிய தேவை சில நேரங்களில் இருக்கும். கோடுள்ள படங்கள் எளிதாக இருக்கலாம், ஒளிப்படம் போன்றவை, படத்துக்கு ஏற்றார்போல மாறுபடும். மேலும் ஒவ்வொரு படத்துக்கும் உண்டான பட விளக்கங்கள் வேறாக இருக்கும். இவற்றை இப்படி சொருகு வார்ப்புருவில் (nested template) இடுவது சரியாக அமையாது, திருத்துவதும் குழப்பம் தரும். இங்குள்ள படங்களில் தலைப்பைப் பார்க்க வார்ப்புருவுக்குப் போக வேண்டும்!!--செல்வா 05:05, 5 செப்டெம்பர் 2010 (UTC)