பகுவியல் பொருத்தமற்றது

Fractal என்னும் சொல்லுக்கு பகுவல் என கலைச்சொல் உளது. http://ta.wiktionary.org/s/1o6j . அதன் பன்மையான Fractals சொல்லுக்கு "பகுவியல்" எனவாறு தமிழாக்கப்படுவது பொருத்தமற்றது எனக் கருதுகிறேன்.

சொலொன்றிக்கு "இயல்" எனப் பின்னொட்டுவது அச்சொல் சுட்டும் பொருளுக்கு ஓர் ஆய்வு/கற்கை துறை என்னும் பொருள் காட்டுவதற்குத்தானே?

"பகுவியல்" என்னும் சொல்லை தேடுபொறி கொண்டு தேடின் பெரும்பாலும் விக்கிப்பீடியாவிலும் வேற்று அகரமுதலிகளிலும் Mathematical Analysis எனப்படுவதற்கே அச் சொல் குறிக்கப்படுவது புலனாகிறது.

பகுவல் கிளவியின் பன்மைக்கு பகுவல்கள் எனலாம் தானே?. பகுவல் பற்றிய ஆய்வு / கற்கை எனில் பகுவலியல் எனலாம்.

Fractal Geometry எனப்படுவதை பகுவல் வடிவியல் எனலாம்.

--கா. சேது (பேச்சு) 02:20, 15 நவம்பர் 2014 (UTC)Reply

பகுவலின் பன்மைக்கு பகுவல்கள் என்பதே பொருந்தும், கா. சேது. பகுவலியல், பகுவல் வடிவியில் என்பவற்றை நீங்கள் குறிப்பிட்டவாறு முறையே பகுவல் பற்றிய கற்கையைக்குறிக்கவும், பகுவலாக அமைந்த வடிவங்களைப்பற்றிய கல்வித்துறையைக்குறிக்கவும் பயன்படுத்தலாம். -- Sundar (பேச்சு) 05:47, 15 நவம்பர் 2014 (UTC)Reply
நன்றி Sundar . இந்தப் பக்கம் வேறு பக்கமாக உள்ள பகுவல் சொல்லின் பன்மை பற்றியது மட்டுமாதலால் இரண்டு பக்கங்கள்ளையும் ஒன்றிணைத்து பக்கவழி நெறிப்படுத்தப்பட வேண்டுமல்லவா ? --கா. சேது (பேச்சு) 05:59, 15 நவம்பர் 2014 (UTC)Reply
ஆம், கா. சேது. -- Sundar (பேச்சு) 06:00, 15 நவம்பர் 2014 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:fractals&oldid=1262435" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "fractals" page.