பேச்சு:primary amines

  • இப்பக்கத்தின் தமிழாக்கம் தவறு. தமிழிணையப் பல்கலைக்கழக இணைப்பிலேயே தவறு உள்ளது. தானியங்கி பதிவேற்றம் என்பதால், இத்தவறு வந்திருக்கிறது. இதற்கு ஏற்ற தமிழ் பெயர் என்ன?--(த*உழவன் 14:38, 11 ஜூன் 2010 (UTC))
தவறு அல்ல!! குழப்பம் தரும் தொடரமைப்பு. முதல் அமீன் என்று கூறவந்தவர்கள் முதலமீன் (முதலை மீன் என்பது போன்ற தோற்றம் அளிக்கும் சொல்லாகிவிட்டது). முதல் அமீன் என்று பிரித்து எழுதலாம். அல்லது முதல்நிலை அமீன் எனலாம். அமீன்கள், நைதரசன் அடிப்படையிலான அம்மோனியாவில் இருந்து, அதிலுள்ள மூன்று ஐதரசன் அணுக்களில் ஓர் அணுவை நீக்கிவிட்டு, அங்கு அதற்கு ஈடாக (மாற்றீடாக) ஒற்றைப் பிணைப்பு கொள்ளும் கரிம-ஐதரச அடிக்கூறு (radical) ஒன்று இணைந்திருக்கும் ஒரு வகையான கரிம வேதியியல் சேர்மம். 1863 முதல் ஆங்கிலத்தில் amine என்னும் சொல் வழக்கில் உள்ளது. அமோனியாவில் உள்ள இரண்டு ஐதரச அணுக்களை கரிம-ஐதரச அடிக்கூறு மாற்றீடாக கொண்டிருக்கும் என்றால் அதனை இரண்டாம்நிலை அமீன் என்பர். அமோனியாவில் உள்ள மூன்று ஐதரச அணுக்களையும் கரிம-ஐதரச அடிக்கூறுகள் மாற்றீடாகக் கொண்டால் மூன்றாம்நிலை அமீன். அம்மோனியா அல்லது அமோனியா என்பதை நாம் தமிழில் அப்படியே ஆள்வது போல இதனையும் அமீன் என்று அப்படியே ஆளலாம். தமிழில் பெயர் உருவாக்கிச் சூட்டலாம் ஆனால் தேவை இல்லை.--செல்வா 17:00, 11 ஜூன் 2010 (UTC)
  • முதல் அமீன்--> முதலைமீனாக்கி, அதனை மீன்கள் பகுப்பில் இணைத்திருந்ததை எண்ணி மகிழ்ந்தேன். வேதியியல் கொள்கையினையும் கசடற கற்பித்தமைக்கு தலை வணங்குகிறேன். என் உளமார்ந்த நன்றி.(த*உழவன் 23:28, 11 ஜூன் 2010 (UTC))
மீன் பகுப்பில் இருந்ததா, அதனைப் பார்க்கவில்லையே! :) விளக்கம் புரிந்தது கண்டு மகிழ்ச்சி.--செல்வா 01:01, 12 ஜூன் 2010 (UTC)

Start a discussion about primary amines

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:primary_amines&oldid=666371" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "primary amines" page.