பேச்சு:facebook
பேஸ்புக் என்று வரும் இடங்களில் தயவு செய்து முகநூல் என்றோ அல்லது வேறேதும் தமிழாக்கமோ தயவு செய்து செய்ய வேண்டாம். பேஸ்புக் இணையமே தங்களது பெயரை மொழிபெயர்ப்பு செய்ய வேண்டாம் என்று கூறுகிறது. சமீப காலமாக நான் பல இடங்களில் இந்த "முகநூல்" சொல் குறிப்பிடப் படுவதை பார்க்கிறேன். - Vatsan34 08:00, 30 அக்டோபர் 2011 (UTC)
facebook - Facebook வேறுபாடு
தொகுஆங்கிலத்த்தில் facebook என்பதற்கும் Facebook என்பதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிய பின்வரும் இரு பக்கங்களையும் பார்க்கவும்.
1) https://en.wiktionary.org/wiki/facebook
2) https://en.wiktionary.org/wiki/Facebook
facebook தலைப்பிலான இந்த விக்சனரிப் பக்கம் முற்றாகத் திருத்தப்படவேண்டும்.
facebook ஆனது
i) நபர்களின் பெயர்களையும் படங்களையும் கொண்டுள்ள குறிப்புதவி நூல் அல்லது தரவுத்திரட்டியம்
ii) பல்கலைக்கழங்களிலும் கல்லூரிகளிலும் புதிய மாணாக்கர்கள் சக மாணவர்களை அடையாளம் காண ஏதுவாக மாணவர்களுக்கு வழங்கப்படும் படங்களுடன் கூடிய அறிமுகப்பதிப்பு
காலாம்காலமாக இருந்துவந்த ஒரு பொதுப் பெயரை ஒரு சமூக ஊடாடல் சேவை தமக்கு Facebook என வணிகச் சின்னப் பெயராக சூட்டிக் கொண்டுமையால் facebook என்னும் பொதுப் பெயருக்கான இயல்புப் பயன்பாடு வழக்கமோ அகரமுதலி பொருண்மையோ ஒழிந்து போய்விடவில்லை. ! --கா. சேது (பேச்சு) 06:25, 13 மே 2019 (UTC)