மாயிழை என்ற சொல் ஏற்கனவே திருநாவுக்கரசரால் "பார்வதி" என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, நான்காம் திருமுறையில் திருப்புகலூர் பதிகத்தில் இவ்வாறு வருகிறது :

கறுத்தார் மணிகண்டங் கால்விர லூன்றி
இறுத்தா ரிலங்கையர் கோன்முடி பத்தும்
அறுத்தார் புலனைந்து மாயிழை பாகம்
பொறுத்தார் புகலூர்ப் புரிசடை யாரே.         

எனவே மாயிழை என்ற சொல் லெஸ்பியன்பகளைக் குறிக்க பொருத்தமற்றதென்றே தோன்றுகிறது. மு.மயூரன் (பேச்சு) 19:03, 24 பெப்ரவரி 2020 (UTC)

@மு.மயூரன்: கட்டுரையில் இருந்து அச்சொல்லை நீக்கியிருக்கிறேன்.--Kanags (பேச்சு) 09:20, 25 பெப்ரவரி 2020 (UTC)
அந்த பாடலை புலனைந்தும் ஆயிழை என்றே படிக்கவேண்டும். மாயிழை என்றச் சொல் தமிழில் முன்பு இல்லை. --~~
நன்றி மு.மயூரன் (பேச்சு) 06:41, 2 மார்ச் 2020 (UTC)


இந்தப் பக்கத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள உசாத்துணையும் பொருத்தமான ஒன்றாகப் படவில்லை. மனப்பிறழ்வு, உடற்பிறழ்வு போன்ற பாரபட்சம் காட்டும் கருத்துக்களை ஓர் அகரமுதலிக்கான உசாத்துணையாகக் கொள்ளவதைத் தவிர்க்கலாம். மு.மயூரன் (பேச்சு) 06:44, 2 மார்ச் 2020 (UTC)

Start a discussion about lesbian

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:lesbian&oldid=1901208" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "lesbian" page.