பேச்சு:genome
மரபகராதி என்னும் சொல் சரியானதல்ல. இது அகரவரிசை அல்ல. மரபுத்தொகை என்பது சரியான பொருள். தமிழ் இணையப் பல்கலைக்கழகம் மரபுத்தொகுதி என்று குறிக்கின்றது. தொகுதி என்பதை நாம் ஒருங்கியம் (system) என்பதற்கும் நான் பயன்படுத்தினாலும் (எ.கா. செரிமானத் தொகுதி, நரம்புத்தொகுதி, digestive system, nervous system), மரபணுக்களைச் சேர்ந்தெண்ணுவதால் இங்கும் இத்தொகுப்புக்கு (தொகைக்கு) தொகுதி என்பதும் பொருந்தும். proteome,vacuome (1926 முதல்), plastidome (1926 முதல்), cytome, metabolome, transcriptome என்று பல சொற்கள் உள்ளன. இவற்றை இங்கே பார்க்கலாம்! நாம் தேர்ந்து கொள்ளும் பின்னொட்டு அல்லது தனிச்சொல் பலவற்றுக்கும் பொருந்துமாறு இருந்தால் சிறக்கும். ஆங்கிலத்திலும் இந்தெ பின்னொட்டு -ome சில இடங்களில் குழப்பம் உண்டாக்கும். குரோமோசோம், ரைசோமெ (rhizome), டிரைக்கோம் (trichome) முதலியன தொகை-தொகுதி அல்ல. குரோமோசோம் என்பதில் உள்ள ஃசோம் (-some) என்பது கிரேக்கச் சொல் ஃசோமா (σωμα உடலம், "body") என்னும் சொல்லில் இருந்து வந்தது. நாம் தமிழில் தொகை, தொகுதி, முழுதி என்னும் சொற்களின் ஒன்றை ஆளலாம். மரபணு தொகுதி, மரபணு முழுதி, மரபணுத் தொகை என்று கூறலாம். proteome என்பதை இயங்கும் புரதத்தொகுதி, புரதமுழுதி, புரதத்தொகை என்று கூறலாம். இபப்டியே பிறவும். தனிச்சொல்லாக இருந்தால் தவறில்லை. --செல்வா 19:46, 27 மே 2011 (UTC)
- உடன்படுகிறேன். மரபணு தொகுதி /மரபணு தொகை பொருத்தமானதாக உள்ளது.--சோடாபாட்டில்உரையாடுக 03:45, 28 மே 2011 (UTC)
- பேச்சு:மனித மரபகராதித் திட்டம்] பார்க்க. மரபணுத்தொகை என்பது பொருத்தமாக இருக்கும் என்பது எனது கருத்து.--கலை 10:05, 1 சூன் 2011 (UTC)
- அதனுள்ள அனைத்தும், ஒரு கோர்வையாக உள்ளது.அதாவது, ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில், கணக்குப்படி உள்ளது. கோவை எனப்படும் பொழுது, அதன் பொருளும் சேருகிறது. தொகுதி, தொகை அனைத்தும் மாற்றி அமைக்கலாம் என்றே உணருகிறேன். மரபணுக் கோவை என்பதே சுருக்கமாகவும், ஒழுங்கையும், அதன் ஆழ்ந்த பொருளையும் குறிப்பாதாகக் கருதுகிறேன். {{கை|13:10, 1 சூன் 2011 (UTC)} -பயனர்:தகவலுழவன்
மரபணுத்தொகை எனலாம் என்பதே எனது கருத்தும், தகவலுழவன் பரிந்துரைத்த மரபணுக் கோவை என்பது sequencing என்பதற்குப் பொருத்தமாக உள்ளது போலத் தெரிகிறது. "a genome sequence" என்று வரும் போது அதற்கு மரபணுக் கோவை எனலாம் என்று கருதுகிறேன்.--சி. செந்தி 19:44, 7 சூன் 2011 (UTC)
- தெளிவாக அறிந்தேன். நன்றி.--07:39, 8 சூன் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..