பேச்சு:electric grid

மின் பகிரமைப்பு, மின் பகிர்வலை என்பனவும் பொருந்தும். நீர்க்கால் என்பதுபோல மின்கால் என்றும் சொல்லலாம், ஆனால் electric leg என்னும் அளவில்தான் பொது அறிவு உள்ளது, எனவே குழப்பம் உண்டாக்கக்கூடும் (அறிந்தேற்கும் பக்குவமும் இல்லை). மின்னாற்றுக்கால் என்பது இன்னும் பொருள் பொதிந்த சொல். ஆற்றுப்படுத்துதல் என்றால் வழிப்படுத்துதல் (ஆறு=வழி). திருமுருகாற்றுப்படை என்றால் முருகனின் அருளுக்கு வழிவகுத்துக் காட்டும் நூல். ஆற்றுப்படை என்பது ஒரு வகையான மரபான வழிகாட்டுநூல். நல்ல புரவலன், ஈகையாளன் ஒருவன் இருந்தால், பாடி பரிசில் பெற்ற பாவலன் ஒருவன் (அல்ல்லது ஒருத்தி)மற்ற பாவலர்களுக்கு வழிகாட்ட் (இங்கே இன்ன நலம் கொண்ட நல்லுள்ளமுடையவன் நல்லறிவாளன் உள்ளான்; சென்று உங்கள் திறமையை காட்டுங்கள்; போற்றும் நல்லுள்ளம் கொண்டவன் உள்ளான் என்று ஆற்றுப்படுத்து [= வழிப்படுத்தும்]; இவ்வகையான நூலுக்கு ஆற்றுப்படை என்று பெயர்). அந்த நோக்கில் மின்னாற்றுக்கால் என்பது மின் ஆற்றலை ஆற்றுபடுத்தி பல இடங்களுக்கு எடுத்துச்செல்லும் கால் (நீர்க்கால் போல கொடிவழி, கிளைவ்ழி). --செல்வா 17:30, 7 ஜூன் 2010 (UTC)

  • மின் பகிர்வலை, மின்னாற்றுக்கால் இரண்டும் நன்றாக உள்ளன. மின் பகிர்வலை என்பது நேரடி மொழிபயர்ப்பு போல நேர்த்தியாகவும் உள்ளது. பழ.கந்தசாமி 21:41, 7 ஜூன் 2010 (UTC)
நன்றி, பழ.க. தோன்றும் சில சொற்களைப் பதிவு செய்து வைத்தால், இதற்காக இல்லாவிட்டாலும் வேறு எதற்காகாவாவது உதவும். பிறருக்கும் வேறு வழிகளிலும் சொற்தூண்டல் ஏற்படலாம். நன்றி.--செல்வா 23:38, 7 ஜூன் 2010 (UTC)

Start a discussion about electric grid

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:electric_grid&oldid=660422" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "electric grid" page.