பேச்சு:derivation

  • உச்சரிப்பு உதவி என்பத விட பலுக்கல் உதவி எனத் தருவது நல்லதென்று நினைக்கின்றேன். மேலும் இப்பகுதி ஏற்கனவே உள்ள பலுக்கல் என்பதன் கீழ் அடங்குவது பொருந்தும்.
  • ஒலிப்பைத் தருகையிலே, தமிழ் எழுத்துகளால் தருதல் பயனுடையது. ஆங்கிலத்திலே di என்று கொடுத்தால் அதனை டை' என்று ஒலிக்க வேண்டுமா, டி' என்று ஒலிக்க வேண்டுமா என்னும் குழப்பம் வரும்.ஆங்கிலச் சொற்களில் அழுத்தம் தரும் பகுதிகளையும் தருதல் முக்கியம். பழ. கந்தசாமி செய்வது சரியான முறை. இங்கே டி'ரைவேச^ன் என்பதை வெபுசிட்டர்-மெர்ரியம் அகராதி தரும் முறை -der·i·va·tion Pronunciation: \ˌder-ə-ˈvā-shən, ˌde-rə-\ இங்கே வே என்னும் பகுதி அழுத்தி ஒலிக்க வேண்டும் என்றும் முதல் பகுதி டெ'ர் என்று ரகரம் சேர்த்தியோ டெ என்று ரகரம் சேராமலோ பலுக்கலாம் என்று குறிக்கின்றார்கள்.
  • நாம் இதனைத் தமிழில் \.டெ3ர்-அ-வேச^ன், .டெ3-ர-வே-ச^ன்\ என்றோ தரலாம். பல இடங்களில் பயன்படும் schwa எனப்படும் குற்றியலகரத்தைக் குறிக்க எளிதாக (தமிழ்) அகரத்தின் கீழ் ஒரு குறி இடலாம். உயிர்மெய்யாக இருப்பினும் செய்தல் கூடும்.

--செல்வா 13:37, 9 மார்ச் 2010 (UTC)

  • உங்கள் கருத்துகளுக்கு நன்றி. இரண்டு வருடங்களுக்கு முன் இங்கு வந்த போது நான் ஈடுபட்டப் பதிவுகளில் ஒன்று இது. இதுபோல இப்பொழுது செய்வதில்லை. எனக்கு ஆங்கிலப் பயன்பாடு என்பது அதிகம் தெரியாது. அதனால் நிறையத் தவறுகள் செய்திருக்கிறேன். அவற்றை கவனித்து நீக்க வேண்டும். சுந்தர் அவர்கள் தான் தக்கசமயத்தில் என்னைத் தமிழ் சொற்பக்கம் திருப்பினார். தெரன்சு' கூறிய படி, தயக்கமில்லாமல் செய்கிறேன். உங்களைப் போன்றோரால் தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது, அப்பிழைகளை நீக்கி விடுகிறேன். த*உழவன் 13:49, 9 மார்ச் 2010 (UTC)

பொருள் தொகு

மூலாரம்பம் என்னும் பொருள் சரியானதாகப் படவில்லை. எடுத்துக்காட்டாகத் தந்துள்ள இட்லி என்ற உணவுப்பொருளின் மூலாரம்பம் அரிசி ஆகும். என்பதும் சரியாக இல்லை என்பது என் கருத்து. derived from என்பது derivation என்பதும் வேறானது. மூலாரம்பம் என்னும் சொற்பொருள் சரியல்ல என்பது என் கருத்து. --செல்வா 14:13, 9 மார்ச் 2010 (UTC)

  • என்னுடையத் தவறுகளோ அல்லது பிழைகளோ எங்கு காணினும், நீங்கள் நீக்கிட வேண்டுகிறேன். முடிந்தால் நீக்கும் போது, உரையாடற் பக்கத்தில் குறிப்பிட்டால் புரிந்து கொள்வேன். நேரப் பற்றாக்குறையால், குறிப்பிடாவிட்டாலும் மகிழ்ச்சியே. அடிப்படையான சொற்கள் (அல்லது) அடிக்கடிப் பயனாகும் சொற்கள், பல இங்கில்லை என்பது வருத்தமாகத்தான் இருக்கிறதுத*உழவன் 14:34, 9 மார்ச் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:derivation&oldid=485474" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "derivation" page.