பேச்சு:video
காணொளியா காணொலியா ?
http://ta.wiktionary.org/wiki/நிகழ்படம் , http://ta.wiktionary.org/wiki/ஒளிதம் , http://ta.wiktionary.org/wiki/காணொலி ஆகிய பக்கங்களில் காணொலி. இப்பக்கத்தில் காணொளி கா. சேது 05:57, 29 மே 2010 (UTC)
காணொளி என்பது பொருத்தம் இல்லாத சொல். ஒளியைக் காண்பதல்லாது வேறு என்ன செய்வது? அகச்சிவப்பு, புற ஊதாக் கதிர்களைக் கருத்தில் கொண்டால் காணொளி என்பது காணக்கூடிய அலைநீளங்களில் உள்ள ஒளி visible light என்று பொருள்படுமே அல்லாது அசையும் நிக்ழபடம் என்பதைக் குறிக்காது. காணொலி என்றால் ஒலியைக் கண்ணால் காணும் முறை என்பதாகப் பொருள்படும். காணக்கூடிய வடிவில் மாற்றம் பெற்ற ஒலியலைகள் எனப் பொருள்படும். எனவே இவை சரியான வழக்குகள் இல்லை. நிகழ்படம் (அதாவது நிகழ்ச்சியை அசையும் படமாகப் பதிவு செய்து காணல்) என்பது பொருத்தமான சொற்களில் ஒன்று.--செல்வா 05:51, 29 மே 2010 (UTC)
விளக்கங்களுக்கு நன்றி செல்வா. ஒளிதம் பற்றி தங்களுடைய கருத்தையும் எழுதிவிடுங்க கா. சேது 06:00, 29 மே 2010 (UTC)
செல்வா - சரி சரி, ஏற்கனவே http://ta.wiktionary.org/பேச்சு:ஒளிதம் இல் அதைப்பற்றி தங்கள் கருத்து உள்ளது. நன்றி. கா. சேது 06:11, 29 மே 2010 (UTC)
- காணொளி என்பது வினைச்சொல் - எனவே காண்பொளி என்று வர வேண்டும் என ஒரு அன்பர் கருத்து கூறியுள்ளார். பரிசீலிக்கவும்.--பரிதிமதி (பேச்சு) 08:24, 6 ஏப்ரல் 2012 (UTC)
எது சரியென்பது முடிவாகிவிட்டதா?--Princenrsama (பேச்சு) 19:17, 26 மே 2016 (UTC)