பேச்சு:in vivo multiplication

இந்த களப்பெருக்கம் என்ற சொல் சரியா? தவறெனத் தோன்றுகின்றது. எனக்கும் சரியான சொல்லைப் பரிந்துரைக்க முடியவில்லை. 'உயிரியுள்ளான' என்று கூறலாமா?--கலை 19:36, 24 நவம்பர் 2010 (UTC)Reply

உயிரியுள்ளான எனவும் சொல்லலாம், உயிரியக் களப்பெருக்கம் என்றும் சொல்லலாம். உயிருடலியப் பெருக்கம் என்றும் சொல்லலாம். உயிருடல், உயிருடலம் என்பன உயிருள்ள உடல் என்பதைக் குறிக்கும். உடல் ("உடையது") என்றாலே உயிருடையது என்று கொண்டால் உடலியப் பெருக்கம் என்றும் சொல்லலாம். முன்னொட்டு இல்லாமல் களப்பெருக்கம் என்பது இடம்சார்ந்து மட்டுமே பொருள் தரக்கூடும். --செல்வா 20:51, 24 நவம்பர் 2010 (UTC)Reply

களநிலைப் பெருக்கம்? தொகு

  • கலை, செல்வா, in vitro என்பதற்குத் தமிழில் "சோதனைக் குழாய்" என்று இருந்த போதிலும் (எ.டு.: in vitro fertilization = test tube baby = சோதனைக் குழாய்க் குழந்தை) "ஆய்வக" என்னும் சொல்லைக் கையாண்டுள்ளீர்கள். அதுவே சரி என்று நினைக்கின்றேன். In vitroவுக்கு மாறாக in vivo பயன்படுத்தப்படுவதால் அதற்கு "களம்" என்னும் சொல் பொருத்தமானதே. Field work, field study என்று வருவதுபோல, கள வேலை, கள ஆய்வு என்று கூறுகிறோம். அதே முறையைப் பின்பற்றி "களப்பெருக்கம்" (in vivo multiplication) என்று சொன்னால் "களத்தைப் பெருக்குதல்" என்று பொருளாகிவிடக் கூடும். எனவே களநிலைப் பெருக்கம் என்றால் பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து.

இவ்வாறு மொழிபெயர்க்கும்போது "உயிர்" என்னும் சொல்லைத் தவிர்க்கலாம். ஏனென்றால், ஆய்வுக் கூடத்திலும் சரி, உடலின் உள் என்றாலும் சரி, இரு நிலைகளிலும் "உயிர்"தான் பெருக்கம் அடைகிறது. எனவே, வேறுபாடு "உயிரில்" இல்லை, மாறாக, "எங்கே" பெருக்கம் நடைபெறுகிறது என்பதில் மட்டுமே வேறுபாடு உள்ளது. வணக்கம்!--பவுல்-Paul 16:15, 25 நவம்பர் 2010 (UTC)Reply

பவுல், வணக்கம். in vivo என்பது உயிரியங்கும் ஓர் உடலில் ஏதொன்றையும் செய்து மெய்ப்புப் பார்ப்பது போன்றவற்றுக்குப் பயன்படுத்துவதால் கூறினேன். உயிரிய, உயிருடலிய என்பதன் பொருள் அப்படியான ஒரு சூழலில் நடைபெறும் ஒரு செயற்பாடு, செய்முறைப்பாடு என்றுகூறவே மொழிந்தேன். உயிரைப் பெருக்குவதால் கூறவில்லை ("உயிர்"தான் பெருக்கம் என்பதால் அல்ல); இந்நிகழ்வு வேறு ஒன்றை மெய்ப்புப் பார்ப்பதாகவும் அமையலாம். அதாவது உயிருடலிய சூழலில் ஒரு வினை (உயிர் பெருக்குவது அல்லாமல்) எவ்வாறு தொழிற்படுகின்றது என்று மெய்ப்புப் பார்க்கும் செயலாகவும் இருக்கலாம். இன் விவோ என்பது உயிரிய, உயிருடலியச் சூழலில் என்பதைக் குறிக்க எழுந்தது. நீங்கள் கூறியவாறு களத்தைப் பெருக்குதல் என்னும் பொருள் வரக்கூடும் என்றாலும், களத்தில் என்னும் பொருளும் வரும் என்று நினைக்கின்றேன். மேலும் சிந்திப்போம். --செல்வா 19:10, 25 நவம்பர் 2010 (UTC)Reply
உண்மையில் In vivo, ஒரு உயிரின் உடலினுள்ளே நிகழ்வதையும், In vitro என்பது உயிரின் உடலிற்கு வெளியே சோதனைக் குழாய்களில் நிகழ்வதையும் குறிப்பதனாலேயே அவ்வாறு கேட்டேன். அதாவது உயிரின் பெருக்கம் (multiplication), உயிரின் உள்ளேயா (in vivo), உயிரின் வெளியேயா (in vitro) என்பதில்தான் வேறுபாடு. Filed work or field study என்பது இங்கே பொருந்து வராதென நினைக்கிறேன். எனவே கள என்ற சொல்லின் பயன்பாடு தேவையில்லை என்றே தோன்றுகின்றது. ஒரு உயிரின் உள்ளாக நிகழும் பெருக்கம் என்ற கருத்து வருமாறு பெயரிட்டால் நல்லது.--கலை 01:10, 28 நவம்பர் 2010 (UTC)Reply
தகவலுழவன் கொடுத்திருக்கும் உயிர்உட்பெருக்கம், அல்லது செல்வா கொடுத்திருக்கும் உயிருடலியப் பெருக்கம் ஆகிய இரண்டில் ஒன்றை தெரிவு செய்யலாம் என கருதுகின்றேன். பவுலின் கருத்தையும் கேட்டுவிட்டு முடிவெடுங்கள்.--கலை 01:10, 28 நவம்பர் 2010 (UTC)Reply
  • இதுவரை நடந்த உரையாடலின் அடிப்படையில் "உயிர் + உடல் + (உள்) + பெருக்கம்" என்பவற்றை இணைக்க வேண்டும். செல்வா "இயம்" என்னும் சொல்லை இடையே தருகிறார். அதற்கு "உள்நிகழ்கின்ற" என்று பொருள்கொடுத்தால், உயிருடலியப் பெருக்கம் பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன். இவ்வாறு புரிந்துகொண்டால், "உயிருடலிய" (in vivo)என்னும் சொல்லை imaging, fertilization, gene therapy, generation, exposure, expression technique, diagnostics போன்றவற்றோடு இணைப்பதும் எளிதாக இருக்கும். --பவுல்-Paul 05:11, 28 நவம்பர் 2010 (UTC)Reply
  • உயிருடலியப் பெருக்கம் என்ற இந்த ஆழ்ந்த தொடர் பொருளுடைய சொல்லைப் பின்பற்றக் கருதுகிறேன்.வணக்கம்--த*உழவன் 05:28, 28 நவம்பர் 2010 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:in_vivo_multiplication&oldid=899082" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "in vivo multiplication" page.